Tag: Tamil news in short

பெப்சிகோ தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயியின் வெற்றிக்கான 5 முக்கிய காரணங்கள்

தமிழ் குடும்பத்தில் பிறந்த இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி, 1994-ஆம் ஆண்டில் பெப்சிகோ நிறுவனத்தில் சேர்ந்து, 2001-ஆம் ஆண்டு தலைவர் மற்றும் CFO-ஆக பதவி வகித்தார். கடந்த 24 ஆண்டுகளாக பெப்சிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பணியாற்றிய இந்திரா நூயி, சமீபத்தில் பதவியில் இருந்து விலகினார். தற்போது 62 வயதை அடைந்துள்ள இவர், முயற்சியாலேயே, பெப்சிகோ நிறுவனத்தின் தயாரிப்புகள், ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் மற்றும் குளிர்பானம் என்ற பெயரை பெற்றது. மேலும், கடந்த 12 ஆண்டுகளில் விற்பனையும் 80 சதவிகிதம் உயரவும் இவர் காரணமாக இருந்துள்ளார். தற்போதும் பெப்சிகோ நிறுவனத்தின் சேர்வுமனாக இருந்து வரும் நூயி, வரும் 2019 வரை போர்டு ஆஃப் டைரக்டர் ஆகவும் தொடர்ந்து பணியாற்ற உள்ளார். நூயி, தனது அடுத்த சுற்றுக்கு தயாராகி விட்ட நிலையில், தனது பணியில் வெற்றி பெற கடைபிடித்த 5 முக்கிய பழக்கங்களை பற்றி அவரே கூறியுள்ளார்.
மேலும் படிக்க

ரஜினிகாந்துடன் நடிப்பதுதான் எனது கனவு

ரஜினிகாந்துடன் இணைந்து பேட்ட படத்தில் நடிப்பதன் மூலமாக, இந்த வருடம் எனது கனவு நனவானது என்று சசிக்குமார் கூறியுள்ளார். சன் பிக்சர்ஸ் தாயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வரும் திரைப்படம் பேட்ட. இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் விஜய் சேதுபதி, த்ரிஷா, பாபி சிம்ஹா, சிம்ரன், நவாசுதீன் சித்திக், சோமசுந்தரம், சனந்த் செட்டி, மேகா ஆகாஷ் என பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான சசிக்குமார் படத்தில் இணைந்துள்ளார் என்று சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை தெரிவித்திருக்கும் சசிக்குமார், “ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பதன் மூலமாக, இந்த வருடம் எனது கனவு நனவானது. சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு எனது நன்றி”என்று கூறியுள்ளார்.

நாளை ரெட் அலர்ட்: ரெட் அலர்ட் என்றால் என்ன ?

தமிழகத்திற்கு நாளை (7.10.2018) ரெட் அலர்ட் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  ஏற்கனவே கேரள மழை வெள்ளத்தின் போது ரெட் அலர்ட் என்ற வார்த்தை பரவலாக பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு, கடந்த சில தினங்களுக்கு முன்னர், மீண்டும் கேரளாவை சேர்ந்த 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்தது வானிலை ஆய்வு மையம். இந்நிலையில், தற்பொழுது, தமிழகத்தில் நாளை  அனேக இடங்களில் மிக அதிகமான மழை பெய்யும் எனவும், மாவட்ட ஆட்சியர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க

நாளை ரெட் அலர்ட்: ரெட் அலர்ட் என்றால் என்ன ? – சிறப்பு தொகுப்பு

நாளை ரெட் அலர்ட்: தமிழகம், கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் ஓமன் கரையை நோக்கி நகரக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அரபிக்கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் கடல் காற்று பலமாக வீசும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் மீனவர்கள் குமரி, அரபிக்கடல் பகுதியில் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்திற்கு நாளை (7.10.2018) ரெட் அலர்ட் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  ஏற்கனவே கேரள மழை வெள்ளத்தின் போது ரெட் அலர்ட் என்ற வார்த்தை பரவலாக பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு, கடந்த சில தினங்களுக்கு முன்னர், மீண்டும் கேரளாவை சேர்ந்த 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்தது வானிலை ஆய்வு மையம். இந்நிலையில், தற்பொழுது, தமிழகத்தில் நாளை  அனேக இடங்களில் மிக அதிகமான மழை பெய்யும் எனவும், மாவட்ட ஆட்சியர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

கேரளாவில் மழை பெய்ய ஆரம்பித்த காலத்தில் இருந்தே மஞ்சள் அலர்ட்,  ஆரஞ்ச் அலர்ட் மற்றும் ரெட் அலர்ட் என விதவிதமான வித்தியசமான வார்த்தைகளை கேட்டுக் கொண்டிருக்கிறோம். மழை பெய்தால் சரி… அது என்ன ரெட் அலர்ட்? எல்லோருக்கும் இந்த கேள்வி வெகுநாட்களாக இருந்து வருகிறது. “வானிலை அறிக்கை வாசிப்பது” என்று கேட்டுக் கொண்டிருந்த நமக்கு இந்த அலர்ட்கள் என்ற வார்த்தைகளே பயத்தை விளைவிக்கிறது.

ரெட் அலர்ட் என்றால் என்ன ?

வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு அறிவிக்கும் எச்சரிக்கைகள் தான் இந்த அலர்ட்கள். நான்கு வித்தியசமான அலர்ட்கள் நான்கு விதமான காலநிலைகளை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது. அவைகள் பொதுவாக பச்சை எச்சரிக்கை (Green Alert), மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert), அம்பர் அல்லது ஆரஞ்ச் எச்சரிக்கை (Amber Alert), மற்றும் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) ஆகும்.

