தூக்கத்தை குறைத்தால், ஆயுள் குறைய வாய்ப்பு: ஆய்வில் தகவல்

lack-of-sleep

சராசரியாக ஒருவர் குறைந்தது 8 மணி நேரம் தூங்குவது அவசியமாகும். 7 முதல் 8 மணி நேரம் தூங்கவில்லை என்றால் பலவித பாதிப்புகள் ஏற்படுவதுடன், ஆயுள் குறையும் என்று இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த ஆய்வில், 8 மணி நேரத்திற்கும் குறைவாக உறங்குகிறார்களோ அவர்களின் ஆயுள் குறையும் என்றும், மிக இளம் வயதிலேயே இவர்களை மரணம் நெருங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.