Pulwama terror attack

அரசியல் லாபத்திற்காக கிரிக்கெட்டை குறிவைக்கக் கூடாது

புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் கிரிக்கெட் போட்டிகளை குறிவைப்பது வேதனையளிப்பதாக என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது பேசியுள்ளார். உலகக் கோப்பை அட்டவணைப்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி நடைபெற வேண்டும்.இதற்காக ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.அரசியல் லாபத்திற்காக கிரிக்கெட்டை குறிவைக்கக் கூடாது என நான் நினைக்கிறேன்.

Pulwama Attack: இதயத்தில் நெருப்பு எரிகிறது பிரதமர் ஆவேசம்

Pulwama  Terror Attack: இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி நேற்று பாட்னாவில் நடந்த நிகழ்வில் உரையாற்றினார். அப்போது அண்மையில் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 44 பேர் உயிரிழந்தனர். இது குறித்து பேசிய பிரதமர் மோடி, என் இதயத்தில் நெருப்பு எறிவதாக பிரதமர் மோடி ஆவேசமாக பேசினார். மேலும் பாமர மக்களுக்காக பல்வேறு திட்டங்களை பா.ஜ.க. அரசு செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

Pulwama Terror Attack: புல்வாமா தாக்குதலினால் இணையத்தில் இளைஞர்கள் கொந்தளிப்பு

Pulwama Attack: சமீபத்தில் புல்வாமா பகுதியில் ராணுவ வீரர்கள் மீது நடந்து தீவிரவாத தாக்குதலில் தமிழகர்கள் இருவர் உட்பட 44 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தால் நாடே கதிகலங்கியுள்ளது. மேலும் சமூக வலைதளத்தில் பல இளைஞர்கள் இச்சம்பவத்திற்கு பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற வாசகம் பதிவிட்டு வருகிறார்கள். இது தொடர்பாக பிரதமர் “ ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது” என கூறியதை பலர் வரவேற்று பதிவிடுகின்றனர்.

Pulwama Attack Latest News: 15 நிமிடத்திற்கு பெட்ரோல், டிசல் விநியோகத்தை நிறுத்தி வீரர்களுக்கு அஞ்சலி

Pulwama Attack Latest Updates :வீர மரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள பெட்ரோல் பங்குகளில் 15 நிமிடம் பெட்ரோல், டிசல் விநியோகத்தை நிறுத்தி அஞ்சலி செலுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது, இன்று இரவு 8 மணிமுதல் 8.15 வரை அஞ்சலி செலுத்தப்படுகிறது.