அனல் பறக்கும் தமிழக தேர்தல் களம், என்ன பேசினார் மோடி?

pm-modi-renamed-chennai-railway-station-to-mgr-name

இந்திய நாட்டின் 17வது மக்களவை தேர்தல் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் இறுதியில் நடைபெறவுள்ளது. அதனை கருத்தில் கொண்டு அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளது. அந்த நிகழ்வில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஸ், பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞர் அணி செயலாளர் அன்புமணி ராமதாஸ், மற்றும் தமிழக பாஜக தலைவர்கள் உட்பட பல கூட்டணி கட்சித் தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். தமிழகத்தில் திமுக சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளது எனவும் கூறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் கூறித்தும் பேசினார்.

பிரதமர் மோடி அறிவித்த திட்டங்கள்

  • தமிழகம் வந்து செல்லும் அனைத்து விமானங்களிலும் தமிழில் அறிவிப்பு செய்யப்படும் என்றார்.
  • மேலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும் எனவும் அறிவித்தார்.
  • இலங்கை கடற்படையிடம் சிக்கி கொண்ட 1900 மீனவர்களை மத்திய அரசு மீட்டு கொடுத்துள்ளதையும் கூறிப்பிட்டார்.
  • இது போன்ற விஷயங்களை குறிப்பிட்ட பிரதமர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். அப்போது தனது வெறுப்புகளை வெளிப்படுத்த மாநில ஆட்சிகளை காங்கிரஸ் கட்சி கலைத்து இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மாநில அரசுகளின் தேவைகளை பூர்த்தி செய்யாமல் நாடு முன்னேற முடியாது என்றார். நாட்டின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு எவ்விதமான நடவடிக்கை எடுத்துவருகிறது என்பது குறித்து உங்கள் அனைவருக்கும் தெரியும் என்றார். எதிர்கட்சிகளின் விமர்சனங்களும், எதிர்ப்புகளும் என்னை சோர்வடைய செய்யாது என்றார். தமிழக மக்கள் அனைவரும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் என கோரிக்கை விடுத்தார். நிறைவாக பேசிய பிரதமர் நாற்பதும் நமதே நாடும் நமதே என்ற வாசகத்துடன் தனது உரையை நிறைவு செய்தார்.

    மீண்டும் வருவாரா மோடி ?

    பிரதமர் மோடி பாஜக பொதுகூட்டங்களில் கலந்து கொள்ள மீண்டும் தமிழகம் வருவார் என்று பாஜக பிரதிநிதிகள் தகவல் சொல்கிறார்கள். இந்த மக்களவை தேர்தலுக்கு பிறகு மோடி மீண்டும் பிரதமராக வருவாரா என்ற கேள்விக்கான துள்ளியமான பதிலை மக்கள் மிக விரைவில் தெரிவிப்பார்கள்.

    மீண்டும் வருமா பாஜக அல்லது மீண்டு வருமா காங்கிரஸ், மக்களவை தேர்தலில் மக்களின் பதிலுக்காக காத்திருப்போம்.