Melbourne

ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வரலாற்று சாதனை படைத்தது இந்தியா

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடந்த மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் இந்திய அணி அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்திய அணி முதல் முறையாக ஆஸ்திரேலியா மண்ணில், அந்நாட்டுக்கு எதிராக ஒருநாள் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

சுழற்பந்து வீச்சாளர் சாஹல் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனை

மெல்போர்ன் மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 10 ஓவர்கள் வீசிய இந்திய பந்து வீச்சாளர் சாஹல் 42 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் 6 விக்கெட் வீழ்த்திய 2-வது இந்திய பந்து வீச்சாளர் என்றும், ஒட்டுமொத்தமாக 3-வது இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.

3-வது ஒரு நாள் போட்டி: 230 ரன்களில் ஆல்-அவுட் ஆனது ஆஸ்திரேலியா

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி போட்டி இன்று மெல்பரன் கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியல் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடி வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, 48.4 ஓவர்களில், 230 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 231 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி களமிறங்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது போட்டியில் முதல் முறையாக களமிறங்கும் தமிழக வீரர்

மெல்பேர்னில் நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் தமிழக வீரர் விஜய் சங்கர் முதல் முறையாக களம் இறங்க உள்ளார். இரு அணிகள் இடையேயான 3 ஒரு நாள் போட்டித் தொடரில், முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 34 ரன்னில் வென்றது. 2-வது போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர் 1-1 என்ற சமநிலையில் இருக்கிறது.