Budget 2019

Budget 2019

தமிழக பட்ஜெட் 2019 – தொழில் துறை,மின்சார துறை, ஆதிதிராவிடர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலம்

Tamil Nadu Budget 2019 – Department of Industry, Electricity, Adi Dravidar and Welfare of the Differently Abled: 2019 – 2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில் தொழில் துறை,மின்சார துறை, ஆதிதிராவிடர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலம் பற்றிய அம்சங்களை கீழ்கண்டவாறு காணலாம்

தொழில் துறை:

  • அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க 148.83 கோடி ஒதுக்கீடு.
  • முதலீட்டாளர் மாநாடு மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு ரூ.32,206 கோடி ஒதுக்கீடு.
  • குறு, சிறு நடுத்தர தொழில்துறைக்கு ரூ.476 கோடி ஒதுக்கீடு.
  • தகவல் தொழில்நுட்ப துறைக்கு ரூ.141 கோடி ஒதுக்கீடு.
  • கைத்தறி மற்றும் துணி நூல் துறைக்கு 1170.56 கோடி ஒதுக்கீடு.
  • நெசவாளர் கூட்டுறவு சங்க மானியங்களுக்காக 150 கோடி ஒதுக்கீடு.
  • கைத்தறி உதவி திட்டத்திற்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு.
  • ஊரக குறுந்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.172 கோடி ஒதுக்கீடு.

மின்சார துறை:

  • கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கிடங்குகளில் உள்ள கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்க ரூபாய் 5259 கோடி ஒதுக்கீடு.
  • ரூ.1,125 கோடியில் தேனி, சேலம், ஈரோட்டில் 250 மெகாவாட் மிதக்கும் சூரிய திட்டம்.
  • தொடக்கநிலை வகுப்புகளில் நிகர மாணவர் சேர்க்கை விகிதம் 99.8 ஆக உயர்வு.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதிதிராவிடர் நலம்:

  • மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு பட்ஜெட்டில் ரூ.572.19 கோடி ஒதுக்கீடு.
  • மாற்றுத் திறனாளிகளுக்கு 3000 சிறப்பு நாற்காலிகளும் 3000 பெட்ரோலிய ஸ்கூட்டர்களும் வழங்கப்படும்.
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் ரூ 43.39 கோடியில் திருக்கோயில் திருப்பணிகள்.
  • ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களுக்காக மேலும் 20 விடுதிகள் கட்ட ரூ.40 கோடி ஒதுக்கீடு.
  • ஆதி திராவிட, பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்க ரூ.71.01 கோடி ஒதுக்கீடு.
  • ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கு பட்ஜெட்டில் ரூ.1,857.13 கோடி நிதி ஒதுக்கீடு.

Tamil Nadu Budget 2019 – Department of Industry, Electricity, Adi Dravidar and Welfare of the Differently Abled – தமிழக பட்ஜெட் 2019 – தொழில் துறை,மின்சார துறை, ஆதிதிராவிடர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலம்

தமிழக பட்ஜெட் 2019 – கல்வித்துறை

Tamil Nadu Budget 2019 – Education: 2019 – 2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில் கல்வி துறைக்கான சிறப்பு அம்சங்களை கீழ்கண்டவாறு காணலாம்

  • மறைந்த முன்னாள் குடியரசு தலைவரும் விஞ்ஞானியுமான ஏ பி ஜே அப்துல் கலாம் அவர்களின் பெயரில் ராமேஸ்வரத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும்.
  • பள்ளிக்கல்வி துறைக்கு ரூபாய் 28,757.62 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • உயர் கல்வி துறைக்கு ரூபாய் 4584.21 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்காக ரூபாய் 1362 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் ரூபாய் 2791 கோடியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம்.
  • புத்தகப்பைகள், காலணிகள், நோட்டுப் புத்தகங்கள், பாடப் புத்தகங்கள் உள்ளிட்டவைகளை விலையில்லாமல் வழங்க 1,656 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • நபார்டு உதவியுடன் பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் கட்ட ரூ.381 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • முதல் முதல்முறையாக பட்டதாரி மாணவ, மாணவியருக்கு கல்வி கட்டணம் வழங்க ரூ.460 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • வேலைவாய்ப்பற்ற பொறியியல் பட்டதாரிகளுக்கு உயர்நிலை தொழில்நுட்ப திறன் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • 2011-12 ஆம் ஆண்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 63,178 ஆக இருந்தது. 2018-19 ஆம் ஆண்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது.
  • தொடக்கநிலை வகுப்புகளில் நிகர மாணவர் சேர்க்கை விகிதம் 99.8 ஆக உயர்வு.
  • Tamil Nadu Budget 2019 – Education: தமிழக பட்ஜெட் 2019 – கல்வித்துறை

தமிழக பட்ஜெட் 2019 – வேளாண் துறை மற்றும் விவசாயிகளுக்கு!

