தமிழ் குடும்பத்தில் பிறந்த இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி, 1994-ஆம் ஆண்டில் பெப்சிகோ நிறுவனத்தில் சேர்ந்து, 2001-ஆம் ஆண்டு தலைவர் மற்றும் CFO-ஆக பதவி வகித்தார்.

கடந்த 24 ஆண்டுகளாக பெப்சிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பணியாற்றிய இந்திரா நூயி, சமீபத்தில் பதவியில் இருந்து விலகினார்.

தற்போது 62 வயதை அடைந்துள்ள இவர், முயற்சியாலேயே, பெப்சிகோ நிறுவனத்தின் தயாரிப்புகள், ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் மற்றும் குளிர்பானம் என்ற பெயரை பெற்றது. மேலும், கடந்த 12 ஆண்டுகளில் விற்பனையும் 80 சதவிகிதம் உயரவும் இவர் காரணமாக இருந்துள்ளார்.

தற்போதும் பெப்சிகோ நிறுவனத்தின் சேர்வுமனாக இருந்து வரும் நூயி, வரும் 2019 வரை போர்டு ஆஃப் டைரக்டர் ஆகவும் தொடர்ந்து பணியாற்ற உள்ளார். நூயி, தனது அடுத்த சுற்றுக்கு தயாராகி விட்ட நிலையில், தனது பணியில் வெற்றி பெற கடைபிடித்த 5 முக்கிய பழக்கங்களை பற்றி அவரே கூறியுள்ளார். அவை.
Indra Nooyi PepsiCo Inc

இந்திரா நூயியின் வெற்றிக்கான 5 முக்கிய காரணங்கள்

1. நிறுவனத்தின் தலைவராக உங்களை நினைத்து கொள்ளுங்கள்

இந்திரா நூயி குழந்தையாக இருந்த போது அவரது சகோதரி ஒரு விளையாட்டை விளையாட அவரை அழைத்தார். அந்த விளையாட்டு வழக்கத்திற்கு மாறாக இருந்தது. ஒவ்வொரு இரவு உணவின் போதும், சகோதரிகள் தங்களை நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உலக தலைவர்கள் போன்று கற்பனை செய்து கொள்வார்கள். இரவு உணவு முடிவடைந்த பின்னர் தங்கள் கற்பனை செய்து கொண்ட தலைவர்கள் போன்று சகோதரிகள் உரையாற்றுவார்கள். இவர்களது தயார் இவர்களது பேச்சுக்கு மார்க் கொடுப்பார். இது அந்த குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க உதவியது.

இந்த விளையாட்டு கொடுத்த தன்னம்பிக்கையுடன் நூயி, பிசினஸ் ஸ்கூலில் அடியெடுத்து வைத்தார். அங்கும் இதே பழக்கத்தை தனது உடன் படிக்கும் மாணவர்களுடன் தொடர்ந்தார். இந்த நடவடிக்கையால் அவருடன் படித்த சில ஆண்கள் அவருடன் பழகுவதையே குறைந்த கொண்ட போதும், தனது திறமையை வளர்த்து கொள்வதிலேயே அவர் குறியாக இருந்தார்.

இதுகுறித்து பேசிய நூயி, “மற்றவர்களை விட சிறந்த முறையில் செயல்படவே இது போன்று பயிற்சி பெற்றேன் என்றார்.

நியூயார்க்கில் 2015ம் ஆண்டில் தனது பேசிய அவர் போது 92Y பற்றி பேசினார். அதில், ஒருவேளை அனைவரது கருத்தும் தவறாக அமைந்தால், அவர்கள் என்னிடம் வருவார்கள், என்னிடம் அந்த தவறுகளை சரி செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்வார்கள். ஏன்என்றால், நான் இந்தியாவின் ஜனாதிபதி என்று நினைத்து கொண்டதால், அதை சிறப்பாக சரி செய்வேன்” என்றார்.
Most Powerful Women

2. முக்கியமான திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்

உங்களிடம் உள்ள திறனை அறிந்து கொண்டு அதிக மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்று லிஙகேடின் நிர்வாக இயக்குனர் டேனியல் ரோத்திடம்  கூறியுள்ள நூயி, எப்போது பிரச்சினை வந்தாலும், எல்லோரும் அந்த பிரச்சினையை சரி செய்ய தகுதியான நபரை தேடுவார்கள். இதுபோன்ற சிக்கலான பிரச்சினைகளை தீர்க்க தேவையான திறனை நீங்கள் வளர்த்து கொள்வதன் மூலம் அந்த நபர் நீங்களாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

என் பணி முழுவதிலும், எந்த பிரச்சினையையும் அது சிறிதாக இருந்தாலும், சிக்கலாக இருந்தாலும் அதை எளிதாக கையாளுவேன். சிலர் சிக்கலான பிரச்சினையை கொடுத்தால், அந்த நேரத்தில் நான் மாணவனான மாறி அதை தீர்க்க முயற்சிப்பேன். அந்த நேரத்தில் நான் சிஇஒ அல்லது தலைவர் அல்லது சிஎப்ஓ என்று நினைக்க மாட்டேன்.

