விராட் உருவத்தில் இம்ரான் கானை பார்க்கிறேன் – ரவி சாஸ்திரி

Ravi-Shastri-Virat-Kohli-Imran-Khan

பயிற்சியாளராக ரவி சாஸ்திரியும் கேப்டனாக விராட்- உம் இருக்கும் கூட்டணி தொடர்ந்து வெற்றிகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் விராட் பற்றி பேட்டி அளித்த ரவிசாஸ்திரி, நான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரரை அருகாமையில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். விராட் ஒரு அடையாளம். அவரின் தலைமை வேண்டும். அவரைப்போல உழைக்க யாரும் இல்லை. பயிற்சி பெற வருவது, ஒழுக்கம், தியாகம், தனிப்பட்ட விருப்பங்களை தவிர்ப்பது என அனைத்திலும் அவருக்கு நிகரில்லை. இப்படி ஒரு கேப்டனை பெற்றது இந்தியாவின் அதிர்ஷ்டம் என நினைக்கிறேன். விராட் பல வழிகளில் எனக்கு இம்ரான் கானை நினைவுபடுத்துகிறார். அவர் தனது சொந்த வழியில் அணியை முன்னெடுத்து தலைமை தாங்குகிறார். நான் பார்த்ததில் விராட் பல மடங்கு முன்னேற்றம் அடைந்து விட்டார். அவர் மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறார். உதாரணத்திற்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை வென்றதை குறிப்பிடலாம் என்று கூறினார்.