Kamal Haasan

மக்கள் நீதி மையம் வேட்பாளர்கள் 24ஆம் தேதி அறிமுகம்

மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சியின் வேட்பாளர் அறிமுக விழா கோயம்புத்தூரில் 24ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதில் மக்கள் நீதி மையம் தனித்துப் போட்டியிடுகிறது. வருகிற 24-ஆம் தேதி மாலை 6 மணியளவில் நடைபெற உள்ள கூட்டத்தில் நிகழ்ச்சியில் மக்களவை தொகுதி வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்படுவார்கள் என கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ரஜினி ஆதரவளிப்பார் என நம்புகிறேன், கமல் பேச்சு

வருகின்ற மக்களவை தேர்தலிலும், 18 சட்டமன்ற தொகுதி இடைதேர்தலிலும் நான் போட்டியிடபோவதில்லை என அண்மையில் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். மேலும் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் கட்சிக்கு உங்கள் வாக்கை செலுத்துங்கள் எனவும் கூறினார். இந்த வேளையில் ரஜினி எங்கள் கட்சிக்கு ஆதரவு அளிப்பார் எனக்கு நம்பிக்கையுள்ளது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் வருகின்ற மக்களவை தேர்தலில் நான் நிச்சயம் போட்டியிட போகிறேன், எந்த தொகுதி என்பது மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச் லைட் சின்னம்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம். கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் “இணைந்த கைகள்” சின்னத்தை ஒதுக்குமாறு கோரிக்கை வைத்தது ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு பிறகு வேறு எந்த கட்சிக்கும் உடலுறுப்புகளை சின்னமாக வழங்குவதில்லை என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டதால் அதில் சிக்கல் ஏற்பட்டு விட்டது. மேலும் அதைத் தொடர்ந்து விசில், பேனா, டார்ச் லைட் ஆகியவற்றில் ஒரு சின்னம் ஒதுக்கும்படி மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யத்தை பொறுத்தவரை குடும்ப அரசியல் இருக்காது கமல் திட்டவட்டம்

மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது என் காலத்திற்கு பிறகு என் குடும்பத்தைச் சார்ந்தவர்களோ, மகளோ என் மைத்துனரோ கட்சியை எடுத்து நடத்த மாட்டார்கள் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் வாக்களிப்பதற்கு பணம் வாங்குவதை மக்கள் அறவே நிறுத்திவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். 5000 , 10000 வாங்குவது நீங்கள் நிறுத்திவிட்டு நல்லவர்களுக்கு வாக்களித்தால் ஐம்பதாயிரம், ஒரு லட்சம் வரை நீங்கள் சம்பாதிப்பதற்கான வழிகள் வகுக்கப்படும் என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

ரஜினி கமல் கூட்டணி வைக்க வேண்டும் விஷால் கருத்து

தமிழக நலன் கருதி கமலும் ரஜினிகாந்த் அவர்களும் ஒன்று சேர்ந்து அரசியலை முன்னெடுக்க வேண்டும் என நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் ரஜினிகாந்தோடு கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு கமல் ஹாசன் “ரஜினி கட்சி ஆரம்பித்த பின்பு பார்ப்போம்” என கூறியுள்ளார்.

கமல்ஹாசன், பாரிவேந்தர் கூட்டணி அமைக்க வாய்ப்பு

Lok Sabha 2019: மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். ஆனால் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கமல் ஒருமித்த கருத்துடைய கட்சிகளோடு கூட்டணி அமையலாம் என தெரிவித்தார். இந்த நிலையில் எஸ் ஆர் எம் குழும நிறுவனத் தலைவரும் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் திரு பாரிவேந்தர் அவர்கள் கமல்ஹாசனோடு இணைந்து தேர்தலை சந்திக்க அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

கமலை மனதார வாழ்த்திய ரஜினிகாந்த்

முதல் முறையாக தேர்தலில் போட்டியிடப் போகும் கமல்ஹாசனுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்திய ரஜினிகாந்த் “கட்சி ஆரம்பித்து இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து தேர்தலில் முதல் முறையாக போட்டியிட போகும் மக்கள் நீதி மய்யதின் தலைவர் என் நண்பர் கமல்ஹாசன் அவர்கள் பொது வாழ்விலும் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்” என வாழ்த்தினார்.

