T. T. V. Dhinakaran

வேட்பாளர் இறுதி செய்வது தொடர்பாக சசிகலாவை சந்தித்தார் டிடிவி தினகரன்

மக்களவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 39 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மேலும் வருகின்ற 18 தொகுதிக்கான சட்டமன்றத் தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து தான் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் அமமுக மூத்த நிர்வாகிகளும் டிடிவி தினகரன் அவர்களும் ஆலோசித்து வருகின்றார்கள். இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சசிகலாவின் கருத்துக்களை கேட்டறிய பெங்களூரு அக்ரஹார சிறையில் அவரை சென்று சந்தித்தனர். பின்பு செய்தியாளர் சந்தித்த டிடிவி தினகரன் மிக விரைவில் வேட்பாளர் பட்டியலும் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படும், என்றார்.

வேட்பாளர் பட்டியலை விரைவில் வெளியிடுகிறார் தினகரன்

AMMK: நாடாளுமன்ற தேர்தல் குறித்து அமமுக ஆலோசனை கூட்டம் அக்கட்சி துணை பொதுசெயலாளர் டிடிவி.தினகரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் நாளை அதிகாரப்பூர்வமாக வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அமமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பல்வேறு கட்சிகள் தொகுதி உடன்பாட்டில் எந்த முடிவும் எட்டப்படாததால் கூட்டணிக்கு வருவதை தவிர்த்துவிட்டன. மேலும் 18 தொகுதிக்கான வேட்பாளர்களையும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மிக விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MLA Karunas: நான் சசிகலா ஆதரவாளர் என கருணாஸ் பேட்டி

MLA Karunas : நான் என்றுமே சசிகலாவின் ஆதரவாளர் என்றும் தினகரன் எனக்கு சொந்தக்காரர் என்றும் கருணாஸ் பேட்டியளித்துள்ளார். அம்மா அவர்களால் கட்டமைக்கப்பட்ட இந்த ஆட்சியை களைக்ககூடாது என்பதை தவிர எனக்கு இந்த அரசின் மீது சிறிதும் உடன்பாடில்லை. இந்த அரசுடன் சண்டை போட்டாலும் எந்த பயனும் இல்லை, மேலும் தமிழகத்தில் மத்திய அரசினுடைய ஆட்சி நடைபெறுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.