Tamil Nadu Budget 2019 For Agriculture and Farmers: 2019 – 2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில் வேளாண் துறைக்கான சிறப்பு அம்சங்களை கீழ்கண்டவாறு காணலாம்.

  • விவசாயத்திற்கு ரூபாய் 10,550 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • நடப்பு நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூபாய் 10,000 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • பயிர் கடன் மீதான வட்டி தள்ளுபடிக்கு ரூபாய் 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • பயிர் காப்பீடு திட்டத்திற்கு ரூபாய் 621.59 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இரண்டு லட்சம் ஹெக்டர் பரப்பில் தண்ணீர் பாசன திட்டத்திற்கு ரூபாய் 1361 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • சூரிய சக்தியில் இயங்கும் 2000 பம்பு செட்டுகள் 90 சதவீத மானியத்துடன் வழங்கப்படும்.
  • கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகையாக 2000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • நெல் கொள்முதல் ஊக்கத் திட்டத்திற்கு ரூபாய் 180 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சாதாரண ரக நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூபாய் 1800-க்கும், சன்ன ரக நெல் ரூபாய் 1840-க்கும் வழங்கப்படும்.
  • விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 8.72 லட்சம் ஏழை பெண்கள் பயனடைந்துள்ளனர். இந்த நிதியாண்டிலும் இத்திட்டம் தொடர ரூபாய் 198.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • நாட்டின, கலப்பின காளைகளின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்க ரூபாய் 100 கோடி செலவில் புதிய திட்டம் கொண்டு வரப்படும்.
  • உழவர் உற்பத்தியாளர் அமைப்புக்கு ரூபாய் 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இயற்கை வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறைக்கு 79.73 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் இயற்கை வேளாண்மை சான்று வழங்கும் மையங்கள் அமைக்கப்படும்.
  • வேளாண் இயந்திரமாக்கல் திட்டத்திற்கு ரூபாய் 172 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 128 வட்டார அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் மற்றும் 360 கிராம அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்.
  • கஜா புயல் நிவாரணத்திற்காக 2361.41 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Tamil Nadu Budget 2019 For Agriculture and Farmers – தமிழக பட்ஜெட் 2019: வேளாண் துறை மற்றும் விவசாயிகளுக்கு!

தமிழக பட்ஜெட் 2019 – போக்குவரத்துத்துறை

Tamil Nadu Budget 2019-Transportation2019: 2020 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில் போக்குவரத்து துறைக்கான சிறப்பு அம்சங்களை கீழ்கண்டவாறு காணலாம்.

  • நெடுஞ்சாலை துறைக்கு 13,605 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 1142 கோடி செலவில் 1986 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 2681 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தில் 45.01 கிலோமீட்டர் தூரமுள்ள வழித்தட பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது. 2 வழித்தடங்கள் இந்த
    மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது.
  • இனி வரும் நாட்களில் இரண்டாம் கட்டத்தின் கீழ் 118.90 கிலோமீட்டர் நீளமுள்ள 3 மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும். மாதவரம் – சோழிங்கநல்லூர், மாதவரம் – கோயம்பேடு வரை 52.01 கிலோமீட்டர் நீளமுள்ள வழித்தடங்களில் மெட்ரோ திட்டம் கொண்டு வரப்படும்.
  • மீனம்பாக்கம்-வண்டலூர் இடையே மெட்ரோ ரயில் இயக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன.
  • 256 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க ரூபாய் 726.62 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • சென்னை,கோவை மற்றும் மதுரையில் 500 புதிய மின்சார பேருந்துகள் இயக்கப்படும்.
  • ஜெர்மன் கடனுதவியுடன் 12,000 BS – 4 என்ஜின் பேருந்துகளும் 2000 மின்சார பேருந்துகளும் வாங்கப்படும்.