நான் சிஇஓ-வாக இருந்த போது பெப்சிகோ நிறுவனத்தின் IT சிஸ்டம்களில் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டேன். அங்குள்ள தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ள நான் 10 வகுப்பு பாட புத்தகங்களை படிப்பேன். எனக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு உதவ ஒரு விரிவுரையாளர் ஒருவரை ஏற்பாடு செய்திருந்தேன். இதுபோன்ற நடவடிகைகளால், என்னால் பிரச்சினைகளை சரியாக புரிந்து கொள்வதுடன் அதற்கு சரியான தீர்வையும் காண உதவியது.

உங்கள் திறமையை மற்றவர்கள் அறிந்து கொள்ள செய்ய, குழுவுடன் அவர்களில் ஒருவராக பணியாற்ற வேண்டும். இதன் மூலம் உங்கள் திறமை வெளிபட்டு, நீங்கள் மிகவும் முக்கியமானவர் என்பதை அனைவரும் தெரிந்து கொள்வார்கள் என்றும் நூயி தெரிவித்துள்ளார்.
Chief Executive Officer of PepsiCo

3. உங்களை வாடிக்கையாளராக நினைத்து கொள்ளுங்கள்

சிஇஒ-வாக பணியாற்றிய நூயி, உலகளவில் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் 100-க்கு மேற்பட்ட பிரான்ட் மற்றும் டிரேட் மார்க்களில் பணியாற்றியுள்ளார்.

அவர் பணியாற்ற தொடங்கியது முதல் இதுவரை வாரம் ஒருமுறை, பலசரக்கு கடைகளுக்கு சென்று பெப்சிகோ தயாரிப்புகள் எவ்வாறு வைக்கப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்வார்.

சில ஷாப்களில் தங்கள் நிறுவன தயாரிப்புகள் வைக்கப்பட்டுள்ளதை புகைப்படம் எடுத்து, அதை டிசைன் மற்றும் மார்க்கெட்டிங் துறையினருக்கு அனுப்பி வைத்து மாற்றங்களை செய்ய சொல்வார்.

மேலும் அவர் தனக்கு கொடுக்கப்பட்ட திட்டம் அல்லது பணிகளை மட்டும் செய்யாமல், அனைத்து பணிகளிலும் பணியாற்றி, பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அறிந்து கொள்ள கொள்வார்.

இதுகுறித்து ரேடியோ ஒன்றுக்கு பேசிய அவர், நான் ஷாப்கீப்பராகவும்; எனது குடும்பத்திற்கு கேட்கீப்பராகவும் இருந்து வருகிறேன் என்றும், பிசினசில் இருந்தாலும் பொதுமக்கள் தங்கள் தயாரிப்புகளை எப்படி பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முயற்சிப்பேன் என்றும்,  அந்த இடத்தில் நான் சிஇஒ-வாக இருக்காமல், ஒரு வாடிக்கையாளராக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
Chief Executive Officer of PepsiCo Inc

4. நன்றி கூறி ஆச்சரியப்படுத்துங்கள்

பெப்சிகோ நிறுவனத்தின் சிஇஓ-வாக பதவியேற்ற பின்னர் நூயி, தனது தாயை சந்திக்க சென்றார்.  அந்த நேரத்தில், அவரை பார்க்க வந்த பார்வையாளர்கள், நூயி வெற்றிக்கு நூயி-யின் தாயை பாராட்டினர். அந்த பயணத்துக்கு பின்னர், தனது தாயை பாராட்டிய அதிகாரிகள் 400 பேரின் பெற்றோருக்கு நன்றி தெரிவித்து நூயி கடிதம் எழுதியுள்ளார். இதனால் அந்த பெற்றோர் மட்டுமின்றி அந்த அதிகாரிகளும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

உங்களுக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நீங்களும் ஆதரவு அளிக்க நேரம் ஒதுக்க வேண்டும். உங்களின் மென்மையான அணுகுமுறை மக்களிடம் உங்களை நெருக்கமாக செய்து, அதன் மூலம் எளிதாக உங்கள் எதிர்கால இலக்கை அடைய முடியும் என்கிறார் நூயி.
Indra Krishnamurthy Nooyi

