தமிழக பட்ஜெட் 2019 – கல்வித்துறை

Tamil Nadu Budget 2019 Education

Tamil Nadu Budget 2019 – Education: 2019 – 2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில் கல்வி துறைக்கான சிறப்பு அம்சங்களை கீழ்கண்டவாறு காணலாம்

  • மறைந்த முன்னாள் குடியரசு தலைவரும் விஞ்ஞானியுமான ஏ பி ஜே அப்துல் கலாம் அவர்களின் பெயரில் ராமேஸ்வரத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும்.
  • பள்ளிக்கல்வி துறைக்கு ரூபாய் 28,757.62 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • உயர் கல்வி துறைக்கு ரூபாய் 4584.21 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்காக ரூபாய் 1362 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் ரூபாய் 2791 கோடியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம்.
  • புத்தகப்பைகள், காலணிகள், நோட்டுப் புத்தகங்கள், பாடப் புத்தகங்கள் உள்ளிட்டவைகளை விலையில்லாமல் வழங்க 1,656 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • நபார்டு உதவியுடன் பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் கட்ட ரூ.381 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • முதல் முதல்முறையாக பட்டதாரி மாணவ, மாணவியருக்கு கல்வி கட்டணம் வழங்க ரூ.460 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • வேலைவாய்ப்பற்ற பொறியியல் பட்டதாரிகளுக்கு உயர்நிலை தொழில்நுட்ப திறன் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • 2011-12 ஆம் ஆண்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 63,178 ஆக இருந்தது. 2018-19 ஆம் ஆண்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது.
  • தொடக்கநிலை வகுப்புகளில் நிகர மாணவர் சேர்க்கை விகிதம் 99.8 ஆக உயர்வு.
  • Tamil Nadu Budget 2019 – Education: தமிழக பட்ஜெட் 2019 – கல்வித்துறை