Jayalalithaa

அனல் பறக்கும் தமிழக தேர்தல் களம், என்ன பேசினார் மோடி?

இந்திய நாட்டின் 17வது மக்களவை தேர்தல் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் இறுதியில் நடைபெறவுள்ளது. அதனை கருத்தில் கொண்டு அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளது. அந்த நிகழ்வில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஸ், பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞர் அணி செயலாளர் அன்புமணி ராமதாஸ், மற்றும் தமிழக பாஜக தலைவர்கள் உட்பட பல கூட்டணி கட்சித் தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். தமிழகத்தில் திமுக சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளது எனவும் கூறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் கூறித்தும் பேசினார்.

பிரதமர் மோடி அறிவித்த திட்டங்கள்

  • தமிழகம் வந்து செல்லும் அனைத்து விமானங்களிலும் தமிழில் அறிவிப்பு செய்யப்படும் என்றார்.
  • மேலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும் எனவும் அறிவித்தார்.
  • இலங்கை கடற்படையிடம் சிக்கி கொண்ட 1900 மீனவர்களை மத்திய அரசு மீட்டு கொடுத்துள்ளதையும் கூறிப்பிட்டார்.
  • இது போன்ற விஷயங்களை குறிப்பிட்ட பிரதமர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். அப்போது தனது வெறுப்புகளை வெளிப்படுத்த மாநில ஆட்சிகளை காங்கிரஸ் கட்சி கலைத்து இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மாநில அரசுகளின் தேவைகளை பூர்த்தி செய்யாமல் நாடு முன்னேற முடியாது என்றார். நாட்டின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு எவ்விதமான நடவடிக்கை எடுத்துவருகிறது என்பது குறித்து உங்கள் அனைவருக்கும் தெரியும் என்றார். எதிர்கட்சிகளின் விமர்சனங்களும், எதிர்ப்புகளும் என்னை சோர்வடைய செய்யாது என்றார். தமிழக மக்கள் அனைவரும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் என கோரிக்கை விடுத்தார். நிறைவாக பேசிய பிரதமர் நாற்பதும் நமதே நாடும் நமதே என்ற வாசகத்துடன் தனது உரையை நிறைவு செய்தார்.

    மீண்டும் வருவாரா மோடி ?

    பிரதமர் மோடி பாஜக பொதுகூட்டங்களில் கலந்து கொள்ள மீண்டும் தமிழகம் வருவார் என்று பாஜக பிரதிநிதிகள் தகவல் சொல்கிறார்கள். இந்த மக்களவை தேர்தலுக்கு பிறகு மோடி மீண்டும் பிரதமராக வருவாரா என்ற கேள்விக்கான துள்ளியமான பதிலை மக்கள் மிக விரைவில் தெரிவிப்பார்கள்.

    மீண்டும் வருமா பாஜக அல்லது மீண்டு வருமா காங்கிரஸ், மக்களவை தேர்தலில் மக்களின் பதிலுக்காக காத்திருப்போம்.

    உங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் ? ஓபிஸ் கேள்வி

    அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்ட மாபெரும் மாநாடு நேற்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. அதில் பேசிய தமிழக துணை முதல்வர் ஓபிஸ், எதிர்கட்சியினரை பார்த்து “உங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என உங்களால் கூற முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பேசிய அவர் செல்வி ஜெயலலிதா அவர்கள் இருந்திருந்தால் கூட்டணி விஷயத்தில் அவர் என்ன செய்திருப்பாரோ, அவரது தீவிர விஸ்வாசியாகிய நாங்களும் அதனையே செய்துள்ளோம் என்றார்.

    சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் – மோடி அறிவிப்பு

    அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பாக நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர், பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உட்பட பல கட்சித் தலைவர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய பிரதமர் மோடி சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும் என அறிவித்தார். மேலும் பேசிய பிரதமர் தமிழகம் வந்து செல்லும் விமானங்களில் தகவல்கள் தமிழில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார், இறுதியில் “நாற்பதும் நமதே நாடும் நமதே” என கூறி உரையை நிறைவு செய்தார்.

    குக்கர் சின்னத்தை பெறுவோம் டிடிவி தினகரன் நம்பிக்கை

    AMMK: நேற்று உயர்நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில் இரட்டை இலைச் சின்னம் தற்போதைய முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் செயல்படும் அதிமுகவிற்கே உரியது எனவும் டிடிவி தினகரனுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க முடியாது எனவும் தீர்ப்பளித்திருந்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உச்ச நீதிமன்றத்தை நாடி குக்கர் சின்னத்தை பெற ஆமமுககவுக்கு உரிமை உள்ளது எனவும் நிச்சயம் நாங்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் குக்கர் சின்னத்திலேயே போட்டியிடுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இரட்டை இலை சின்னம் தினகரனுக்கு இல்லை, உயர்நீதிமன்றம் உத்தரவு

    இரட்டை இலைச் சின்னத்தை பெற வேண்டும் என்ற நோக்கில் டி டி வி தினகரன் அவர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது, பல கட்ட விசாரணைக்கு பிறகு இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கு தான் என்ற தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கிறது, இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் இரட்டை இலையை எந்த கொம்பனாலும் முடக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

    ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடையில்லை. உயர் நீதிமன்றம் உத்தரவு

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தமிழக அரசு ஆணையம் ஒன்றை அமைத்தது. இதனிடையே அந்த ஆணையம் தங்களது மருத்துவமனைக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் படி நடந்து கொள்வதால் ஆணையத்தின் விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அப்பல்லோ மருத்துவ குழுமம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.அதை விசாரித்த நீதிபதிகள் ஆணையத்தின் விசாரணைக்கு தடைவிதிக்க மறுத்ததோடு வருகின்ற 15ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற ஆட்சேபனை இல்லை: வருமான வரித்துறை

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் ரூ. 16.75 கோடி வரி பாக்கிக்காக 2007ம் ஆண்டு முதல் முடக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல் தெரிவுத்துள்ளது. கடந்த 2007ம் ஆண்டு முதலே ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு வருமான வரித்துறையின் முடக்கப்பட்ட பட்டியலில் உள்ளது என்றும், முடக்கத்தில் இருந்தாலும் ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற ஆட்சேபனை இல்லை என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

    மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்க தடை இல்லை – சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

    சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு மெரினாவில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு எதிராக நினைவிடம் அமைக்க தடை கோரி, ஜெயலலிதா நினைவிடம் கட்ட தடைகோரி வழக்கறிஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்திருந்த மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் தள்ளுபடி செய்தனர். இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிபதிகள், தலைவர்களுக்கு நினைவிடம் அமைப்பது அரசின் கொள்கை முடிவு, இதில் நீதிமன்றம் தலையிடாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.