ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வரலாற்று சாதனை படைத்தது இந்தியா

MS Dhoni

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடந்த மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் இந்திய அணி அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்திய அணி முதல் முறையாக ஆஸ்திரேலியா மண்ணில், அந்நாட்டுக்கு எதிராக ஒருநாள் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.