Tag: flash news in tamil

சரஸ்வதி பூஜை அன்று கல்வியை தொடங்குவது ஏன்?

விஜயதசமி என்றால், வெற்றி தருகிற நாள் என்று அர்த்தம். நவராத்திரியின் போது தான் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாளில் நவமியில் மகிஷாசுரனை வதம் செய்தாள். மறுநாள் தசமியில் தேவர்கள் அந்த வெற்றியை ஆயுத பூஜை செய்து கொண்டாடியதால், நாமும் அதை விஜயதசமி என்று கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். மேலும் படிக்க

தொழிலில் வெற்றியை அருளும் விஜயதசமி – முழு விவரம்

விஜயதசமி என்றால், வெற்றி தருகிற நாள் என்று அர்த்தம். நவராத்திரியின் போது தான் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாளில் நவமியில் மகிஷாசுரனை வதம் செய்தாள். மறுநாள் தசமியில் தேவர்கள் அந்த வெற்றியை ஆயுத பூஜை செய்து கொண்டாடியதால், நாமும் அதை விஜயதசமி என்று கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம்.

இதையே கொல்கத்தா போன்ற வடமாநிலங்களில் துர்கா பூஜையை விஜயதசமியாகவும்,கொண்டாடுகிறார்கள். தேவியின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்ட அன்னையை ஊர்வலமாகக் கொண்டு செல்லும் வழக்கம் இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகிறது.

Vijayadasami Celebration

உலகம் போற்றும் மைசூரு தசரா பண்டிகையும் விஜய தசமி நாளில் தான் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மைசூரூ தசரா பண்டிகையில்,இடம்பெறும் ரத ஊர்வலத்தைக் காண நம்மூரில் இருந்து மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் அங்கு கூடுவது சிறப்பு.

சிறு குழந்தைகளுக்கு விஜயதசமி நன்னாளில் ,ஆரம்பக் கல்வியை தொடங்கினால், அவர்கள் மென்மேலும் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம். சரஸ்வதி பூஜை அன்று அடுக்கி வைத்த புத்தகங்களை மீண்டும் விஜயதசமி அன்று பூஜித்து நைவேத்தியத்துடன்,ஆரத்தி காட்டி அன்று சிலவரிகளாவது படித்தால் கல்வி மேலும் அபிவிருத்தி அடையும் என்பது நம்பிக்கை

Vijayadasami 01

ஆதிசங்கரர், ஒருமுறை தன்னுடைய சுற்றுப்பயணத்தின்போது மண்டனமிஸ்ரர் என்னும் ஞானியுடன் விவாதம் செய்து, வெற்றி பெற்றார். மண்டனமிஸ்ரர் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, சங்கரரின் சீடராகி அவருடனே புறப்படுகிறார்.

அப்போது மண்டனமிஸ்ரரின் மனைவியான சரசவாணி தன்னுடைய கணவரைப் பிரிய மனமில்லாமல் தானும் அவர்களுடன் வருவதாகக் கூற , ஆதிசங்கரர், பெண்களை தன் சிஷ்யைகளாக ஏற்றுக்கொள்வதில்லை என்று மறுத்தார். சரசவாணியோ தான் அவர்களுடன் கூடவே வராமல் அவர்களுக்குப்பின்னால் தொடர்ந்து வருவதாகவும், சங்கரரோ மற்ற சீடர்களோ திரும்பிப் பார்க்க வேண்டாம் எனவும், தன்னுடைய கால் கொலுசின் ஒலி கேட்பதை வைத்து, தான் வருவதை அறியலாம் என்றும் கூறுகிறாள்.

Vijayadasami-02

அப்படியில்லாமல் அவர்கள் திரும்பிப் பார்த்தால் அந்தக் கணமே பின் தொடருவது இல்லை என்றும் கூறவே, அதன்படியே பயணம் தொடருகிறது. சிருங்கேரி மலைக்கு வந்து சேர்ந்த சங்கரர், தன் சிஷ்யர்களுடன் மேலும் பயணத்தைத் தொடரும் முன்னால் அங்கே ஒரு கர்ப்பிணியான தவளை பிரசவித்துக் கொண்டிருக்க, அந்தத் தவளைக்கு வெயில் தாக்காதபடி ஒரு பாம்பு படம் உயர்த்தி குடை பிடிக்கும் அற்புதத்தைப் பார்க்கிறார்.

