Edappadi Palanisamy

தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்தில், அவரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி. அப்போது அவரை பிரேமலதாவும் சுதீஷும் வரவேற்றனர். முதல்வருடன் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், சி விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். இன்று மாலை அதிமுகவின் அதிகாரப்பூர்வமான தொகுதி பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு எனவும், விஜயகாந்தின் உடல்நலம் குறித்து முதல்வர் விசாரித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரம் நடைபெற்றது.

ராமதாஸ் இல்லத்தில் ஓபிஎஸ், இபிஎஸ்க்கு விருந்து

Lok Sabha 2019: மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி அதிமுகவோடு கூட்டணி வைத்துள்ளது. மேலும் தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த வேளையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் விருந்திற்காக தனது இல்லத்திற்கு அழைத்திருந்தார். அழைப்பை ஏற்று முதல்வர் துணை முதல்வர் அமைச்சர் பெருமக்கள் வருகை புரிந்தனர். மக்களவைத் தேர்தல் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றி விவாதித்ததாக தெரிகிறது.

எதிர்க்கட்சிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் – முதல்வர் பேச்சு

Tindivanam: மக்களவைத் தேர்தலில் அதிமுக பாஜக பாமக கூட்டணி மாபெரும் வெற்றி பெறப்போகிறது. மத்திய அரசிடமிருந்து போதுமான நிதியை பெற்று தமிழகத்தின் வளத்தை பெருக்கும் ஒரே ஆட்சி அதிமுகவின் ஆட்சி தான் மேலும் வரும் மக்களவை தேர்தல் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகி வருகின்றனர் என்று தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

ரஜினிகாந்த் மகள் திருமணம் – குவியும் பிரபலங்கள்

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா, நடிகரும் தொழில் அதிபருமான விசாகன் வணங்காமுடியை இன்று மணந்தார். இவர்களது திருமணம் சென்னை லீலா பேலஸில் நடந்தது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், ம தி மு க பொது செயலாளர் வைகோ, மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல ஹாசன் என அரசியல் பிரபலங்கள் பலரும் விழாவில் கலந்து கொண்டனர்.

போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்

போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்று ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அரசு ஊழியர்களுக்காக, நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையிலும் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை, அமல்படுத்தியுள்ளது. இதை கருத்தில் கொண்டு அரசு ஊழியரும், ஆசிரியர்களும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று குறிபிட்டுள்ளார்.

வீரதீர செயலுக்கான தமிழக அரசின் அண்ணா பதக்கம் 3 பேருக்கு அறிவிப்பு!

குடியரசு தினவிழாவை முன்னிட்டு தமிழக அரசின் வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் சென்னையைச் சேர்ந்தசிறுவன் சூரியகுமார், போடியைச் சேர்ந்த ரஞ்சித் குமார், தஞ்சையைச் சேர்ந்த ஸ்ரீதர் ஆகிய மூவருக்கும் வழங்கப்படுகிறது. இந்த பதக்கங்களை சென்னையில் நடக்கும் குடியரசு தின விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த விருதை வழங்குகிறார்.