Tamil Nadu News

அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – முத்தரசன் குற்றச்சாட்டு

தங்கள் கட்சியை தமிழகத்தில் வளர்த்து கொள்ள அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதற்காக அதிமுகவை மிரட்டுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். எங்கள் கட்சியை பொறுத்த வரையில் திமுக கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். தொகுதி பங்கீடு குறித்து இன்னும் அதிகார பூர்வ பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை. பாஜக எத்தனை வியூகங்கள் வகுத்தாலும் பாஜக தமிழகத்தில் வளராது என்றார்.

இன்று பிரதமர் மோடி தமிழகம் வருகை

மக்களவைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருப்பதை ஒட்டி இந்தியா முழுவதும் நரேந்திர மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று தமிழகத்திற்கு வரும் அவர் திருப்பூரில் இ எஸ் ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதுமட்டுமல்லாது பல்வேறு திட்டங்களை காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைக்க இருக்கிறார் . அதில் சென்னை டி எம் எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் சேவை குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் மகா கூட்டணி அமைப்பது ஏன்? – மோடி கேள்வி

தமிழகம் வந்த பிரதமர் மோடி திருப்பூரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில், “கலப்பட மருந்தை போன்று ஆபத்தானது கலப்பட கூட்டணி. எதிர்க்கட்சிகளின் கலப்படமான கூட்டணியை மக்கள் தூக்கி எறிவார்கள். என்னை தோற்கடிக்க வேண்டும் என்றே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளார். ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கை இருந்தால் காங்கிரஸ் மகா கூட்டணி அமைப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இன்று பிரதமர் மோடி தமிழகம் வருகை

மக்களவைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருப்பதை ஒட்டி இந்தியா முழுவதும் நரேந்திர மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று தமிழகத்திற்கு வரும் அவர் திருப்பூரில் இ எஸ் ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதுமட்டுமல்லாது பல்வேறு திட்டங்களை காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைக்க இருக்கிறார் . அதில் சென்னை டி எம் எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் சேவை குறிப்பிடத்தக்கது.

மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் – கைலாஷ் விஜய்வர்ஜியா

சாரதா சிட்பண்ட் விவகாரம் குறித்து கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க சென்றதை கண்டித்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசை எதிர்த்தும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து சிபிஐ சார்பில் அளிக்கப்பட்ட மனுவை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம் ராஜீவ் குமாரை விசாரிக்க அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியது. இதனிடையே இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்ஜியா, மேற்குவங்க முதல்வர் பதவியில் இருந்து உடனடியாக மம்தா பதவி விலக வேண்டும். சாரதா சிட்பண்ட் பிரச்சினை விசாரணைக்கு மாநில அரசும் போலீசாரும் தொடர்ந்து இடையூறு விளைவித்து வருகின்றனர். சிட்பண்ட்ஸ் ஊழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுப்பதற்காக மம்தா தர்ணாவில் ஈடுபட்டிருந்தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து இருப்பார்கள் எனக் கூறினார்.

ராகுல் காந்தி இந்த மாதம் தமிழகம் வருகை

தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே எஸ் அழகிரி டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார். அதற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசியல் நிலவரம் பற்றி இருவரும் பேசியதாக கூறினார். மேலும், தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல் இல்லை என்று கூறிய அவர், இந்த மாதம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளதாகவும் கூறினார்.

மம்தா பானர்ஜிக்கு ஆதரவுக் கொடி தூக்கும் கட்சித் தலைவர்கள்!

காவல் ஆணையர் ராஜீவ் குமாரை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க வந்ததை எதிர்த்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்தும் வங்கதேச முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். பாஜக அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கும் இவருக்கு பல கட்சித் தலைவர்களும் தங்கள் ஆதரவைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து பாசிச பாஜக அரசை தோற்கடிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். இதனிடையே தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோரும் ஆதரவு கொடிகளை காட்டியுள்ளனர்.