5. உறுதியுடன் இருக்க பழக்கி கொள்ளுங்கள்

பெப்சிகோ நிறுவனத்தில் சிஎப்ஒ பதவியில் இருந்த நூயி, சிஇஓ-வகை மாற்றப்பட்ட செய்தி கேட்டு மிகவும் வியப்படைந்தார். இதற்கு ஏற்றவாறு தனது திட்டங்கள் வகுத்த அவர், எந்தவித வருத்தமும் அடையவில்லை. இந்த நிகழ்வு குறித்து பேசிய அவர், நான் சிஇஓ பதவி ஏற்கும் போது பல்வேறு சவால்களை எதிர் கொள்ள வேண்டியிருந்தது” என்றார்.

இன்றுவரை, நிறுவனத்தின் இலக்கை நோக்கி பயணம் செய்து வரும் அவர், தனது தனிப்பட்ட கவலைகளை பின்னுக்கு தள்ளியே பணியாற்றி வந்தார். தன்னை நம்பியே நிறுவனம் ஒரு திட்டத்தை கொடுக்கிறது, இதை சிறப்பாக செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நேரத்தில் மற்ற எந்த விஷயம் குறித்தும் சிந்திக்க மாட்டேன் என்று நூயி தெரிவித்துள்ளார்.

ஆரோக்கியமான உணவுகளுக்கான அதிகாரியாக நூயி பொறுப்பேற்ற போது, முதலில் சில முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டினார். ஆனாலும் நூயி, நிறுவனத்தில் தனது மூலோபாயத்தில் உறுதியாக இருந்தார். இந்நிலையில், கடந்த 2006ல் 38 சதவிகிதமாக இருந்த பெப்சிகோ நிறுவனத்தின் வருவாயில் 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட வருவாய் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் மற்றும் குளிர்பானங்கள் மூலமே கிடைத்தவை என்றும் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு அவரது வெற்றியை உறுதி செய்தது.

கடந்த ஆகஸ்ட் மாத்தில் நூயி வெளியிட்ட அறிக்கையில், பெப்சிகோ நிறுவனம் இன்று உறுதியான நிலையில் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இதே நிலை வரும் நாட்களிலும் தொடர வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
Indra Krishnamurthy

இந்திரா நூயியின் வெற்றிக்கு படிகளாக அமைந்தவை….

  • போர்பஸ் பத்திரிகை அதன் 2008-ஆம் ஆண்டிற்கான உலகின் 100 மிக வலிமையான பெண்கள் பட்டியலில் நூயியை மூன்றாவது நபராக மதிப்பிட்டது.
  • பார்ச்சுன் பத்திரிகை அதன் 2006, 2007, 2008 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளுக்கான வணிகத்தில் மிகவும் வலிமையான பெண்கள் மதிப்பீட்டில் நூயியை முதலிடத்தில் வைத்திருந்தது.
  • 2008 ஆம் ஆண்டு, நூயியின் பெயரை அமெரிக்காவின் சிறந்த தலைவர்களில் ஒருவராக யுஎஸ் நியூஸ் & வேர்ல்டு ரிப்போர்ட் வெளியிட்டது.
  • 2007 ஆம் ஆண்டு, அவர் இந்திய அரசாங்கத்தால் பத்ம விபூசண் விருதை பெற்றுக் கொள்வதற்குத் தேர்வு செய்யப்பட்டது.
  • 2008 ஆம் ஆண்டு, அவர் அமெரிக்க கலை மற்றும் அறிவியல் கழகத்தின் பெலோஷிப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிக்கையின் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டின் வெளிவந்த கவனிக்கத்தக்க 50 பெண்கள் பட்டியலில் நூயியின் பெயர் இடம்பெற்றது,
  • டைம் பத்திரிக்கையின் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த உலகில் 100 மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய நபர்கள் பட்டியலிலும் இடம் பெற்றது.
  • குளோபல் சப்ளை செயின் லீடர்ஸ் குரூப், இந்திரா நூயியின் பெயரை 2009 ஆம் ஆண்டின் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரி ஆக குறிப்பிட்டது.
  • 2008-ஆம் ஆண்டின் ஜனவரி  மாத்தில், அமெரிக்க-இந்திய வணிகக் கவுன்சில் (USIBC) தலைவராக நூயி தேர்ந்தெடுக்கப்பட்டது.