சென்னையும் சிசி டிவி கேமராக்களும்! பின்னணி என்ன?

Chennai Police Crime Investigation Reduced by Chennai People Surveillance Camera Footage

Chennai CCTV Cameras: சென்னை நகரம் மொத்தம் 2 லட்சத்திற்கும் அதிகமான சி சி டிவி கேமராக்களால் கண்காணிக்கப்படுகிறது. நகரின் பிரதான சாலைகளில் ஒவ்வொரு 50 மீட்டருக்கும் ஒரு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.அவற்றில் பெருமளவு மக்களால் அவரவர் வீடுகளுக்காகவும், கடைகளுக்காகவும், தெருக்களுக்காகவும் பொறுத்தப்பட்டவை.

சில நிறுவனங்கள் சமூக அக்கறையுடன் தாமாக முன்வந்து பொது இடங்களில் கேமராக்களை பொருத்துவதும் உண்டு. இவ்வாறு பொறுத்த படும் அனைத்து கேமராக்களும் அந்தந்த இடங்களுக்கு அருகில் இருக்கும் காவல் நிலையத்தின் கண்ட்ரோல் ரூம் உடன் இணைக்கப்பட்டிருக்கும்.
இதன் மூலம் எங்கேயாவது குற்றங்கள் நடந்தால் அந்த குறிப்பிட்ட வட்டாரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சி சி டிவி கேமராக்களில் பதிவாகியிருக்கும் காட்சிகளை கொண்டு குற்றத்திற்கான பின்னணியை காவல் துறையினரால் கண்டறிய முடிகிறது.

சென்னை காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் இது பற்றி கூறுகையில், “வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவிற்கு சி சி டிவி கேமராக்களின் தேவை பற்றிய விழிப்புணர்வு சென்னை மக்களிடம் அதிகமாகவே உள்ளது. சி சி டிவி கேமராக்கள் பொறுத்தப்படுவது வழக்கமான பிறகு நகரில் நிகழும் குற்றங்கள் 30% குறைந்துள்ளன. 2012 இல் 792 ஆக இருந்த செயின் பறிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை 2018 இல் 538 ஆக குறைந்துள்ளது.

CCTV Surveillance Camera Footage in Chennai helps Chennai Police Crime Investigation: சென்னையும் சிசி டிவி கேமராக்களும்! பின்னணி என்ன?

கொள்ளை மற்றும் வழிப்பறிகளும் குறைந்துள்ளன. அவ்வப்போது நிகழும் குற்ற சம்பவங்களுக்கு காரணமானவர்களும் சில மணி நேரத்திற்குள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு தேடி பிடிக்கப்படுகின்றனர். அதுமட்டுமல்லாது பொது இடங்களில் கேமரா இருப்பதை உணர்ந்திருப்பதால் “போலீசாரும் மக்களிடையே மரியாதையுடன் நடந்துகொள்கின்றனர்” என்றார்.

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் கிரிமினாலஜி பிரிவினர், கொள்ளை சம்பவங்கள் தொடர்பான தங்களது ஆராய்ச்சிக்காக சில கொள்ளையர்களிடம் பேசியபொழுது, “சி சி டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள வீடுகளுக்குள் நுழைய நாங்கள் பயப்படுவோம்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் மக்களுள் சிலர், மூளை முடுக்குகளிலெல்லாம் பொருத்தப்படும் சி சி டிவி கேமராக்களால் தங்களது பிரைவசி பாதிக்கப்படுத்தாக கருதுகின்றனர். குறிப்பாக கடைகளிலும், வேலை நிறுவங்களிலும் பொருத்தப்படும் கேமராக்களால் யாரும் யாரையும் கண்காணிக்க முடியும் என்றும்,அவ்வாறு கண்காணிப்பதால் தெரிய வரும் பர்சனல் விஷயங்களை வைத்து ஒருவர் மற்றொருவரை மிரட்டும் சம்பவங்கள் நிறைய நடந்து உள்ளன என்றும் கூறுகின்றனர்.

CCTV Surveillance Camera Footage in Chennai helps Chennai Police Crime Investigation: சென்னையும் சிசி டிவி கேமராக்களும்! பின்னணி என்ன?

இதற்கு போலீசார் தரப்பில், “மக்களின் பாதுகாப்பிற்காகவும் குற்றங்களை தடுக்கவும் தான் நாங்கள் சி சி டிவி கேமராக்கள் பொருத்துவதை பரிந்துரைக்கிறோம். ஆனால் அதில் பதிவாகும் காட்சிகளை வைத்து ஒருவர் மற்றவரை மிரட்டுவது சட்ட ரீதியாக தவறு என்றும் அவ்வாறு நடந்தால் அதற்கு தக்க தண்டனை உண்டு” என்று கூறப்படுகிறது. மேலும், சி சி டிவி கேமராக்கள் வந்த பிறகு போலீசார் தங்களது ரோந்து பணிகளில் சரியாக ஈடுபடுவதில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவி வருகிறது.

“சி சி டிவி கேமராக்கள் ஒரு குற்றத்தை கண்டுபிடிப்பதற்கான துடக்கம். அதில் பதிவாகும் காட்சிகள் ஒரு விசாரணையின் 50% தீர்வை தான் குடுக்கும். அதற்கு பிறகு தங்களது திறமையை கொண்டு போலீசார் அந்த பிரச்சனைக்கான முழு தீர்வையும் தேடி போவர். தொழில்நுட்பமும் மனித வலிமையையும் சேர்ந்தால் தான் ஒரு குற்றவாளியை கண்டுபிடிக்க முடியும். நகரில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் மூன்று முதல் நான்கு ரோந்து வாகனங்கள் உள்ளன. நாங்கள் ரோந்து செல்வதை குறைத்துக்கொள்ளவில்லை சி சி டிவி கேமராக்கள் எங்களுக்கு கூடுதல் உதவியாக தான் உள்ளன” என்பது போலீசாரின் பதிலாக உள்ளது.

மக்களை பாதிக்காத வகையில் இந்த தொழில்நுட்பத்தை உபயோகிப்பதில் போலீசாரும், காவல் துறை தங்கள் பணியை முறையே செய்ய தங்களின் ஒத்துழைப்பும் தேவை என்பதை மக்களும் உணர்ந்து ஒரு சீரான சமூகத்தை உருவாக்குவது முக்கியம்.

Chennai Police Crime Investigation Reduced by Chennai People Surveillance Camera Footage : சென்னையும் சிசி டிவி கேமராக்களும்! பின்னணி என்ன?