BJP news in Tamil Nadu

Lok Sabha Elections 2019 News: தம்பிதுரை கூறுவது அவரது சொந்த கருத்து

Lok Sabha Elections 2019 : மக்களவை தேர்தலை பாஜகவோடு கூட்டணி அமைத்து எதிர்கொள்ள அதிமுக திட்டமிட்டுள்ளது, கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் அறிவிக்கப்படும் இந்த தருணத்திலும் பாஜகவை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கு பதிலளித்த பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தம்பிதுரை கூறுவது அவரது சொந்த கருத்து எனவும், அது அதிமுகவின் நிலைப்பாடு இல்லை எனவும் கூறிப்பிட்டுள்ளார்.


Lok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர்

Lok Sabha Elections 2019 : மக்களவை தேர்தலில் தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் – திமுக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், பாஜக -அதிமுக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், “பாஜக உடன் கூட்டணி வைப்பதில் அதிமுக கட்சியினருக்கு உள்ளேயே மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகிறது. தங்களுடன் யாரும் கூட்டணி வைக்கமாட்டார்கள் என்கிற பயத்தில் பாஜக அதிமுகவை மிரட்டி கூட்டணிக்கு பணியவைத்துவிட முயற்சி செய்து வருகிறது” என்றார்.

ஸ்டாலினின் கிராமசபை கூட்டங்கள் தான் காமெடி – தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சனம்

சென்னை பாஜக கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், திருப்பூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு முன்பாக அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். கடந்த இரண்டு முறை பிரதமர் தமிழகம் வந்தபோது கோ பேக் மோடி என்ற hashtag ட்ரெண்டிங் ஆனது. ஆனால் இந்த முறை தமிழக மக்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள். இடைக்கால பட்ஜெட்டை காமெடி என்று கூறும் மு க ஸ்டாலினின் கிராமசபை கூட்டங்கள் தான் காமெடியாக உள்ளது. பாரதிய ஜனதா கூட்டணி குறித்து பேசப்பட்டு வருகிறது இறுதி முடிவு எடுத்தவுடன் செய்தியாளர்களுக்கு தெரிவிக்கப்படும் என்று கூறினார்.