நாங்கள் தான் தமிழகத்தின் A டீம் – கமல்ஹாசன்

Makkal Needhi Maiam: நெல்லை பொதுக்கூட்டத்தில் நேற்று பேசிய கமல்ஹாசன் என்னைப் பார்த்து பாஜகவின் B டீம் என்று சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை நாங்கள் தான் தமிழகத்தின் A டீம். இதில் மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகளை வெளியிட்ட கமல்ஹாசன் தனது கட்சி சார்பாக பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் விருப்பமனு வெளியிட்டார். ஊழலை ஒழிக்க நினைக்கும் ஒவ்வொருவரும் வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வேட்பாளராக வரவேண்டும். நல்லவர்கள் நாட்டின் மீது பற்று கொண்டவர்கள் அனைவரும் எங்கள் கட்சி சார்பாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் அளிக்கலாம்” என்றார்.

ராமதாஸ் இல்லத்தில் ஓபிஎஸ், இபிஎஸ்க்கு விருந்து

Lok Sabha 2019: மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி அதிமுகவோடு கூட்டணி வைத்துள்ளது. மேலும் தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த வேளையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் விருந்திற்காக தனது இல்லத்திற்கு அழைத்திருந்தார். அழைப்பை ஏற்று முதல்வர் துணை முதல்வர் அமைச்சர் பெருமக்கள் வருகை புரிந்தனர். மக்களவைத் தேர்தல் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றி விவாதித்ததாக தெரிகிறது.

எதிர்க்கட்சிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் – முதல்வர் பேச்சு

Tindivanam: மக்களவைத் தேர்தலில் அதிமுக பாஜக பாமக கூட்டணி மாபெரும் வெற்றி பெறப்போகிறது. மத்திய அரசிடமிருந்து போதுமான நிதியை பெற்று தமிழகத்தின் வளத்தை பெருக்கும் ஒரே ஆட்சி அதிமுகவின் ஆட்சி தான் மேலும் வரும் மக்களவை தேர்தல் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகி வருகின்றனர் என்று தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

கமலை விட நாங்கள் மூத்தவர்கள் – சீமான்

Lok Sabha Elections 2019: நேற்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூட்டணி பற்றிய செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தார். “கூட்டணிக்கு கமல்ஹாசன் அழைப்பு விடுத்திருப்பது அவரது எதிர்பார்ப்பு, விருப்பம். அரசியல் களத்தில் ஓராண்டு நிறைவு செய்துள்ள அவரை விட எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக களப்பணியாற்றி வரும் நாங்கள்தான் மூத்தவர்கள். ஆட்சியின் செயற்பாட்டு வரைவை வெளியிட்டு 2016 சட்டமன்ற தேர்தலை சந்தித்துள்ளோம். நாடாளுமன்ற தேர்தலும் 20 பெண்கள் 20 ஆண்கள் போட்டியிடுகின்றனர். எனவே அவர்தான் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் ” மேலும் தமிழக மக்கள் பாஜக கூட்டணியை 200% நிராகரிப்பார்கள் நிராகரிக்கவைப்போம். அதற்காகவாவது நாங்கள் தேர்தல் களத்தில் போராடுவோம். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து மட்டுமே போட்டியிடுவோம் என்றார்.

கமல்ஹாசன்-பாரிவேந்தர் சந்திப்பு

Makkal Neethi Maiam: மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் சில கட்சிகள் கூட்டணி அறிவிப்புகளையும் தொகுதி பங்கீடு களையும் அறிவித்து வருகின்றனர் இந்த வேளையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனும் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது இவர்கள் கூட்டணி குறித்து பேசி இருப்பார்களோ என்ற கேள்வியும் எழுகிறது.

கமல் மக்கள் நீதி மய்யம் மூலம் ஒரு ஆண்டு காலம் சாதித்தது என்ன?

