தமிழக பட்ஜெட் 2019 – வேளாண் துறை மற்றும் விவசாயிகளுக்கு!

Tamil Nadu Budget 2019 - For Agriculture and Farmers

Tamil Nadu Budget 2019 For Agriculture and Farmers: 2019 – 2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில் வேளாண் துறைக்கான சிறப்பு அம்சங்களை கீழ்கண்டவாறு காணலாம்.

 • விவசாயத்திற்கு ரூபாய் 10,550 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 • நடப்பு நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூபாய் 10,000 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 • பயிர் கடன் மீதான வட்டி தள்ளுபடிக்கு ரூபாய் 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 • பயிர் காப்பீடு திட்டத்திற்கு ரூபாய் 621.59 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 • இரண்டு லட்சம் ஹெக்டர் பரப்பில் தண்ணீர் பாசன திட்டத்திற்கு ரூபாய் 1361 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 • சூரிய சக்தியில் இயங்கும் 2000 பம்பு செட்டுகள் 90 சதவீத மானியத்துடன் வழங்கப்படும்.
 • கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகையாக 2000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 • நெல் கொள்முதல் ஊக்கத் திட்டத்திற்கு ரூபாய் 180 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சாதாரண ரக நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூபாய் 1800-க்கும், சன்ன ரக நெல் ரூபாய் 1840-க்கும் வழங்கப்படும்.
 • விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 8.72 லட்சம் ஏழை பெண்கள் பயனடைந்துள்ளனர். இந்த நிதியாண்டிலும் இத்திட்டம் தொடர ரூபாய் 198.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 • நாட்டின, கலப்பின காளைகளின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்க ரூபாய் 100 கோடி செலவில் புதிய திட்டம் கொண்டு வரப்படும்.
 • உழவர் உற்பத்தியாளர் அமைப்புக்கு ரூபாய் 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 • இயற்கை வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறைக்கு 79.73 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் இயற்கை வேளாண்மை சான்று வழங்கும் மையங்கள் அமைக்கப்படும்.
 • வேளாண் இயந்திரமாக்கல் திட்டத்திற்கு ரூபாய் 172 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 • 128 வட்டார அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் மற்றும் 360 கிராம அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்.
 • கஜா புயல் நிவாரணத்திற்காக 2361.41 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 • Tamil Nadu Budget 2019 For Agriculture and Farmers – தமிழக பட்ஜெட் 2019: வேளாண் துறை மற்றும் விவசாயிகளுக்கு!