நரேந்திர மோடி ஓய்வு பெறும்போது நானும் ஓய்வுபெறுவேன் – ஸ்ம்ரிதி இரானி

புனேவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் “நீங்கள் எப்போது பிரதமர் ஆவீர்கள்?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு “எனக்கு பிரதமர் ஆகும் எண்ணம் இல்லை. சிறந்த தலைவர்களின் தலைமையின் கீழ் அரசியல் பணி செய்வதே என் விருப்பம். பிரதமர் நரேந்திர மோடி நீண்ட நாட்கள் அரசியலில் இருப்பார். அவர் ஓய்வு பெறும்போது நானும் ஓய்வுபெறுவேன்” என்று பி ஜே பி – எம் பி ஸ்ம்ரிதி இரானி கூறியுள்ளார்.

தபால் நிலையங்களில் உரிமை கோரப்படாமல் சுமார் 9,000 கோடி ரூபாய்!

ஏழை எளிய மக்கள் தங்களின் வாழ்வாதார பாதுகாப்பிற்காக சிறு தொகைகளை சேமிக்க தபால் நிலையங்களை பயன்படுத்துகின்றனர். இதனிடையே நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் சேர்த்து சுமார் 9,000 கோடி ரூபாய் உரிமை கோரப்படாமல் இருப்பதாக மத்திய அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. குறிப்பாக தபால் நிலையங்களில் உள்ள சிறு சேமிப்பு திட்டங்கள் ஆன கிசான் விகாஸ் பத்திரம், மாத வருவாய் திட்டம் ,தேசிய சேமிப்பு பத்திரம், PPF, RD உள்ளிட்டவைகளில் இந்த நிதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் ஆகும் #WestBengalWantsPresidentRule

சாரதா சிட் பண்ட் முறைகேடு பற்றி காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க சென்ற சி பி ஐ அதிகாரிகள் கைது செய்யபட்டதை தொடர்ந்து சி பி ஐ-இன் செயலை எதிர்த்தும் பா ஜா க அரசு தன் ஆட்சியை கலைக்க முயற்சிப்பதாக கூறியும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜீ தர்ணா போராட்டத்தில் இறங்கினார். இது கொல்கத்தாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிற கட்சி தலைவர்கள் சிலரும் அவருக்கு ஆதரவு அளித்து வருவதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் மக்களிடையே விமர்சனங்கள் எழுந்தவாறு உள்ளன. ட்விட்டரில் #WestBengalWantsPresidentRule என்ற ஹாஷ் டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

நேரில் ஆதரவு தெரிவித்த கனிமொழி

மத்திய அரசுக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார் கொல்கத்தா மாநில முதலைச்சர் மம்தா, மாநில உரிமைகளை தட்டி பறிக்கும் வகையிலும் , மாநில அரசுக்கும் நெருக்கடி கொடுக்கும் வகையில் செயல் படுவதாக குற்றம் சாட்டினார், இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் திமுக சார்பில் எம்.பி கனிமொழி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் அவரது டிவிட்டர் பக்கத்தில் “ மாநில உரிமைகளை காக்க, அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க, மம்தா அவர்களின் போராட்டத்தை ஆதரிப்பது நம் கடமை என்று பதிவிட்டுள்ளார்.

அடுத்தடுத்த நாளில் இரண்டு போலீஸார் தற்கொலை

திருச்சியில் அடுத்தடுத்த நாளில் இரண்டு போலீஸார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு சிறப்பு காவல்படைக்கான காவலர் குடியிருப்பில் காவலர் முத்து தூக்கில் தொங்கியதுடன் ரத்த காயங்களுடன் கண்டெடுக்கபட்டார். நேற்று மாலை திருச்சி பெண்கள் சிறை வார்டனாக பணிபுரியும் தமிழ்செல்வியும் தற்கொலை செய்து கொண்டார் இதற்கு அவரது காதல் தோல்வியே காரணம் என கூறப்படுகிறது. இந்த இரு சம்பங்களும் குறித்துட் திருச்சி காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.