Makkal Neethi Maiam: எம் ஜி ஆர், ஜெயலலிதா, விஜயகாந்துக்கு பிறகு சினமா துறையில் இருந்து அரசியலுக்கு அடியெடுத்து வைப்பது கமல் என்னும் மாபெரும் நடிகனே. சினிமா துறையில் பல நடிகர்கள் தன்னுடைய அரசியல் விசிட்டை இப்பொழுது அப்பொழுது என்று இழுத்தடித்துக்கொண்டு இருக்கும் சமயத்தில் கமல் அதிரடியாக பிப்ரவரி 21 2018 அன்று மதுரையில் தன்னுடைய அரசியல் கட்சியை தொடங்கினார்.

பொதுவாக ஜெயலலிதாவிற்கு அடுத்து எந்த நடிகர் அரசியலுக்கு வர முயற்சித்தாலும் அவர்கள் சந்திக்கும் கேள்விகள் பல “அரசியலுக்கு வந்திங்கனா விஜயகாந்த் மாறி ஆகிடுவீங்க, கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர் ஆகிட முடியாது. நீங்க சினிமாவுல அரசியல் பேசறதோட நிறுத்திக்கோங்க” இதே போல் பல கேள்விகளை தினசரி சந்திப்பது உண்டு. இதையெல்லாம் தாண்டி கமல் தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் ஒரு வருடத்தை கடந்துள்ளார்.

ஆரம்பித்த ஒரு வருடத்தில் 8 லட்சத்திற்கும் மேலான உறுப்பினர்கள் மக்கள் நீதி மய்யத்தில் பதிவு செய்துள்ளனர். அதை தவிர்த்து மகளிர் அணி, மாற்று திறனாளிகளுக்கான அணி என ஒவ்வொரு துறைக்கும் தலைவர்களும், மாநில வாரியான பொறுப்பாளர்களையும் அறிவித்தார்.

சரி, தன்னுடைய ஒரு ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் எந்த மாதிரியான சாதனையை கமல் செய்துள்ளார் என்பதை சிறிதளவு பார்ப்போம்.

பிப்ரவரி மாதம் கட்சி தொடங்கியதும் மாதம் முழுவதும் கட்சி உறுப்பினர் சேர்க்கை, மக்களை சந்திப்பது, மாணவர்களை கல்லூரியில் சந்திப்பது என கட்சியை வலுப்படுத்துவதற்கான முழு வேலையை செய்தார்.

மார்ச் மாதம் தன் கட்சி உறுப்பினர்களுக்கான பணி நியமனம், மகளிர் அணியை வலுப்படுத்துதல் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியான உழவன் விருதுகள் நிகழ்வில் பங்கேற்றார்.

ஏப்ரல் மாதத்தில் கிராம சபை கூட்டதிற்கான முழு வேலைகளிலும் ஈடுபட்டார். பின் விசில் என்ற செயலியையும்
அறிமுகப்படுத்தி, இதில் மக்கள் தங்களுடைய எல்லாவிதமான பிரச்சனைகளை பற்றியும் பதிவேற்றம் செய்யலாம் என அறிவித்தார்.

மே மாதம் தமிழ்நாட்டேயே அதிர்ச்சி அடைய செய்த தூத்துக்குடி துப்பாக்கிச் சுட்டில் நடந்தவைகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தை பார்வையிட்டார். அதன் பின் கர்நாடக முதலமைச்சர் பதவி ஏற்பிலும் கலந்துகொண்டு காவேரி பிரச்சனையை பற்றி குமாரசுவாமியிடம் முறையிட்டார்.

ஆகஸ்ட் மாதம் கலியாப்பூண்டி, செங்கட்டூர் பாக்கம், நாமிழஞ்சேரி, தீந்துபாளையம் போன்ற பல மாவட்டங்களில் கிராமசபை கூட்டத்தை அவர்களுடைய கட்சி தொண்டர்கள் மூலம் நடத்தினார். அதே சமயம் கட்சியினுடைய மாவட்ட நிர்வாகிகள் பற்றிய பட்டியலையும் வெளியிட்டு உடனடியாக செப்டம்பர் மாதத்தில் மாநில உறுப்பினர்களுக்கான பயிற்சி பட்டரையம் நடத்தினார்.