பச்சை எச்சரிக்கை (Green Alert) :  பொதுவாக மழை பெய்யும் அறிகுறி வானில் தென்பட்டாலே இந்த எச்சரிக்கை விடப்படும். இதனால் மக்கள் யாரும் பயப்பட வேண்டிய தேவை இல்லை.

மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert) : வானிலை மிகவும் மோசமாக இருப்பதை தெரிவிப்பதே இந்த மஞ்சள் எச்சரிக்கை ஆகும். இது போன்ற நேரங்களில் மக்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தயார் நிலையில் வைத்துக் கொள்வது நல்லது.

அம்பர் எச்சரிக்கை (Amber Alert) : பொருட்சேதம் அல்லது உயிர்ச் சேதம் ஏற்படுத்தும் அளவிற்கு வானிலை மோசமாக இருக்கும் பட்சத்தில் வானிலை ஆய்வு மையம் இந்த எச்சரிக்கையைத் தரும். இது போன்ற நேரங்களில் மக்கள் பயணங்களை தவிர்ப்பது  நலம்.

சிவப்பு எச்சரிக்கை (Red Alert) : மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையிலும், அடிப்படை தேவைகளை அடைய முடியாத நிலை ஏற்படும் வகையில் மழைப் பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போதே இந்த எச்சரிக்கை அளிக்கப்படும். போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படும் வகையில் மழை பெய்யும் போது தான் இது போன்ற எச்சரிக்கைகள் விடப்படும்.

கேரளாவில் ஆகஸ்ட் 12ம் தேதி அங்கிருக்கும் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. வருகின்ற 7ம் தேதி தமிழகம் மற்றும் கேரள மாவட்டங்களில் பலத்த மழை இருக்கும் என்று கணித்த வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை கொடுத்துள்ளது.

ரெட் அலர்ட்  குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை 

அரபிக் கடலில் மையம் கொண்டிருக்கும் புயல் நமது கரையிலிருந்து வெகு தூரத்தில் உள்ளது. இது கிழக்கு பக்கத்திலிருந்து வரும் காற்றை வலுப்படுத்துகிறது. இதனால், மலைகளில் ஈரப்பதம் தேங்கி மழைக்கு வாய்ப்பு ஏற்படுகிறது. 2009-ல் நீலகிரி மாவட்டத்தின் கேட்டி பகுதியில் ஒரே நாளில் 820 மில்லி மீட்டர் மழை பெய்தது. இத்தகைய புயலால் கடந்த காலங்களில் குன்னூர் பகுதியே அதிக மழை பெற்றிருக்கிறது.

இந்த முறை 2009 போல் இல்லாமல் புயலானது இந்திய கடற்கரையிலிருந்து வெகு தூரத்தில் இருக்கிறது. இது ஓமன் நாட்டை நோக்கிச் செல்கிறது. அதனால் கேரளாவுக்கோ தமிழ்நாட்டுக்கோ எந்த அச்சுறுத்தலும் இல்லை. அதேவேளையில், தமிழகத்தின் மலைப்பிரதேசங்களில் கவனம் கொள்ள வேண்டும். அதுவும் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே கண்காணித்தால் போதும்.

இந்த ரெட் அலர்ட் சென்னைக்கானது அல்ல. எனவே டிசம்பர் 1 மழையை நினைத்து அச்சம் கொள்ள வேண்டாம். மலைப் பிரதேசங்களிலும் கூட ஆகஸ்ட் 2018-ல் பெய்த அளவுக்கு மழை பெய்யப் போவதில்லை.

சென்னை மக்கள் செய்திகளை அச்சத்துடன் பார்ப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள். சென்னைக்கு மழை தேவை. சென்னைக்கு நீர் வழங்கும் 4 ஏரிகளும் வறண்டு கிடக்கிறது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை.

2018 அமைதிக்கான நோபல் பரிசு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்பட்டது.

காங்கோ நாட்டை சேந்த டென்னிஸ் முக்வேஜா மற்றும் ஈராக் நாட்டை சேர்ந்த நாடியா முராத் ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு  அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கோ நாட்டை சேர்ந்த மருத்துவரான டென்னிஸ் முக்வேஜா, போர்களில் பெண்களுக்கு எதிரான நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடியவர். பல ஆண்டுகளாக அமைதிக்கான நோபல் பரிசுக்கு இவர் பரிந்துரைக்கப்பட்டு வந்தநிலையில், இந்த ஆண்டு இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈராக் நாட்டை சேர்ந்த நாடியா முராத், ஈராக்கில் உள்ள சிறுபான்மை இனத்தவரான யாஷிதி இன பெண்களின் உரிமைக்காக போராடியவர். இவர்களுக்கு நடந்த அநீதிகளை ஐநா  வரை கொண்டு சென்றார். பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளான யாஷிதி இன பெண்களுக்காக போராடியதற்காக  நாடியா முராத்க்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

சாம்பியன் ஆப் எர்த் விருது பெறுகிறார் மோடி

ஐநா.சபையின் 73வது பொதுச்சபை கூட்டத்தின் போது பிரதமர் மோடிக்கும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரோனுக்கும் சுற்றுச்சூழலுக்கான விருது அறிவிக்கப்பட்டது. சர்வதேச சூரிய ஒளி மின்சாரத்திற்கான கூட்டமைப்பை உருவாக்கியதற்காகவும் ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுத்ததற்காகவும் பிரதமர் மோடிக்கு விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் குட்ரெஸ் நேரில் விருதை வழங்க உள்ளார்.