அந்தப் புனிதமான இடம் மகான் ரிஷ்யசிருங்கர் இருந்த அதே இடம் எனப் புரிந்து கொண்ட ஆதிசங்கரர் இந்த இடமே தானும் தன் சிஷ்யர்களும் தங்கியிருக்கத் தகுந்த இடம் எனத்தீர்மானத்து திரும்பிப் பார்க்கவே, சரசவாணி அந்தக் கணமே அங்கேயே சிலை வடிவாகி நின்று விடுகிறாள். அத்துடன் அவள் ஆதிசங்கரரிடம் அசரீரியாக, சாரதை யாக தான் இங்கேயே இருப்பதாகவும், இந்தத் தலத்தில் தன்னைப் பூஜித்து வருபவர்களுக்கு, தன்னுடைய அருள் பரிபூரணமாகக்கிட்டும் எனவும் கூறிகிறாள்.

அப்படி சிருங்கேரியில் சாரதை குடிகொண்டநாள் தான் விஜயதசமி எனவும், அன்று அவளைப் பூஜித்து குழந்தைகளின் கல்வியை ஆரம்பித்தால், சாரதையின் அருள் பரிபூரணமாகக்கிட்டும் என்பது ஐதீகம்.

விஜயதசமி தினத்தன்று பண்டாசுரனுடனான போரில், தேவி அவனை அழிக்கமுடியாமல் சிவபிரானை வழிபட, அவன் வன்னி மரத்தில் ஒளிந்தான். தேவி வன்னி மரத்தை சாய்த்து, அசுரனைச் சங்காரம் செய்தாள். இதனை ஞாபகப்படுத்தும் விதமாக விஜயதசமியன்று சிவன்கோவில்களில் பரிவேட்டை உற்சவம் நடைபெறுகிறது.

தேவியின் வெற்றி விழாவான விஜயதசமியில் நாமும் நற்செயல்களை தொடங்கி வாழ்க்கையில் மேன்மேலும் உயர்வை காண்போம்.

ஆயுத பூஜையும் சரஸ்வதி பூஜையுடன் கொண்டாடப்படுவது ஏன்?

கலைமகளாம் சரஸ்வதியை ஒவ்வொரு வீட்டிலும் படம் வைத்தோ ,விக்கிரகம் வைத்தோ வணங்கலாம். அதேவேளையில், அலுவலங்களில் கல்விக்கு பதிலாக தொழிலை மூலதனமாக வைத்து ஆயுத பூஜை செய்து வணங்குகிறோம். உயிர் உள்ளவற்றிலும், உயிர் அற்ற பொருட்களிலும் நீக்கமற இருப்பவள். அதனாலேயே, ஆயுத பூஜையும் சரஸ்வதி பூஜையுடன் கொண்டாடுகிறோம்.
மேலும் படிக்க

ஆயுத பூஜையும் சரஸ்வதி பூஜையுடன் கொண்டாடப்படுவது ஏன்? – முழு விவரம்

கலைமகளாம் சரஸ்வதியை ஒவ்வொரு வீட்டிலும் படம் வைத்தோ ,விக்கிரகம் வைத்தோ வணங்கலாம். அதேவேளையில், அலுவலங்களில் கல்விக்கு பதிலாக தொழிலை மூலதனமாக வைத்து ஆயுத பூஜை செய்து வணங்குகிறோம். உயிர் உள்ளவற்றிலும், உயிர் அற்ற பொருட்களிலும் நீக்கமற இருப்பவள். அதனாலேயே, ஆயுத பூஜையும் சரஸ்வதி பூஜையுடன் கொண்டாடுகிறோம்

உழைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் மக்கள் வருடத்திற்கு ஒருநாள் தாங்கள் செய்யும் தொழில் மற்றும் தொழிலுக்கு பயன்படுத்தும் கருவிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. வீடுகள், சிறு கடைகள், பெரிய விற்பனை நிறுவனங்கள், கைத்தொழில் செய்யும் இடங்கள், பணிமனைகள், பெரிய தொழிற்சாலைகள், ஆலைகள், தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது.
Ayudha Pooja at Machinery1
ஆயுதபூஜையை முன்னிட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள் சுத்தம் செய்யப்படும். வாசலில் தோரணங்கள், வாழை மரங்களை கட்டி, அலுவலகத்தில் உள்ள சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்து வைப்பர்.

