கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் என்ற பெயரில் புது ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. அதற்காக 500 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி இதில் பங்கேற்கும் தொழிலாளர்களுக்கு 60 வயதிற்கு பிறகு மாதம் ரூபாய் 3000 ஓய்வூதியம் வழங்கப்படும். இதனிடையே இந்த திட்டம் வரும் 15ஆம் தேதி அமலாகும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.