no family politics says kamal haasan

மக்கள் நீதி மையம் வேட்பாளர்கள் 24ஆம் தேதி அறிமுகம்

மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சியின் வேட்பாளர் அறிமுக விழா கோயம்புத்தூரில் 24ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதில் மக்கள் நீதி மையம் தனித்துப் போட்டியிடுகிறது. வருகிற 24-ஆம் தேதி மாலை 6 மணியளவில் நடைபெற உள்ள கூட்டத்தில் நிகழ்ச்சியில் மக்களவை தொகுதி வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்படுவார்கள் என கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச் லைட் சின்னம்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம். கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் “இணைந்த கைகள்” சின்னத்தை ஒதுக்குமாறு கோரிக்கை வைத்தது ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு பிறகு வேறு எந்த கட்சிக்கும் உடலுறுப்புகளை சின்னமாக வழங்குவதில்லை என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டதால் அதில் சிக்கல் ஏற்பட்டு விட்டது. மேலும் அதைத் தொடர்ந்து விசில், பேனா, டார்ச் லைட் ஆகியவற்றில் ஒரு சின்னம் ஒதுக்கும்படி மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யத்தை பொறுத்தவரை குடும்ப அரசியல் இருக்காது கமல் திட்டவட்டம்

மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது என் காலத்திற்கு பிறகு என் குடும்பத்தைச் சார்ந்தவர்களோ, மகளோ என் மைத்துனரோ கட்சியை எடுத்து நடத்த மாட்டார்கள் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் வாக்களிப்பதற்கு பணம் வாங்குவதை மக்கள் அறவே நிறுத்திவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். 5000 , 10000 வாங்குவது நீங்கள் நிறுத்திவிட்டு நல்லவர்களுக்கு வாக்களித்தால் ஐம்பதாயிரம், ஒரு லட்சம் வரை நீங்கள் சம்பாதிப்பதற்கான வழிகள் வகுக்கப்படும் என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.