மக்களவைத் தேர்தலில் பிரெய்லி வாக்காளர் சிலிப்

வரும் மக்களவைத் தேர்தலில் பார்வை இழந்தவர்கள் மற்றும் பார்வை குறைபாடு உடையவர்கள் வாக்களிக்க வசதியாக பிரெய்லி வாக்காளர் சிலிப் அளிக்கப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 5 மாநிலங்களில் நடைபெற்ற பேரவை தேர்தலின்போது வாக்காளர்களுக்கு இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதனை வரும் மக்களவைத் தேர்தலிலும் அறிமுகப்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. பார்வை குறைபாடு உள்ளவர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வசதியாக அமையும்.

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்துக்கு பலன் இல்லை

தம்பிதுரை குற்றச்சாட்டு மத்திய அரசின் 5 ஆண்டு பட்ஜெட்களில் தமிழகத்துக்கு ஏந்த பலனும் கிடைக்க வில்லை என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்த்துள்ளார். தற்போது அறிவிக்கப்பட்ட பட்ஜெட் பாஜாகாவின் தேர்தல் அறிக்கைபோல் தான் உள்ளது என்று கரூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு ” தமிழகத்தின் கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிகளோடு கூட்டணி” என முதல்வர் அறிவித்துள்ளார். என்றார் தம்பிதுரை.

வாஜ்பாய் அறிவித்துள்ள பட்ஜெட் எனக் கூறிய அமைச்சர் சீனிவாசன்

அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் “வாஜ்பாய் அறிவித்த பட்ஜெட் அருமையான பட்ஜெட் என முதல்வர் பாராட்டி உள்ளார்” என்று தவறாக குறிப்பிட்டு உள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் ஒருமுறை தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் என்று அவர் குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வில் இந்தியாவிலேயே அதிக தேர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழகம்

கடந்த ஜனவரி 6ம் தேதி 2019-20 கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் சென்னை, கோவை உள்ளிட்ட, நகரங்களில் நடைபெற்றது. இதில், தமிழகத்தில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி 31ம் தேதி வெளியானது. இதில் தமிழகத்தில் இருந்து 17 ஆயிரத்து 67 பேர் தேர்வு எழுதிய நிலையில், 11 ஆயிரத்து 121 பேர் தேர்வாகி உள்ளனர். வெற்றிபெற்றவர்களில் 7 பேரில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு

தை அமாவாசையை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் புனித நீராடி, மூதாதையர்களுக்கு திதி கொடுத்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து படையல் வைத்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து கடலில் புனித நீராடி சென்றனர். தனுஷ்கோடி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கோடியக்கரை, பவானி கூடுதுறை, திருச்சி அம்மா மண்டபம் ஆகிய இடங்களில் திரளானோர் திதிகொடுத்து, ஏழைகளுக்கு தானங்களை வழங்கினர்.

“என் சாவிற்கு சென்னை மாநகர போலீஸ் தான் காரணம்” – ஓட்டுநர் ராஜேஷ் தற்கொலை வாக்குமூலம்

“தன் சாவிற்கு சென்னை மாநகர போலீஸ் தான் காரணம்”

என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுவிட்டு ராஜேஷ் என்ற கால் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் ராஜேஷ்(25). காஞ்சிபுரம் மாவட்டம் கம்மவார்பாளையம் பகுதியில் தங்கி சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கால் டாக்ஸி ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில், கடந்த 25 ஆம் தேதி மறைமலை நகர் -சிங்கப்பெருமாள் கோயில் ரயில்நிலையங்கள் இடையே தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடலை தாம்பரம் ரயில்வே போலீஸார் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குடும்ப பிரச்சனை காரணமாக ராஜேஷ் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் வழக்கை முடித்தனர்.

