பிரதமர் மோடி தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரம்

நேற்று தமிழகத்திற்கு மோடி வருகிறார் என்ற அறிவிப்பு வந்தவுடனேயே டிவிட்டரில் GO BACK MODI என்ற வாசகம் பிரபலமாகி வந்தது, மக்களவை தேர்தலில் பாஜக போட்டியிடும் தொகுதியில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் மோடியே நேரடியாக பிரச்சார களத்தில் குதித்துள்ளார். அந்த வகையில் நேற்று திருப்பூரில் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார், மேலும் திருப்பூரில் நடைபெற்ற தமிழக அரசின் விழாவிலும் அவர் கலந்து கொண்டார். அப்போது பல்வேறு திட்டங்களை காணொளி மூலம் அவர் திறந்து வைத்தார், பாஜக பொதுகூட்டதில் பேசிய மோடி காமராஜர் ஆசை பட்ட ஆட்சிதான் தற்போது நடைபெறுகிறது என்று கூறிப்பிட்டார்

தமிழக அரசியலில் பிரதமர் மோடியின் வருகை எதேனும் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு வரலாறே பதில் சொல்லும் பிரதமர் மோடி பல முறை தமிழகம் வந்திருந்தாலும் வாக்கு வங்கியில் எந்த மாற்றமும் இல்லை என்பதே நிதர்சனம். மக்களவை தேர்தலை நோக்கி நாம் பயணிக்கும் இந்த தருணத்தில் மோடியின் வருகை முக்கியதுவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது, கூட்டணி குறித்து ஏதேனும் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கபட்டது, ஆனால் அது தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாக வில்லை தமிழக மக்களின் வாழ்க்கையை சுலபமாக்கும் வகையில் பாஜக அரசு முயற்சித்து வருவதாகவும், தொழிலாளர்கள் நலம் சார்ந்த திட்டங்களை மட்டுமே எங்கள் அரசு நடைமுறைபடுத்தி வருகிறது, மேலும் நாட்டு மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயல்படுகிறோம் பாதுகாப்பு தளவாடங்களில் நம் நாடு தன்னிறைவு அடைய இரண்டு பாதுகாப்பு பூங்கா அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அதில் ஒன்று தமிழகத்தில் தான் அமையவுள்ளது என்றார் மோடி. சகர்மாலா திட்டத்தின் மூலம் துறைமுகங்கள் பலப்படுத்தப்படும் எனவும், ஊழல் மற்றும் தவறான செயல்ளை எங்கள் அரசு தடுத்து நிறுத்தும் என்றார் பிரதமர் மோடி. குறிப்பாக சாலை மேம்பாடுகளில் அரசு கவனம் செலுத்தும் எனவும் உறுதியளித்தார்

காங்கிரஸை கடுமையாக சாடிய பிரதமர் கடல் முதல் வானம் வரை அனைத்திலும் ஊழல் செய்துள்ளது காங்கிரஸ். நாட்டின் பாதுகாப்பு குறித்து அக்கறை காட்டாமல் தற்போதிய ராணுவத்தை சிறுமைபடுத்தும் வகையிலும் பேசிவருகிறது காங்கிரஸ் கட்சி. பிரச்சாரம் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியினரின் கேலி பேச்சுகளை கேட்க மக்கள் தயாராக இல்லை என்று காங்கிரஸை விமர்சித்தார், மேலும் எல்லா தவறுகளையும் செய்துவிட்டு இப்போது பேக்கேஜ் முறையில் ஒரு குடும்பம் ஜாமின் வாங்கி வருகிறது என மறைமுகமாக பா.சிதம்பரத்தை விமர்சித்தார். பிரதமரின் தமிழகம் வருகை பாஜகவின் வாக்கு வங்கியில் எந்த அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை தேர்தல் முடிவுகள் தான் தெரியப்படுத்தும்.

அடுத்தக்கட்டமாக பிப்ரவரி 19 அன்று பிரதமர் பிரச்சாரத்திற்க்காக கன்னியாக்குமரி செல்கிறார் என்பது குறிப்பிட்த்தக்கது.