Tamil Nadu Breaking News: மாநகராட்சி எண்ணிக்கையில் வஞ்சிக்கப்படுகிறதா வட தமிழகம்?

Hosur and Nagercoil

Tamil Nadu Municipal Corporations: தமிழகத்தில் ஓசூர், நாகர்கோயில் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து மொத்த மாநகராட்சிகளின் எண்ணிக்கை 12 இல் இருந்து 14 ஆக உயர்ந்துள்ளது.

இவற்றில் மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல் மற்றும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நாகர்கோயில் ஆகியன தென் தமிழகத்தில் அமைந்துள்ளன. கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகியன கொங்கு மண்டலத்தில் அமைந்துள்ளன. திருச்சி, தஞ்சாவூர் ஆகியன மத்திய கிழக்கு பகுதியில் அமைந்துள்ளன. வட தமிழகம் சென்னை, வேலூர் மற்றும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ஓசூர் உடன் சேர்த்து மூன்று மாநகராட்சிகளை கொண்டுள்ளது.

Tamil Nadu Hosur, Nagercoil to become corporations

மக்கள் தொகை மற்றும் வருவாயின் அடிப்படையில் தான் மாநகராட்சிகள் உருவாக்கப்படும். பெரும்பாலான தென் மாவட்ட மாநாகராட்சிகளின் பிரதான தொழில் மீன் பிடித்தல், உப்பு உற்பத்தி மற்றும் அவை சார்ந்த சந்தை படுத்துதலே ஆகும். வட மண்டலங்களான சென்னை, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் நூற்றுக்கணக்கில் தொழிற்சாலைகளும், பன்னாட்டு நிறுவனங்களும் இறைந்து கிடக்கின்றன. மக்கள் தொகையிலும் வட மண்டலமே முன்னிலையில் உள்ளது. அப்படி இருக்கையில் மாநகராட்சி உருவாக்கத்தில் வட மண்டலத்தை விட்டுவிட்டு எந்த அடிப்படையில் அரசு தென் மண்டலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்று மக்களிடையே முணுமுணுப்பு காணப்படுகிறது.

Hosur and Nagercoil to be municipal corporations

1998 ஆம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் கடந்த மாதம் விளையாட்டு துறை அமைச்சரும் ஓசூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான அதிமுகவை சேர்ந்த பாலகிருஷ்ண ரெட்டி பதவி இழந்ததும், 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதும் அனைவரும் அறிந்ததே. மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்த சம்பவம் ஓசூர் மீதான அதிமுகவின் பிடிப்பை சற்று குறைத்துவிட்டது என்றே சொல்லலாம். அதனை சரிக்கட்ட தான் தற்பொழுது ஓசூர் மாநகராட்சியாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் இது முழுக்க முழுக்க தேர்தலை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட செயல் என்றும் கருத்துக்கள் நிலவுகிறது.

Nagercoil, Hosur municipalities set to become municipal corporations

ஓசூருடன் சேர்த்து பார்த்தாலும் வட மண்டலத்தில் உள்ள மாநகராட்சிகள் எண்ணிக்கை மூன்று தான். இங்கும் அரசுக்கு அதிக அளவு வரிவருவாய் தந்து கொண்டிருக்கிற நகராட்சிகள் பல உள்ளன. தென் திசையிலேயே கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு வட திசையையையும் அரசு சற்று பார்த்தல் நன்றாக இருக்கும் என்பதே அங்குள்ள மக்களின் ஆதங்கமாக உள்ளது.

Tamil Nadu Breaking News: மாநகராட்சி எண்ணிக்கையில் வஞ்சிக்கப்படுகிறதா வட தமிழகம்? : Nagercoil, Hosur to be upgraded as corporations