ADMK

அதிமுக போட்டியிடும் 20 தொகுதிகள்: முழு பட்டியல் விவரம் இதோ!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்று வெளியிட்டார்.

அதிமுக போட்டியிடும் 20 தொகுதிகள்

  1. சேலம்
  2. நாமக்கல்
  3. கிருஷ்ணகிரி
  4. ஈரோடு
  5. கரூர்
  6. திருப்பூர்
  7. பொள்ளாச்சி
  8. ஆரணி
  9. திருவண்ணாமலை
  10. சிதம்பரம் (தனி)
  11. பெரம்பலூர்
  12. தேனி
  13. மதுரை
  14. நீலகிரி (தனி)
  15. திருநெல்வேலி
  16. நாகப்பட்டனம் (தனி)
  17. மயிலாடுதுரை
  18. திருவள்ளூர் (தனி)
  19. காஞ்சிபுரம் (தனி)
  20. தென் சென்னை

தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்தில், அவரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி. அப்போது அவரை பிரேமலதாவும் சுதீஷும் வரவேற்றனர். முதல்வருடன் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், சி விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். இன்று மாலை அதிமுகவின் அதிகாரப்பூர்வமான தொகுதி பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு எனவும், விஜயகாந்தின் உடல்நலம் குறித்து முதல்வர் விசாரித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரம் நடைபெற்றது.

வேட்பாளர் தேர்வு செய்வது தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் ஆலோசனை

அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு அதிமுக தொகுதிகளை பங்கிட்டுக் கொடுத்துள்ளது. பாமகவுக்கு ஏழு தொகுதிகளும் பாஜகவுக்கு 5 தொகுதிகளும் இன்னும் சில கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் வழங்கியுள்ளது. தற்போது அதிமுக கைவசம் 25 தொகுதிகள் உள்ளன. மேலும் சில கட்சிகள் கூட்டணிக்கு வர இருப்பதால் அவர்களுக்கும் தொகுதிகளை பங்கிட்டுக் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் அதிமுக உள்ளது. இந்நிலையில் அதிமுக போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வு செய்வது குறித்த ஆலோசனையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எந்தெந்ததொகுதிகளில் அதிமுக போட்டியிடலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அதிமுக தேர்தல் அறிக்கையை ஓபிஎஸ்-ஈபிஎஸ்சிடம் சமர்ப்பித்தார் பொன்னையன்

மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் இறுதியில் நடைபெற உள்ளது இதனை கருத்தில் கொண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் அறிக்கையை தயாரித்து உள்ளது. அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்களான முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் கடந்த ஒரு மாத காலமாக அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதிமுக தேர்தல் அறிக்கையை தலைமை கழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் பொன்னையன் சமர்ப்பித்தார். தேர்தல் அறிக்கையில் ஏதும் திருத்தம் செய்ய வேண்டுமானால் அதை சரி செய்து பின்னர் முறையாக மக்கள் பார்வைக்கு வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்துக்கு பலன் இல்லை

தம்பிதுரை குற்றச்சாட்டு மத்திய அரசின் 5 ஆண்டு பட்ஜெட்களில் தமிழகத்துக்கு ஏந்த பலனும் கிடைக்க வில்லை என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்த்துள்ளார். தற்போது அறிவிக்கப்பட்ட பட்ஜெட் பாஜாகாவின் தேர்தல் அறிக்கைபோல் தான் உள்ளது என்று கரூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு ” தமிழகத்தின் கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிகளோடு கூட்டணி” என முதல்வர் அறிவித்துள்ளார். என்றார் தம்பிதுரை.

வாஜ்பாய் அறிவித்துள்ள பட்ஜெட் எனக் கூறிய அமைச்சர் சீனிவாசன்

அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் “வாஜ்பாய் அறிவித்த பட்ஜெட் அருமையான பட்ஜெட் என முதல்வர் பாராட்டி உள்ளார்” என்று தவறாக குறிப்பிட்டு உள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் ஒருமுறை தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் என்று அவர் குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக – பாஜக கூட்டணி வாய்ப்பு

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்க இருப்பதாகவும் மாநிலத்தின் 24 தொகுதிகளில் தான் போட்டியிட்டு இதர தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளை களம் இருக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவரி 10ஆம் தேதி வெளி வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு தரலாம்: அதிமுக அறிவிப்பு

மக்களவை தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக சார்பில் வேட்பாளர்களாக
போட்டியிட விருப்பமுள்ளவர்கள் 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி பிப்ரவரி 4ம் தேதி தொடங்கி 10ம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பெறலாம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.