Tag: driving licence

சுற்றுலா பயணிகளை கவர இந்தியர்கள் இனி வெளிநாடுகளிலும் வாகனம் ஓட்ட அனுமதி

சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, நார்வே, அமெரிக்கா, சுவிட்ஸ்ர்லாந்து, நியூசிலாந்து தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள், தங்கள் நாட்டுக்கு வரும் இந்திய சுற்றுலா பயணிகள்  இந்திய ஓட்டுநர் உரிமத்தை வாகனங்கள் ஓட்டும் போது பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளன. இதனால், இந்த நாடுகளில் வாகனம் ஓட்ட சர்வதேச டிரைவிங் லைசெல்ஸ் பெற வேண்டியதில்லை என்ற போதும், ஒரு சில கட்டுபாடுகளை விதிக்கப்பட்டுள்ளது.  அவற்றை இங்கே விரிவாக காணலாம். மேலும் படிக்க

வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களுக்கு இனி சர்வதேச லைசென்ஸ் தேவையில்லை – சிறப்பு தொகுப்பு

வெளிநாடுகளில் சுற்றுலாவுக்கு செல்ல விரும்புவோர் குறிப்பிட்ட சில நாடுகளில் தங்களது இந்திய டிரைவிங் லைசென்சை வாகனங்கள் ஓட்டும் போது பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடகை கார் ஓட்டுனர்கள் சர்வதேச டிரைவிங் லைசென்ஸ் பெற வேண்டிய சிக்கல் இருக்காது.
Overseas Driving

சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, நார்வே, அமெரிக்கா, சுவிட்ஸ்ர்லாந்து, நியூசிலாந்து தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள், தங்கள் நாட்டுக்கு வரும் இந்திய சுற்றுலா பயணிகள் இந்திய ஓட்டுநர் உரிமத்தை வாகனங்கள் ஓட்டும் போது பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளன. இதனால், இந்த நாடுகளில் வாகனம் ஓட்ட சர்வதேச டிரைவிங் லைசென்ஸ்  பெற வேண்டியதில்லை என்ற போதும், ஒரு சில கட்டுபாடுகளை விதித்துள்ளன. அவற்றை இங்கே விரிவாக காணலாம்.
International Driving Licence

ஆஸ்திரேலியாவில் சாலை விதிகள் இந்தியாவில் இருப்பது போன்றே காணப்படுகிறது. ஆனாலும், சாலையின் இடதுபுறம் வாகனத்தை இயக்க வேண்டும் அதுமட்டுமின்றி டிரைவர் சீட் வாகனத்தின் வலதுபுறம் இருக்கும். சவுத் வேல்ஸ், குயின்ஸ் லேண்ட் பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட வாகனங்களை மட்டுமே இந்தியர்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆஸ்திரேலியாவில் வாகனம் ஓட்ட வதற்கு 3 மாதங்களுக்கு இந்தியர்களின் டிரைவிங் லைசென்ஸ் செல்லுபடியாகும். ஆனால், அவை ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் இல்லையென்றால் அவை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்கள், அங்குள்ள அனைத்து வாகனங்களையும் ஓட்ட தங்களது இந்திய டிரைவிங்  லைசென்சை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனாலும் அவர்களது இந்திய டிரைவிங் லைசென்ஸ் ஒரு வருடம் வரை மட்டுமே செல்லுபடியாகும்.
Drive In Foreign Countries

பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா செல்லும் இந்தியர்கள் தங்கள் இந்திய டிரைவிங் லைசென்சை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்ட போதும், இந்த லைசென்ஸ் ஒரு வருடம் வரை மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும், அங்கு இந்திய லைசென்ஸ் பெற்றவர்கள் குறிப்பிட்ட சில வாகங்களுக்கு மட்டுமே ஓட்ட அனுமதிக்கப்படுவார்கள்.

சுவிட்சர்லாந்து மற்றும் நியூசிலாந்தில் இந்திய டிரைவிங் லைசென்சை வருட காலத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் வாகனம் ஓட்டுபவர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
Indian Driving Licence

ஜெர்மனி இந்திய டிரைவிங் லைசென்சை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளதோடு, வேறு எந்த கட்டுபாடும் விதிக்கவில்லை.

நார்வே நாட்டில் இந்திய டிரைவிங் லைசென்சை பயன்படுத்தி 3 மாதங்கள் வாகனங்களை இயக்க முடியும்.

தென்னாப்பிரிக்காவில், இந்திய டிரைவிங் லைசென்சை ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் அதனுடன் ஓட்டுநரின் புகைப்படம் மற்றும் கையொப்பம் இருந்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால், அங்கு வாடகைக்கு கார் எடுத்தால் சர்வதேச டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் மட்டுமே வாகனத்தை இயக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

இன்று முதல் ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்

ஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் இன்று  முதல் ஆன்லைனில் அதற்கான பணத்தை செலுத்தலாம் என அரசு அறிவித்துள்ளது. இணையதளம் மூலமாக ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பம் செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

முதலில் www.parivahan.gov.in வலைத்தளத்திற்குச் செல்லுங்கள். வலைத்தளத்தில் வலது கீழ் மூலையில் “சாரதி”(Sarathi) என்ற லோகோ அருகில் உள்ள “டிரைவிங் லைசென்ஸ் ரிலேட்டட் சர்வீஸ்”(Driving Licence Related Service) என்பதைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் மாநிலத்தைத் தேர்வு செய்யுங்கள்.  திரையின் இடது பக்கத்தில் “டிரைவிங் லைசென்ஸ்”(Driving Licence) என்ற ட்ராப் பாக்ஸ் இல் நிறையச் சேவைகள் இருக்கும்.  “அப்ளை ஆன்லைன்”(Apply Online) என்ற இடுகையைத் தேர்வு செய்யுங்கள்.  இப்பொழுது உங்களுக்கான ஆன்லைன் சேவைகளின் பட்டியல் தெரியும். புது கற்றுநர் உரிமம் (New Learner Licence), புது ஓட்டுநர் உரிமம் (New Driving Licence), ஓட்டுநர் உரிமம் சேவைகள் / புதுப்பிக்க மற்றும் டூப்ளிகேட் வாங்க (Services On Driving Licence / Replacement, Duplicate, Other)  என இதர சேவைகள் பலவும் உங்கள் சேவைக்கு இருக்கும். முதல் ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் விண்ணப்பம் செய்வதற்கு முன் கற்றுநர் உரிமம் வாங்குவது மிக அவசியம். உங்களுக்கு இதற்கு முன்னாள் ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் இருந்தால், அதை இங்கேயே புதுப்பித்து கொள்ளலாம் மற்றும் காணாமல் போன ஓட்டுநர் உரிமத்தின் போலியை வாங்க இங்கேயே விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.