Velmurugan

வேல்முருகன்
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்
முழுப் பெயர்வேல்முருகன்
பிறந்த தேதிஅகவை 40
பிறந்த இடம்பண்ருட்டி
கட்சி பெயர்தமிழக வாழ்வுரிமை கட்சி
கல்வி12ஆம் வகுப்பு
தொழில்அரசியல்
தந்தை பெயர்திருநாவுகரசர்
தாயார் பெயர்----------
துணைவியார் பெயர்-----------

வேல்முருகன் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும் முன்னாள் தமிழக சட்டப்பேரவை உறுப்பினருமாவார். பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக பண்ருட்டித் தொகுதியிலிருந்து 2001 இலும் 2006இலும் மாநில சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011 தேர்தலில், புதியதாக உருவாக்கப்பட்ட நெய்வேலி சட்டமன்றத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு அதிமுகவின் எம்.பி.எஸ். சிவசுப்பிரமணியனிடம் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் இணை பொதுச்செயலாளராக விளங்கிய வேல்முருகன் கட்சி கட்டுப்பாட்டை மீறியதற்காக நவம்பர் 1, 2011 அன்று கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.பின்னர் தை முதல் நாள், 2012 தமிழக வாழ்வுரிமைக் கட்சி எனும் புதிய கட்சியைத் தொடங்கினார்.