Thirumavalavan

தொல்.திருமாவளவன்
தலைவர் - விடுதலை சிறுத்தைகள்
முழுப் பெயர்தொல்.திருமாவளவன்
பிறந்த தேதி17 Aug 1962 (வயது 56)
பிறந்த இடம்அங்கனூர், அரியலூர்
கட்சி பெயர்விடுதலை சிறுத்தைகள்
கல்விPost Graduate
தொழில்அரசியல்வாதி மற்றும் தலித்ஆர்வலர்
தந்தை பெயர்தொல்காப்பியன்
தாயார் பெயர்பெரியம்மாள்
துணைவியார் பெயர்------------

முனைவர் தொல். திருமாவளவன் தமிழ்நாட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர். தலித்துக்கள் முன்னேற்றத்துக்காக சட்டம், சமூகம், அரசியல் என பல தளங்களில் தன்னை ஈடுபடுத்தி தமிழ்நாடு தலித்துக்களின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இயங்கி வருகின்றார்.

கொள்கைகள்:
தலித் மற்றும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்துதல், தனித்தமிழ் வளர்ச்சிக்கு உதவுதல், சாதிய அடக்குமுறைக்கு எதிராக கருத்திடுதல், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் தனித்தமிழீழக் கொள்கைக்கும் ஆதரவளித்தல், இந்துத்துவ கொள்கையினை எதிர்த்தல் போன்றவை அவரது முக்கியக் கொள்கைகளாகும்.

அரசியல் வாழ்க்கை:
ஆரம்பக் காலத்தில், தேர்தல் அரசியலில் பங்கெடுக்க மாட்டோம் என்று திருமாவால் அறிவிக்கப்பட்ட இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள். 1990 – 1999 காலகட்டத்தில் தலித் மக்கள் மேம்பாட்டுக்காக, இலங்கைப் பிரச்சினைக்காக, பஞ்சமி நில மீட்புக்காக எனப் பல போராட்டங்களை நடத்தியது விசிக. திருமாவை தேர்தல் அரசியல் நோக்கி அழைத்து வந்தவர் மூப்பனார். 1999 மக்களவைத் தேர்தலில் தமாகா கூட்டணிக்கு விசிகவை அவர் அழைத்துவந்தார். முதல் தேர்தலிலேயே பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளையும், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளையும் விசிக பெற்றதால், திருமாவை அரசியல் உலகு திரும்பிப் பார்த்தது.

2001 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டது விசிக. மங்களூரில் போட்டியிட்ட திருமாவளவன் சட்டப்பேரவை உறுப்பினரானார். ஆனால், திமுக தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிய அரசியல் மதிப்பைத் தர மறுக்கிறது என்று குற்றஞ்சாட்டிய திருமாவளவன், தனது எம்எல்ஏ பதவியை உதறிவிட்டு, 2004-ல் கூட்டணியிலிருந்து வெளியேறினார். 2004 மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், புதிய தமிழகம், மக்கள் தமிழ்த் தேசியம் போன்ற கட்சிகளுடன் இணைந்து மக்கள் கூட்டணியை உருவாக்கினார். தேர்தலில் தோற்றாலும், சிதம்பரம் தொகுதியில் இரண்டரை லட்சம் வாக்குகளை திருமா அள்ளினார்.