தேர்தல் யுக்திகளை கையாளுகிறதா அதிமுக ?

AIADMK handles electoral strategies

வறுமை கோட்டிற்கு கீழே உள்ள தொழிலாளர்களுக்கு நிதியுதவியாக மாதம் ரூபாய் 2000 வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளர். தமிழகத்தை பொருத்தவரை அனைத்து வர்கத்தை சார்ந்தவரும் உள்ளனர். இன்றைய சமூகத்தில் பல்வேறு வளர்ச்சிகளை நாம் அணுதினமும் பார்க்கிறோம், ஆனால் அதனை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள நபர்களால் ருசிக்கமுடியாமல் போய்விடுகிறது. அதற்கு காரணம் நிதிநிலைமை. இன்றைய கல்வி வளர்ச்சி, தொழில் வளர்ச்சிக்கு நிகராக வளர்ந்து வருகிறது. மருத்துவமும் செலவும் இமாலய உயரத்தை தொட்டுவிடுகிறது. இதன் விளைவாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் தங்களது அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியவில்லை. இந்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள இந்த திட்டம் ஏழை தொழிலாளர்களின் துயரை மொத்தமாக நீக்கிவிடாது என்றாலும் அவர்களுக்கு அறுதலாக இருக்கும் என்பதே உண்மை. இந்த திட்டத்தின் வாயிலாக வருடத்திற்கு 24,000 ரூபாய் என்பது ஏழை தொழிலாளர்களுக்கு மிகவும் தேவையான ஓன்றாக இருக்கும். ஒரு கிராமப்புற குழந்தையின் கல்வி செலவுக்கு உதவியாக இருக்கும். இதன் மூலம் 60 லட்சம் தொழிலாளர்கள் நன்மை அடைவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

இது நல்ல திட்டம் தான் அதில் எந்த மாற்றமும் இல்லை, இருப்பினும் அதனை நடைமுறைபடுத்த இது சரியான காலம்தானா என்ற கேள்விகளை எழுப்புகிறது. அண்மையில் சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது, அப்போது தேர்தலை கருத்தில் கொண்டு தான் அதிமுக சில திட்டங்களை அறிவித்துள்ளது என்ற அதே குற்றச்சாட்டு இதற்க்கும் பொருந்தும். ஏழை தொழிலாளர்களுக்கு ஊக்க தொகை கொடுப்பது பெருமை அல்ல, ஏழை தொழிலாளர்களை உயர்த்த ஒரு திட்டம் தீட்டாதது ஏன் என்ற கேள்வியும் சேர்ந்தே எழுகிறது. இந்த 2000 ரூபாயும் 60 லட்சம் தொழிலாளர்களை சென்று அடையுமா? இந்த திட்டம் எப்போது அமல் படுத்தப்படும், என்ற பதிலுக்காக காத்திருக்கிறார்கள் ஏழை தொழிலாளர்கள். பொதுவாகவே தமிழகத்தை பொருத்தவரை தேர்தல் வரும் சூழலில் இலவச திட்டங்கள், கடன் ரத்து போன்று திட்டங்களை அறிவித்து மக்களை கவர்வது தமிழக அரசியலில் வழக்கமான ஒன்று தான்.