Ajith

10-வது வாரத்திலும் சாதனை படைத்து வரும் விஸ்வாசம்

தல அஜித் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த விஸ்வாசம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் விஸ்வாசம் வெலிவந்து 10 வாரம் ஆகியும் இன்னும் ஒரு சில திரையரங்கில் இப்படம் வெற்றி நடைப்போடுகின்றது. தற்போது 10 வது வாரத்தை தொட்டுள்ள விஸ்வாசம் பட சென்னை ரோகினி திரையரங்கில் திரைபடப்பட்டுள்ள நிலையில், இந்த படத்திற்காக மேலும் 2 ஷோவை அதிகரித்துள்ளது.

அஜித் நடிக்கும் 59வது படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Nerkonda Paarvai First Look:பாலிவுட்டில் அமித்தாப்பச்சன் நடித்த படம் பின்க். இது நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த படத்தை தமிழில் ரிமேக் செய்ய சதுரங்க வேட்டை மற்றும் தீரன் போன்ற வெற்றி படங்களை தந்த இயக்குனர் வினோத் முன்வந்துள்ளார். இப்படம் பெண் உரிமைக்கு குரல் கொடுக்கும் விதமான கதைகளம் கொண்டதாக தெரிகிறது. நேற்று மாலை இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியானது. தமிழில் இப்படத்தின் பெயர் நேர் கொண்ட பார்வை என வைக்கப்பட்டுள்ளது. அந்த ஃபஸ்ட் லுக்கில் அஜித் கம்பீரமான தோற்றத்தில் இருப்பது அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் இப்படம் மே 1 ஆம் தேதி திரைக்கு வரலாம் என கூறப்படுகிறது.

விசுவாசம் படத்தின் உண்மையான வசூல் நிலவரத்தை வெளியிட்ட சத்யஜோதி தியாகராஜன்

Viswasam Box Office Update:  சிவா இயக்கத்தில் அஜித் நயன்தாரா, அனுஷ்கா,விவேக், ஜெகபதிபாபு,ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் விசுவாசம். ஜனவரி 10ஆம் தேதி வெளியான திரைப்படத்தின் வசூல் சாதனை பற்றி கூறிய சத்யஜோதி தியாகராஜன் “இந்தப் படம்தான் எனது வாழ் நாளில் ஆகச்சிறந்தது. இதற்கான பாராட்டு அஜித் மற்றும் ஒட்டுமொத்த படக் குழுவுக்கும் தான் செல்ல வேண்டும். இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 125 கோடி முதல் 135 கோடி வசூல் செய்துள்ளது. விநியோகஸ்தர்களில் வாழ்நாள் பங்கு என்பது ரூபாய் 70 கோடி முதல் ரூபாய் 75 கோடி வரை எட்டும்.எந்த ஒரு அளவுகோலை வைத்து மதிப்பிட்டாலும் இந்த வசூல் வியப்புக்குரியது. படத்தின் கரு குடும்பம் குடும்பமாக வந்து ரசிகர்களை படம் பார்க்க வைத்தது. 600 திரையரங்குகளில் நாங்கள் படத்தை ரிலீஸ் செய்ய முடிந்தது எங்களுக்கு சாதகமாக அமைந்தது” எனத் தெரிவித்தார்.

விசுவாசம் திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வெளியிடக்கூடாது. அஜித் ரசிகர்கள் கண்டனம்

Viswasam On Amazon Prime:  அஜித் மற்றும் சிவா கூட்டணியில் நான்காவது முறையாக இணைந்து விசுவாசம் படத்தை தயாரித்தனர். இதில் நயன்தாரா மற்றும் யோகிபாபு இணைந்து நடித்துள்ளனர். குடும்பக் கதையை மையமாக கொண்டுள்ள இப்படம் மக்களிடையே மற்றும் அஜித் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. விசுவாசம் படத்தினுடைய டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் பெற்றுள்ளது. இதனிடையே விசுவாசம் படத்தை அமேசான் பிரைம் வெளியிடலாமா என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்திருந்தனர். இதற்கு பல அஜித் ரசிகர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். விசுவாசம் இன்னும் சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதால் அஜித் ரசிகர்கள் இதை அமேசான் பிரைமில் வெளியிடக்கூடாது என்றும் தல அஜித்துடைய பிறந்த நாளான மே 1 அன்று வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு வருகின்றனர்.

Viswasam box office collection: வசூலில் அஜித்தின் விஸ்வாசம் இரண்டாவது இடம்

Viswasam Collections : பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களின் படி உலக அளவில் தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் அதிக வசூல் கொடுத்த படங்களில் மெர்சல் மற்றும் சர்க்காரை பின்னுக்கு தள்ளி சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படம் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் இத்திரைப்படம் 170 கோடி வசூல் செய்துள்ளது. முதல் இடத்தை எஸ் எஸ் ராஜமௌலியின் பாகுபலி தக்கவைத்துள்ளது.



உலக முதலீட்டாளர்களை கவர்ந்த நடிகர் அஜித் குழுவின் “ட்ரோன் டாக்ஸி”

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடிகர் அஜித் தொழில்நுட்ப வழிகாட்டியாக கொண்ட தக்ஷா மாணவர் குழு இந்தியாவில் முதல் முறையாக வானில் பறக்கும் ஏர் டாக்சியை தயாரித்து சாதனை படைத்தது. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், தக்ஷா குழு வடிவமைத்த பெரிய வடிவிலான ட்ரோன் டாக்ஸி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. பல்வேறு நிறுவனங்கள் தங்களது கண்டுபிடிப்புகளை காட்சிக்கு வைத்துள்ள நிலையில் தக்ஷா குழுவின் மாணவர்கள் உருவாக்கியுள்ள ட்ரோன் டாக்ஸி முதலீட்டாளர்களை கவர்ந்தது.

10 Year Challengeல் வைரலான அஜித் மகள் அனிகா புகைப்படங்கள்

கடந்த 10ம் தேதி வெளியான விஸ்வாசம் படத்தில் அஜித்-நயன்தாரா ஜோடியின் மகளாக நடித்த நடிகை அனிகா. இவர் கவுதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்திலும் அஜித்தின் மகளாக நடித்திருந்தார். தற்போது பிரபலமாகிவரும் 10 years challengeல் அனிகாவின் புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவர் பல ஆண்டுகளாக குழந்தை நட்சத்திரமாக பல மலையாள படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஸ்வாசம் அதிகாரப்பூர்வ தமிழக பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் விவரம் வெளியீடு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10ந் தேதி பேட்ட மற்றும் விஸ்வாசம் வெளியானது. இரண்டு படங்களில் எந்த படம் அதிக வசூல் என்று ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே சமூக வலைதளங்களில் வார்த்தைப்போர் நடைபெற்று வந்தது. இந்நிலையில், ரஜினியின் பேட்ட தமிழ்நாட்டில் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்த சிறிது நேரத்தில் விஸ்வாசம் தமிழகத்தில் மட்டும் 125 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் அறிவித்துள்ளது.