Tamil Nadu Budget 2019: Transportation – தமிழக பட்ஜெட் 2019 – போக்குவரத்துத்துறை

ரிசர்வ் வங்கியின் குறுகிய கால கடன்களுக்கு வட்டி குறைப்பு

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி தற்போதைய 6.50 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 0.25 சதவீதம் வட்டி குறைக்கப்பட்டுள்ளது. ஒன்றரை வருடங்களுக்கு பிறகு ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.மும்பையில் நடைபெற்ற நிதிக்கொள்கை ஆய்வுக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் வீடு வாகனங்களுக்கு வட்டி விகிதங்கள் குறைய வாய்ப்பு உள்ளது.

இடைகால பட்ஜெட் ஒரு தொடக்கம் தான் – மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி

இன்று பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்கத்தின் தாக்கூர்நகரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். ’’நேற்று தாக்கல் செய்யப்பட்ட இடைகால பட்ஜெட் ஒரு தொடக்கம் தான், தேர்தலுக்கு பின்னர் தாக்கல் செய்யப்பட இருக்கும் பட்ஜெட் இதனை காட்டிலும் சிறப்பம்சங்களை உடையதாய் அமையும், ஏழை எளியோருக்கு பயனுள்ளதாகவும், குறிப்பாக இளம் பட்டதாரிகளுக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் அமைக்கப்படும்’’. என்றார் பிரதமர் மோடி.

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா இடைக்கால பட்ஜெட் 2019?

தற்காலிக நிதி அமைச்சர் பியுஷ் கோயல் நேற்று இந்திய பாராளுமன்றத்தில் 2018-2019 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். ஜி எஸ் டி மற்றும் பண மதிப்பு இழப்பிற்கு பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு வழக்கத்தை விட அதிகமாகவே இருந்தது. மோடி அரசின் நடப்பு ஆட்சிக்கான கடைசி பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

வருமான வரி விலக்குகள்:

  • ரூபாய் 5 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெரும் தனி நபர்கள் வருமான வரி செலுத்த தேவை இல்லை. 3 கோடி நடுத்தர குடும்பத்தினர் இதனால் பயன்பெறுவர். 18,500 ஆயிரம் கோடி வரை அரசுக்கு இதனால் இழப்பு ஏற்படும்.
  • ஆண்டு வருமானத்தில் நிலையான கழிவு( ஸ்டாண்டர்ட் டிடக்ஸன்) ரூபாய் 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

முதலீடுகளுக்கான வரி விலக்குகள்:

  • ரூபாய் 6.5 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் பெரும் தனி நபர்கள் வருங்கால வைப்பு நிதி மற்றும் பரிந்துரைக்கப்பட்ட பங்குகளில் முதலீடு செய்திருந்தால் வரி செலுத்த தேவை இல்லை.
  • அஞ்சலகம் மற்றும் வங்கி சேமிப்பு மூலம் வரும் வருமானத்தில் ரூபாய் 40,000 வரை வரி விளக்கு.
  • வீட்டு வாடகைகள் மூலம் பெரும் வருமானத்திற்கான வரி வரம்பு 1.8 லட்சத்திலிருந்து 2.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • வீடுகளில் முதலீடு செய்யப்படும் மூலதன வரி ஆதாயம் ஒரு வீட்டில் இருந்து இரண்டு வீடுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு:

  • 2 ஹெக்டர் மற்றும் அதற்கு குறைவாக நிலம் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6 ஆயிரம் வழங்கப்படும். இதன் மூலம் 12 கோடி விவசாய குடும்பங்கள் பயன்பெறும். பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் மூலம் இத்தொகை 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும்.
  • இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வங்கி கடன் வட்டியில் 2 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
  • கிசான் கிரெடிட் கார்டு மூலமாக கால்நடை மற்றும் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவோருக்கு 2 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும்.