இந்த நிலையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு மிகுந்த மன உலைச்சலோடு ராஜேஷ் உருக்கமாக பேசி வெளியிட்டிருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

ராஜேஷின் தற்கொலை வாக்குமூலம்!

அதில், “இன்று ( 25 ஆம் தேதி) காலை பெண் ஊழியர் ஒருவரை காரில் ஏற்றிக்கொண்டு வழியில் இன்னொரு ஊழியரை ஏற்றிக்கொள்வதற்காக பாடி மேம்பாலம் அருகே சாலை ஓரத்தில் காத்திருந்தேன். அப்போது இரண்டு போலீசார் அங்கு வந்து “வண்டிய இங்க நிறுத்தாத எடுத்துட்டு போ” என்றனர். உடனே அவ்விடத்திலிருந்து கிளம்பி சற்று தொலைவில் ரோட்டின் ஓரமாக வண்டியை நிறுத்தினேன்.

அங்கும் என்னை பின் தொடர்ந்து வந்த அவ்விரண்டு போலீசாரும் காரில் பெண் ஒருவர் இருப்பதை கூட பொருட்படுத்தாது என்னை மிகவும் மோசமான வார்த்தைகளில் தரக்குறைவாக திட்டினர். அவர்களது காக்கி உடைக்கு மரியாதை குடுத்து நான் அமைதியாக இருந்தேன். ஆனால் அவர்கள் அதை காப்பாற்றிக்கொள்ளவில்லை. இதே போல நேற்று திருவொற்றியூரில் ஒரு ஓரமாக சர்வீஸ் ரோட்டில் காரில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தேன்.

அங்கு வந்த போலீசார் என் வண்டியை லாக் செய்து விட்டு 500 ரூபாய் கொடுத்தால் தான் லாக்கை எடுப்போம் என்றனர். பணத்தை கொடுத்துவிட்டு ரசீது கேட்டதற்கு “எங்களையே எதிர்த்து பேசறயா” என்று கூறி தரக்குறைவாக திட்டினர். எங்கு போனாலும் போலீசாரின் தொல்லை தாங்க முடியவில்லை. போலீசாக இருந்து கொண்டு நீங்கள் இப்படி எல்லாம் செய்யலாமா? நீங்கள் வைத்தது தான் சட்டம் என்பது போல நடந்து கொள்கிறீர்கள். அரசாங்கமும் எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை.

என்னைப்போல் ஒரு ஒரு ஓட்டுனரும் தினமும் பல பிரச்சனைகளுக்கு நடுவில் சரியான தூக்கம் கூட இல்லாமல் வண்டி ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். தவறு செய்தால் பைன் போடுங்கள் ஆனால் தரக்குறைவாக பேசாதீர்கள். “என் சாவிற்கு சென்னை மாநகர போலீஸ் தான் காரணம். என் சாவோடு இது எல்லாம் முடிய வேண்டும்”. மேற்கொண்டு இது போன்று நிகழ்வுகள் நடந்தால் நீங்கள் அனைவரும் வேலையை விட்டு போய்விடுங்கள் மக்களே ஆட்சி செய்யட்டும்” என்று கூறியிருந்தார்.

ஆதாரங்கள் அழிப்பு !

ராஜேஷின் உடலை மீட்ட தாம்பரம் போலீசார் அவரின் உடைமைகளை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கும்போது ஒரு செல்போனை மட்டும் தாமதமாக கொடுத்துள்ளனர். அதிலிருந்த புகைப்படங்கள் வீடியோக்கள் எல்லாம் அழிக்கப்பட்டிருந்தன. அதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் அந்த செல்போனை ரெக்கவர் செய்து பார்த்த போது “தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ராஜேஷ் வீடியோ வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்ததும்,கொலைக்கான உண்மை காரணத்தை மறைக்க தாம்பரம் போலீசார் அந்த வீடியோ ஆதாரத்தை அழித்ததும்” தெரிய வந்தது.