அவல், பொரி, கடலை, சுண்டல், சர்க்கரை பொங்கல், ஆப்பிள், ஆரஞ்சு, எலுமிச்சம் பழம், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை படைத்து, சாம்பிராணி, சூடம் காண்பித்து பூஜை செய்து இந்த வருடமும் தொழில்கள் மேலும் மேலும் வளர வேண்டும் என ஊழியர்களுடன் பிரார்த்தனை செய்வார்கள்.
Ayudha Pooja at Company
முதல் நாள் இரவே வீடு வாசல்நிலை, கதவுகள், ஜன்னல்கள் எல்லாவற்றையும் துடைத்துத்தூய்மை செய்து கொள்ளவும். மறுநாள் காலை எல்லாவற்றிற்கும் திருநீறு சந்தனம் குங்குமம் இவைகளினால் பொட்டுவைத்து அலங்கரிக்கவும். பூஜையறையின் முன் மேஜை போட்டு பட்டுத்துணியினால் பரப்பி அதன் மீது புத்தகங்கள் பேனாக்கள் பணப்பெட்டி முதலியவற்றை வைத்து முன்போல் பொட்டுவைத்து அலங்கரிக்கவும். மற்றொரு மேஜையிட்டு அதன்மீது வீட்டு உமயோகக்கருவிகளாகிய அரிவாள்மனை கத்தி அரிவாள் கடப்பறை மற்றும் ஆயுதங்களைக்கழுவி வைத்து பொட்டுவைத்து அலங்கரிக்கவும். விவசாய உபயோகக்கருவிகளை அவை இருக்குமிடத்திலேயே வைத்துக் கழுவி அலங்கரிக்கலாம். மாடு கன்றுகளையும் அதன் தொழுவத்திலேயே குளிப்பாட்டி சந்தனம் குங்குமமிட்டு மாலைகளால் அலங்கரிக்கவும். தொழில் நிறுவனங்களிலுள்ள இயந்திரங்களையும் அவ்வாறே தூய்மை செய்து அலங்கரிக்கவும்.
Ayudha Pooja at Industry
பூஜைப்பொருட்கள்: குங்குமம் சந்தனம் விபூதி உதிரிப்பூக்கள் பூச்சரங்கள் மாலைகள் பொரிகடலை சர்க்கரை சுண்டல் இனிப்புவகைகள் பழங்கள் வெற்றிலைப்பாக்கு சூடம் பத்தி சாம்பிராணி குத்துவிளக்குகள் கைமணி தீர்த்தபாத்திரம் ஆகியவற்றை முன்கூட்டியே தயார் செய்து கொள்ளவும். பூஜைக்கு ஏற்றாற்போல் எல்லாவற்றையும் ஆயத்தப்படுத்திக்கொண்டு விளக்கேற்றி மணியடித்து பூஜையைத்துவக்கவும். மஞ்சள் பொடியில் அல்லது பசுசாணத்தில் பிள்ளையார் பிடித்துவைத்து அருகம்பில்லினால் அர்ச்சனை செய்து தூபம் காட்டி பழம் வெற்றிலைப்பாக்கு நிவேதனம் செய்து சூடம் காண்பித்து வழிபடவும்.
Ayuda Pooja Celebration
ஆயுத பூஜை: நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆயுதங்களின் பயனை உணர்த்தவே ஆயுத பூஜை செய்யப்படுகிறது. சரஸ்வதி பூஜையன்று தொழில் நிறுவனங்களில் அங்குள்ள கருவிகளுக்கும், வீடுகளில் அன்றாட பயன்பாட்டு பொருட்களுக்கும் பூஜை செய்ய வேண்டும். செய்யும் தொழிலே தெய்வம். அந்தத் தொழிலுக்கு உதவிகரமாக இருக்கும் ஆயுதங்களைத் தெய்வமாகப் போற்றும் விதமாக, அவற்றையும் கடவுளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை . சரஸ்வதி பூஜையன்று மாலையில் தொழில் உபகரணங்களை சுத்தம் செய்து பூஜை செய்ய வேண்டும். மறுநாள் விஜயதசமியன்று அவற்றை எடுத்து தொழிலைத் துவங்கினால், ஆண்டு முழுவதும் தொழில் வளம் சிறப்பாக இருக்கும் என்பது ஐதீகம். ஜடப்பொருட்களிலும் தெய்வத்தைக் காண்பதே ஆயுதபூஜையின் நோக்கம். குழந்தைகள் படிப்பைத் துவங்கவும் இந்தநாளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சரஸ்வதி பூஜை அன்று கல்வியை தொடங்குவது ஏன்?