நவம்பர் மாதம் தஞ்சை மாவட்டத்தினுடைய மாபெரும் கஜா புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

ஜனவரி அன்று ஊர்மக்களுக்கு தன்னலம் இன்றி சேவை செய்பவர்களுக்கான சான்றோர் விருதுகளை தன் கட்சியின் மூலம் சிறந்த 11 நபர்களுக்கு கடலூரில் வழங்கினார். தன்னுடைய புதுச்சேரி அமைப்பையும் தொடங்கினார்.

இப்படி ஒரு ஆண்டுக்கான பணிகளை கமல் தன்னுடைய கட்சி தொண்டர்கள் மூலம் செய்துள்ளார்.

இந்த ஒரு ஆண்டு காலத்தில் அவர் செய்த விஷயங்களில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று ஒவ்வொரு மக்களுக்குமே தங்களுடைய பகுதி பிரச்சனைகளை தீர்மானித்து அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டியது அவசியம் என்பதை கிராம சபைக்கான விழிப்புணர்வு மூலம் மக்களுக்கு
கொண்டு சென்றது.

மக்கள் நீதி மய்யம் கட்சி பொறுப்புகளில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருமே அவர்களுடைய வாழ்க்கை போக்கின் வெற்றி, மற்றும் சமூக அக்கறையை கண்டுதான் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

வரும் மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக கூறியுள்ளார். ஊழல் கட்சிகளிடம் கூட்டணி ஒருபோதும் இருக்காது எனவும் கூறியுள்ளார்.

வலதும் இல்லாமல் இடதும் இல்லாமல் மய்யமாக பயணித்து கொண்டு இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியினுடைய மக்களவை தேர்தல் ஆட்டத்தை மக்கள் காண காத்துகொண்டு இருக்கின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது

Makkal Neethi Maiam One Year Completion: நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை 2018 பிப்ரவரி 21ஆம் தேதி மதுரையில் தொடங்கினார். வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். அதற்காக கட்சிக் கொடிகள் எல்லாம் ஏற்றப்பட்டது. பின்பு மக்களவை தேர்தலில் தான் போட்டியிடுவதாக இல்லை என்றும் கூறியுள்ளார். மக்கள் நீதி மையம் ஆரம்பித்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைவதால், இன்று காலை ஏழு முப்பது மணி அளவில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவருடைய கட்சி அலுவலகத்தில் கொடி ஏற்றினார்.

பின் மாலை 3.30 மணி அளவில் வேதாரண்யம் தொகுதியில் உள்ள மீனவர்களுக்கு வலை வழங்க உள்ள கமல்ஹாசன் மாலை ஆறு முப்பது மணிக்கு மேல் திருவாரூர் தொகுதியில் உரையாற்ற உள்ளார்.

வரும் 24ம் தேதி நெல்லையில் கட்சியின் ஓராண்டு நிறைவிற்காக பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இதில் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்கலாம் என்று அவருடைய கட்சி தொண்டர்கள் கூறி வருகின்றனர்.

வருகின்ற மார்ச் 10 அன்று இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடத்த உள்ளதாகவும் அவர்களுடைய கட்சியினர் கூறி உள்ளனர்.

ரஜினிகாந்த் மகள் திருமணம் – குவியும் பிரபலங்கள்

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா, நடிகரும் தொழில் அதிபருமான விசாகன் வணங்காமுடியை இன்று மணந்தார். இவர்களது திருமணம் சென்னை லீலா பேலஸில் நடந்தது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், ம தி மு க பொது செயலாளர் வைகோ, மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல ஹாசன் என அரசியல் பிரபலங்கள் பலரும் விழாவில் கலந்து கொண்டனர்.

இன்று முதல் தொடங்குகிறது கமலின் இந்தியன் 2 படப்பிடிப்பு

22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கமலை வைத்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன் 2 படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். 2.0 படத்தைப் போலவே இந்தப் படத்தையும் லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடிக்க, சித்தார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர் இந்த படத்தின் இன்று முதல் தொடங்குகிறது.