பராமரிப்பு பணி காரணமாக இன்று மற்றும் நாளை சென்னையில் மின்சார ரயில் சேவையில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பராமரிப்பு பணி காரணமாக இன்றும், நாளையும் சில மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், காலை 6.40க்கு கிளம்பும் ஆவடி-மூர்மார்க்கெட் டிரெயின், இரவு 9.50க்கு வரும் சூலூர்ப்பேட்டை-மூர்மார்க்கெட் டிரெயின், காலை 7.45-க்கு வரும் மூர்மார்க்கெட்-சூலூர்ப்பேட்டை, ஆகிய ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.