ராஜேஷ் தற்கொலை தொடர்பாக ஊடகங்களில் வந்த செய்தியை அடிப்படையாக வைத்து, மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. நடந்த சம்பவம் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் விசாரணை நடத்தி 4 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில மனித உரிமைகள் ஆணைய நீதிபதி டி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

ராஜேஷ் தற்கொலைக்கு காரணமான 2 போக்குவரத்து போலீஸாரை அடையாளம் காண தென் சென்னை இணைஆணையர் சி.மகேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து விசாரிக்க போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையரும் உத்தரவிட்டுள்ளார்.

ராஜேஷ் தற்கொலைக்கு காரணமான போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கவும், இனி இதுபோல நடக்காமல் தடுக்கவும், ராஜேஷ் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் திரண்டு திருமங்கலம் சிக்னல் மற்றும் போரூர் பகுதிகளில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். மாலையில் 150-க்கும் அதிகமான கால் டாக்ஸி ஓட்டுநர்கள் திருமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.

மக்களை காப்பாற்ற வேண்டிய போலீசாரே இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு ஓட்டுநர் ஒருவரின் தற்கொலைக்கு காரணமாக இருந்தது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

“என் சாவிற்கு சென்னை மாநகர போலீஸ் தான் காரணம்” – ஓட்டுநர் ராஜேஷ் தற்கொலை வாக்குமூலம்

டாக்ஸி ஓட்டுநர் ரமேஷ் மரணம் – நடவடிக்கை தேவை திருமாவளவன் கோரிக்கை

காவல் துறையின் நெருக்கடியால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்ற வீடியோ வாக்குமூலம் தந்துவிட்டு ரயில் தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொண்டார் டாக்ஸி ஓட்டுநர் ரமேஷ். இதில் சம்பந்தப்பட்ட போலீசார் யார் என்பதை அறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

கலிங்கப்பட்டியில் கவுன்சிலராக வெற்றி பெற முடியுமா ? வைகோவிற்கு ஹச்.ராஜா சவால்

பாராளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ளார் வைகோ, அத்தோடு பிரதமரை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலர் ஹச் ராஜா ”வைகோவால் கலிங்கப்பட்டியில் கவுன்சிலராக வெற்றி பெற முடியுமா” சவால் விடுத்துள்ளார்.

8வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் ஓபிஎஸ்

தமிழக அரசின் பட்ஜெட் வரும் 8 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நடைபெறுகிறது. தொடர்ந்து நிதி அமைச்சர் பதவி வகித்து வருகிறார் ஓபிஎஸ், கடந்த ஆண்டு மட்டும் கட்சி பிளவு காரணமாக மின்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார், ஆகவே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட் இதுவாகும்.

மெரினாவில் குளிப்பதற்கு வயது வரம்பு 18

மெரினா கடற்கரையில் குளிப்பதற்கு வயது வரம்பு 18 என நிர்ணையிக்க பட்டுள்ளதாக சென்னை கிழக்கு மண்டல ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விடுமுறை தினங்களில் மெரினாவை நோக்கி மக்கள் தஞ்சம் அடைகிறார்கள், அப்போது அசம்பாவிதகங்களை தவிர்க்கும் வகையில் இதனை நடைமுறை படுத்தவுள்ளனர். அதனையும் மீறி 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் குளித்தால் அவர்கள் பெற்றோர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று காவல்துறை எச்சரித்துள்ளனர்.

விரைவில் தமிழகத்தில் மின்சார பேருந்துகள் – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையிலும், வெப்பமடைவதை தடுக்கும் வகையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, மதுரை, கோவையில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும். இதனால் புகையால் எற்படும் மாசு குறையும் என்று போக்குவரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.முதல் கட்டமாக 2000 பேருந்துகள் இயக்க பட உள்ளது.