இன்று வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்

special voters camp

கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில், திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. இந்த பட்டியல், சென்னை மாநகராட்சி அலுவலகங்களிலும், மாவட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது என்றும் கூறினார்.