Pakistan

அபிநந்தனுக்கு மருத்துவ பரிசோதனை துவங்கியது

IAF Wing Commander Abhinandan: பாகிஸ்தான் வசம் இருந்த அபிநந்தன் இன்று விடுவிக்கப்படுவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்திருந்தது அதேபோல் வாகா எல்லையில் இந்திய ராணுவ வீரர்களிடம் அவரை ஒப்படைக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டிருந்தது. அதேபோல் சற்று நேரத்திற்கு முன்பாகவே எல்லையை வந்தடைந்தார் அபிநந்தன். அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்து வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவரை வரவேற்பதற்காக பஞ்சாப் எல்லையில் இந்திய மக்கள் தேசியக் கொடியோடு காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தாயகம் திரும்பினார் அபிநந்தன்

Abhinandan Return India: பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட இந்திய விமானப்படை வீரர் இந்தியா வந்தடைந்தார். இது இந்தியர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. வாகா எல்லை பகுதிக்கு அபிநந்தன் வந்து விட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. முதலில் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என பஞ்சாப் முதல்வர் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அவர் டெல்லி வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானில் இருந்து அபிநந்தன் வாகா வழியாக இன்று இந்தியா வருகிறார்

Wing Commander Abhinandan: இந்திய விமானப்படை கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் இன்று விடுவிக்கிறது. பிற்பகல் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்படுவார். ராவல்பிண்டி ராணுவ முகாமில் இருந்து லாகூருக்கு விமானத்தில் அழைத்து வரப்படுகிறார். பின்பு லாகூரில் இருந்து சாலை மார்க்கமாக வாகா எல்லை வழியாக இந்தியா அழைத்து வரப்படுகிறார்.

நாளை விடுவிக்கப்படுகிறார் அபிநந்தன், பாகிஸ்தான் அரசு அறிவிப்பு

IAF Pilot: இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் அண்மையில் பாகிஸ்தான் அரசால் கைதுசெய்யப்பட்டார். அவரை விடுவிக்க வேண்டும் என இந்தியா பாகிஸ்தானிடம் கோரிக்கை வைத்தது, மேலும் பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சகத்தை இந்திய தூதர்கள் நேரில் சென்று வலியுறுத்தினர். அதன் பின்னர் நாளை விமானப்படை வீரர் அபிநந்தன் விடுவிக்கப்படுவதாக நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார் இது இந்தியர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சி பிரதமர் ஆவேசம்

PM Modi: இந்திய வளர்ச்சியை பொறுக்கமுடியாமல் பாகிஸ்தான் இந்தியாவை சீர்குலைக்க முயற்சிப்பதாக பிரதமர் மோடி ஆவேசமாக பேசியுள்ளார். மேலும் விமானி அபிநந்தன் பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவின் பாதுகாப்பை உறுதிசெய்ய முப்படை தளபதிகளுடன் மோடி ஆலோசித்து வருகிறார்.

இந்திய விமானி அபிநந்தனை பத்திரமாக ஒப்படைக்க இந்தியா வலியுறுத்தல்

IAF Pilot: பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடி தரும் விதமாக நேற்று அதிகாலை இந்திய விமானப் படை வீரர்களால் பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தப்பட்டது அப்போது துரதிஷ்ட விதமாக இந்திய விமானி ஒருவர் பாகிஸ்தான் வசம் சிக்கிக் கொண்டார். அவரை பத்திரமாக மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது, இது தொடர்பாக பாகிஸ்தான் நாட்டிற்கு இந்திய தூதரக அதிகாரி நேரில் சென்று வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தான் வசம் உள்ள அபிநந்தன் சென்னையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

போர் சூழலை இந்திய அரசு தடுக்க வேண்டும் திருமாவளவன் கோரிக்கை

கடந்த வாரத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றது இதில் ராணுவ வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இந்தியாவில் போர் சூழலை மத்திய அரசு ஏற்படுத்தி விடக்கூடாது என கோரிக்கை வைத்துள்ளார்.

பாலகோட் இந்திய விமானப்படை தாக்குதல்

IAF strikes Pakistan: கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி புல்வாமா மாவட்டத்தில் இந்திய ராணுவ படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் மரணமைடைந்தனர். இந்த நிகழ்வு நாட்டு மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. மேலும் அமெரிக்கா உட்பட பல நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தனர். இந்த தருணத்தில் பாகிஸ்தான் பகுதியில் உள்ள தீவிரவாத முகாமை இந்திய இராணுவம் தகர்த்துள்ளது சிலருக்கு அதிர்ச்சியையும் சிலருக்கு ஆச்சிரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தக்க பதிலடி தந்த இந்திய விமானப்படை.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தவறு செய்தவர்கள் நிச்சயம் பதில் சொல்ல நேரிடும் என கூறியிருந்தார். இந்தியா சார்பாக பதிலடி கொடுக்கப்படும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் இன்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது அதிரடி தாக்குதலை நிகழ்த்தியுள்ளது இந்திய விமானப்படை.

தாக்குதல் நடந்தது எப்படி?

இந்திய விமானப்படை இன்று பாகிஸ்தானில் இயங்கிவரும் தீவிரவாத முகாம்கள் மீது குண்டு வீசி தகர்த்தது. இந்திய விமான படையின் மிராஜ் 2000 என்ற 12 போர் விமானங்கள் மூலம் இன்று அதிகாலை 3.30 மணிக்கு பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்ததாக தெரிகிறது. ஆயிரம் கிலோ அளவிலான வெடிபொருட்கள் மற்றும் ஆறு குண்டுகள் இந்த தாக்குதலில் பயன்படுத்தப் பட்டதாக தெரிகிறது. தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக இந்திய விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாபெரும் ஆறுதல்

இந்த நிகழ்வு கடந்த வாரம் மரணமடைந்த 40க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு இது ஆறுதலாக அமையும் என கூறப்படுகிறது. மேலும் இந்திய விமானபடைக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்தியா மீது கைவைத்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என எதிரிகளை எச்சரிக்கும் விதமாக இந்த தாக்குதல் அமைந்துள்ளது.

அடுத்து என்ன ?

முதலில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு இந்திய இராணுவத்தை தாக்கியது. அதற்கு பதிலடியாக இந்திய விமானப்படை அந்நாட்டு தீவிரவாத அமைப்பை தாக்கியது. இதோடு நிற்குமா அல்லது மாறி மாறி தாக்குதல் நடைபெறுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. மக்களை பொருத்தவரை சுமூகமான சூழல் தான் தேவை.

இரு நாட்டு போரில் இந்தியா வெற்றி என்ற செய்தியை விட இந்தியாவில் அமைதியான சூழல் நிலவுகிறது என்ற செய்திதான் மகிழ்ச்சியை தரும். மேலும் சில கட்சிகள் இதனை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவது கண்டிக்கத்தக்கது என்பதே மக்களின் ஒருமித்த கருத்து.

Pulwama Attack: புல்வாமா தாக்குதல் எதிரொலி – பாகிஸ்தான் இறக்குமதிக்கு சுங்க வரியை அதிகரித்தது இந்தியா

Pulwama Attack: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தானை மையமாக கொண்ட ஜெய்ஷ்- இ- முகமது என்கின்ற தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 44 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாகும் பொருட்கள் மீதான சுங்க வரியை இந்தியா அரசு 200% உயர்த்தியுள்ளது. இது உடனே அமலுக்கு வரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.