பண்டிகைகளில் பூஜை என்ற அடைமொழி சேர்ந்திருப்பது சரஸ்வதி பூஜைக்கு தான். தீபாவளி பூஜை, பொங்கல் பூஜை என்று சொல்வதில்லை. பூஜை என்ற சொல் பூஜா என்பதில் இருந்து பிறந்தது. பூ என்றால் பூர்த்தி. ஜா என்றால் உண்டாக்குவது. தான் என்ற அகங்காரம், அடுத்தவனை விட நன்றாக வேண்டுமென்ற பொறாமை, உலக வாழ்வு நிரந்தரமானது என்ற எண்ணம் ஆகியவை மனிதனை ஆட்டிப்படைக்கின்றன. இதையே சைவசித்தாந்தத்தில் ஆணவம், கன்மம், மாயை என்கிறார்கள். இந்த மும்மலங்களையும் அகற்றி ஞானத்தை உண்டாகச் செய்வதே பூஜை. சரஸ்வதி கல்வியாகிய ஞானத்தை தருபவள் என்பதால், அவளது விழாவுக்கு மட்டும் பூஜை என்ற அடைமொழி இணைந்தது.
மேலும் படிக்க

சரஸ்வதி பூஜை அன்று கல்வியை தொடங்குவது ஏன்? – முழு விவரம்

பண்டிகைகளில் பூஜை என்ற அடைமொழி சேர்ந்திருப்பது சரஸ்வதி பூஜைக்கு மட்டும் தான். தீபாவளி பூஜை, பொங்கல் பூஜை என்று சொல்வதில்லை. பூஜை என்ற சொல் பூஜா என்பதில் இருந்து பிறந்தது. பூ என்றால் பூர்த்தி. ஜா என்றால் உண்டாக்குவது. தான் என்ற அகங்காரம், அடுத்தவனை விட நன்றாக வேண்டுமென்ற பொறாமை, உலக வாழ்வு நிரந்தரமானது என்ற எண்ணம் ஆகியவை மனிதனை ஆட்டிப்படைக்கின்றன. இதையே சைவசித்தாந்தத்தில் ஆணவம், கன்மம், மாயை என்கிறார்கள். இந்த மும்மலங்களையும் அகற்றி ஞானத்தை உண்டாகச் செய்வதே பூஜை. சரஸ்வதி கல்வியாகிய ஞானத்தை தருபவள் என்பதால், அவளது விழாவுக்கு மட்டும் பூஜை என்ற அடைமொழி இணைந்தது.

நவராத்திரி பண்டிகை சரஸ்வதி பூஜையுடன் முடியும். ஒன்பதாவது நாளில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி பூஜை நாளில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சரஸ்வதிக்கு சிறப்பு பூஜைகள் செய்வார்கள். வழிபடும் இடத்தில் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் இட்டு மஞ்சளில் பிள்ளையார் பிடித்து பூஜையை ஆரம்பித்தல் வேண்டும். சரஸ்வதி பூஜைக்கு அடுத்த நாள் விஐயதசமி. அன்று புதிய கல்வி கற்பதை ஆரம்பிப்பது சிறப்பு.

எப்படி ஒரு மரத்தின் வளர்ச்சிக்கு அதன் வேரில் தண்ணீர் ஊற்றினால் பயன் கிடைக்கிறதோ அதுபோல், அன்னைக்கு செய்யக்கூடிய அனைத்து வழிபாடுகளும் பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் சென்று அடைகிறது என்று நமது முன்னோர் அறிந்து இவற்றை தவறாது செய்து வந்தனர். அப்படியான வழிபாடுகளில் ஒன்று நவராத்திரி வழிபாடு.

நவராத்திரி நாட்களில் பிரதமை முதல் நவமி வரை இந்தந்த தெய்வங்களை இந்தந்த நாட்களில் முறைப்படி வழிபட வேண்டும் என்று விளக்குகின்றன ஞானநூல்கள். முதல் மூன்று நாட்கள் ஸ்ரீதுர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபட்டு வேண்டிய அருளை பெறலாம். இது பொதுவான முறை. விரிவான முறையில் வழிபடுவோர், புரட்டாசி அமாவாசை அடுத்த பிரதமை துவங்கி 9 நாட்கள் நவராத்திரி அனுஷ்டிக்க வேண்டும்.