தொழிலாளர்களுக்கு:

  • அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 3000 ஓய்வு ஊதியம் வழங்கப்படும்.
  • அமைப்பு சாரா தொழிலாளர்கள் மாதம் ரூபாய் 15,000 வருமானம் பெரும் வகையில் புதிய பிரதம மந்திரி ஷிரம் யோகி
    மந்தன் யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்படும். மாதந்தோறும் ரூபாய் 100 பங்களிப்பாக செலுத்தும் தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற பின்னர் மாதந்தோறும் ரூபாய் 3000 ஓய்வூதியம் பெறுவார்கள். இதற்காக அரசு ரூபாய் 500 கோடி ஒதுக்கியுள்ளது.
  • தொழிலாளர்களுக்கான க்ராஜுவிட்டி உச்ச வரம்பு 10 லட்சத்திலிருந்து 30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் இவ்வாறான சலுகைகளை மோடி அரசு வழங்கியிருப்பது தேர்தல் வெற்றிக்காக செய்யும் தந்திரம் என்று சில அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.

இது குறித்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறுகையில், “மோடி அரசின் இடைக்கால பட்ஜெட் பாரத மக்களை ஆசை வார்த்தை காட்டி திசைதிருப்பும் மலிவான தந்திரத்துடன் கூடிய ஒரு தேர்தல் அறிக்கை” என்றார்.

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா இடைக்கால பட்ஜெட் 2019? Is the interim budget 2019 satisified the expectations of poor and middle class.

எங்களை காப்பி அடித்த மத்திய அரசு – பா.சிதம்பரம்

தற்காலிகமாக நிதிஅமைச்சர் பொறுப்பு பியுஷ் கோயல் நேற்று நடப்பு ஆண்டிற்கான இடைகால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது தொடர்பாக இந்தியா முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். முன்னாள் நிதிஅமைச்சர் பா.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் நாட்டின் ஏழை மக்களுக்கே முன்னுரிமை வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் திட்டங்களை காப்பி அடித்துள்ள பொறுப்பு நிதிஅமைச்சருக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்

இடைக்கால பட்ஜெட் 2019 : தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ. 2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக அதிகரிப்பு

மத்திய அரசின் 6வது மற்றும் கடைசி பட்ஜெட்டை இடைக்கால பட்ஜெட்டாக மத்திய நிதியமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர், எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பினர். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன், அமைச்சரவை சகாக்களுடன் கோயல் ஆலோசனை நடத்தினார். பின்னர், ஜனாதிபதியையும் சந்தித்தார். தொடர்ந்து, இந்த பட்ஜெட்டிற்கு பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளித்தது. இந்த பட்ஜெட்டில், தனி நபர் வருமான வரிக்கான உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் ரூ.5 லட்சமாக இருந்தால் வருமானவரி செலுத்த வேண்டியதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்களாக, பேட்டரி கார்களை இந்தியாவிலேயே தயாரிக்க முன்னுரிமை வழங்கப்படும், 2030-ல் உலகிலேயே பேட்டரி கார் அதிகம் தயாரிக்க நடவடிக்கை, வயதானவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அறிவிப்பு, மீன்வளர்ப்புக்கு தனித்துறை அமைக்கப்படும், திரைப்பட தயாரிப்பிற்கு ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்கப்படும், பணிபுரியும் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு 26 வாரங்கள், அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் டிஜிட்டல் கிராமங்கள் அமைக்கப்படும் போன்றைய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இன்று தாக்கலாகிறது இடைக்கால பட்ஜெட்

2019 இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மக்களவை தேர்தல் வர உள்ளதாலும், பாஜக தலைமையிலான இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட் என்பதாலும் இடைக்கால பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இந்த பட்ஜெட்டை பியுஷ் கோயல் தாக்கல் செய்கிறார். மோடி அரசின் கடைசி பட்ஜெட் இதுவாகும். 2019 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் மீது பொதுமக்கள் மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளனர். குறிப்பாக நடுத்தர வர்க்கம் பயன்பெறும் வகையில் வருமான வரி விலக்கு வரம்பை இரட்டிப்பாக்கலாம் எனத் தகவல்கள் வந்துள்ளன.

நாளை இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யும் ரயில்வே துறை அமைச்சர்

வழக்கமாக இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சரே தாக்கல் செய்வார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளதால், நாளைய இடைக்காலப் பட்ஜெட்டை ரயில்வே துறை அமைச்சராக உள்ள பியுஷ் கோயல் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில், நடுத்தர வர்க்கம் பயன்பெறும் வகையில் பல சலுகைகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.