ஒன்பது நாட்களும் வழிபட இயலாதவர்கள் அஷ்டமியன்று துர்கையை வழிபட்டு அன்று இரவு விழித்திருந்தால், அவர்களின் வாழ்க்கையை துர்காதேவியானவள் கண்விழித்துக் காப்பாள். அதேபோன்று, மகா நவமியன்று நாம் அன்றாடம் வேலைக்கு உபயோகப்படுத்தும் பொருட்களையும், குழந்தைகளின் புத்தகங்களையும் பூஜையில் வைத்து வழிபட்டு, அன்று அவற்றைப் பயன்படுத்தாமல் அடுத்த நாள் விஜயதசமியன்று அந்தப் பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்துதல் சிறப்பு.
sar
சரஸ்வதி பூஜை அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதி படம் அல்லது மஞ்சள், சந்தனத்தில் செய்த முகம் வைக்க வேண்டும். படத்திற்கு அருகம் புல், மலர் மாலைகள் அணிவிக்க வேண்டும். மேஜையின் மேல் புத்தகங்களை அடுக்கி, அதன்மேல் படத்தை வைக்க வேண்டும். படத்தின் முன் இலை விரித்து, வெற்றிலை பாக்கு, பழம், பொரி, சுண்டல், சர்க்கரைப் பொங்கல், தண்ணீர் ஆகியவற்றைப் படைக்க வேண்டும். கற்பூரம் அல்லது நெய் தீபம் காட்டி வழிபாடு செய்ய வேண்டும். சிறு குழந்தைகளுக்கு பிரசாதம், கல்வி உபகரணங்கள், படிப்புச் செலவிற்கு பணஉதவி ஆகியவற்றை வசதிக்கு தக்கபடி கொடுக்க வேண்டும். மறுநாள், காலையில் புதிதாக இலைபோட்டு வெற்றிலை பாக்கு, பழம், பொரி படைத்து பூஜை செய்த பின் படத்தை எடுத்து விட வேண்டும். முகம் வைத்திருந்தால் அதை நீர்நிலையில் கரைக்க வேண்டும்.

மகாநவமி திருநாளில் நாம் அன்றாடம் வேலைக்கு உபயோகப்படுத்தும் பொருட்களையும், குழந்தைகளின் புத்தகங்களையும் பூஜையில் வைத்து வழிபடுவது விசேஷம். அதன்படி குழந்தைகளின் பாடப்புத்தகங்களையே மேடையாக அடுக்கி, அதன் மீது அன்னையை எழுந்தருளச் செய்யும் வழக்கமும் உண்டு. சிலர், சரஸ்வதி தேவியின் திருமுன் புத்தகங்களை அடுக்கிவைப்பார்கள்.

இப்படி எல்லாம் தயார் செய்தபிறகு, பூஜை நல்லபடியாக நிறைவேறவும், பூஜையில் ஏதேனும் குற்றம் குறைகள் இருப்பினும் பொறுத்தருளும் படியும் மனதார வேண்டிக்கொண்டு வணங்கவேண்டும். பின்னர் முறைப்படி தூப, தீப ஆராதனைகளைச் செய்ய வேண்டும். நைவேத்தியமாக பழரசம், இளநீர், மாதுளை, வாழை, மா, பலா முதலானவற்றையும், சித்ரான்னங்கள் ஆகியவற்றைப் படைத்து வழிபடவேண்டும்.

கேப்டன் பிரபாகரனாக நடிக்கும் பாபி சிம்ஹா

தமிழ் சினிமாவில் வில்லன், ஹீரோ என மாறி மாறி பயணித்து வரும் நடிகர் பாபி சிம்ஹா, சமீபத்தில் இவரின் வில்லன் நடிப்பில் வெளிவந்த சாமி 2 இவருக்கு மிக பெரிய நல்ல பெயரை வாங்கி கொடுத்தது தற்போது ரஜினியின் பேட்ட, அக்னிதேவ் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அடுத்தப்படியாக விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வேடத்தில் நடிக்க உள்ளார்.

ஐந்து நாட்கள் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை, திருவள்ளூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. ஐந்து நாட்கள் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கையை ஒட்டி தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யும் என்றும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. வரும் 6ம் தேதி வரை கேரளத்தின் பல்வேறு மாவட்ட்களுக்கும் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பறவைக்கு 3-டி செயற்கை அலகு

சிங்கப்பூர் பூங்கா ஒன்றில், ஹார்ன் பில் என்னும் பெரிய அலகு கொண்ட பறவைக்கு புற்றுநோய் திசுக்கள் அகற்றப்பட்ட பின் அதற்கு 3-டி தொழில்நுட்பத்தாலான செயற்கை அலகு பொருத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் ஜுராங் பறவைகள் பூங்காவில் இருக்கும் அந்த 22 வயது வண்ணப்பறவைக்கு 8 செ.மீ நீளத்தில் புற்று நோய் கட்டி இருப்பதை பூங்கா ஊழியர்கள் கண்டறிந்தனர். சிகிச்சை மூலம் புற்றுநோய் பாதிக்கப்பட்ட திசுக்கள் அகற்றப்பட்டன. ஒரு முழு 3-டி அலகு ஜேரிக்காக உருவாக்கப்பட்டது.

இந்தோனேசியாவுக்கு 1 மில்லியன் டாலர் நிவராண உதவி அளித்தது கூகிள்

சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவுக்கு 1 மில்லியன் டாலர் நிவராண உதவிகளை கூகிள் நிறுவனம் நிவாரண நிதியாக அளித்துள்ளது. இதுகுறித்து சுந்தர் பிச்சை தனது டுவிட்டர் பதிவில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் ப்ளிழ்யான மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். மேலும் இந்தோனேசியா நிவாரண உதவிகளுக்காக தங்கள் நிறுவனம் சார்பில் ஒரு மில்லியன் டாலர் நிவாரண உதவி வழங்கியுள்ளது என்றார்.

இந்தியா – மேற்கு இந்திய தீவுகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

இந்தியா- மேற்கிந்தியத் தீவு அணிகள் மோதும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது. ஆசியக் கோப்பை போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட விராட் கோலி மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். வழக்கமாக தொடக்க வீரர்களாக விளையாடும் முரளி விஜய், ஷிகர் தவான் ஆகியோர் இப்போட்டியில் விடுவிக்கப்பட்டுள்ளதால், யார் முதலில் களம் இறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சர்கார் இசை நிகழ்ச்சி ரஜினிகாந்த் ஏன் கலந்து கொள்ளவில்லை?

‘சர்கார்’ படம் முழுக்க அரசியல் பின்னணியைக் கொண்ட படமாகும். ‘ஒரு விரல் புரட்சி’ பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், அதன் வரிகள் தற்போதைய அரசியல் நிகழ்வுகள் அனைத்தையும் பின்னணியாக கொண்டே எழுதியிருந்தார் பாடலாசிரியர் விவேக். ‘சர்கார்’ இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கலந்து கொள்வார் என்று செய்திகள் வெளியாகின. இதற்கு ரஜினி தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை தற்போது ‘பேட்ட’ படத்திற்காக வராணாசியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் நடித்து வருகிறார் ரஜினி. அதனால் தான் கலந்துகொள்ள முடியவில்லை என்று ரஜினி தரப்பினர் கூறுகிறார்கள்.

மோசஸ் மற்றும் நபிகள் நாயகத்துடன் ரஜினியை ஒப்பிட்டு பேசியதாக சீமான் மீது புகார்

சென்னை காந்தி மண்டபத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம் வெளிநாடுகளில் நடிகர் ரஜினி நிர்வாகிகளை நியமிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், இறைத்தூதர்களாக கருதப்படும் மோசஸ் மற்றும் நபிகள் நாயகம் ஆகியோரை நடிகர் ரஜினியுடன் ஒப்பிட்டு பேசினார். சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு இஸ்லாமிய ஜமாத் மற்றும் கிறிஸ்தவ மக்கள் கட்சி ஆகிய அமைப்புகள், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளன.

முதல் முறையாக சர்பேஸ் ஹெட்போன்கள் அறிமுகம்

சர்பேஸ்  லேப்டாப்களை (surface Laptop) வெளியிட்டுள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது புதிய தயாரிப்பான சர்பேஸ் புரோ 6, சர்பேஸ் ஸ்டுடியோ 2 மற்றும் சர்பேஸ் லேப்டாப் 2 மற்றும் முதல்முறையாக சர்பேஸ் ஹெட்போன்களையும் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.  சர்பேஸ் ஹெட்போன்களில் 13 லெவல் நாய்ஸ் கண்ட்ரோல் லெவல் கொண்டுள்ளது. இதில் உள்ள மைக்ரோபோன்களை கவர் செய்யும் வகையில் இரண்டு பிம்கள், இயர் கப்களில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் மொத்தமாக இதில் 8 மைக்ரோபோன்கள் உள்ளன. இதன் மூலம் இதை பயன்படுத்துபவர்கள் தேவையான சத்தங்களை தெளிவாக கேட்க முடியும்.