G. K. Vasan

ஜி. கே. வாசன்
தமிழ் மாநில காங்கிரஸ் - தலைவர்
முழுப் பெயர்ஜி. கே. வாசன்
பிறந்த தேதி28 டிசம்பர் 1964
பிறந்த இடம்கும்பகோணம்
கட்சி பெயர்தமிழ் மாநில காங்கிரஸ்
கல்விபி.ஏ
தொழில்அரசியல்
தந்தை பெயர்ஜி.கே மூப்பனார்
தாயார் பெயர்கஸ்தூரி
துணைவியார் பெயர்சுனிதா

ஜி. கே. வாசன் தமிழ்நாட்டு அரசியல்வாதி. தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பணியாற்றியவர். தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளார். தனது தந்தையின் மரணத்திற்கு பின் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக பணியாற்றி பின்னர் அதனை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார். பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் செயலாளராகவும் , இருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக வெற்றி பெற்று ஒருமுறை மத்திய புள்ளி விவரத்துறை இணை அமைச்சராகவும், மத்திய கப்பல் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி 2014ஆண்டு மக்களவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் காங்கிரஸ் தலைமையுடன் வாசனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய ஜி.கே. வாசன், 2014 நவம்பர் 28இல் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை மீண்டும் தொடங்கினார். திருவையாறு தியாகபிரம்மா மகாஉத்சவ சபாவின் தலைவராகவும், அதன் நிர்வாக அறங்காவலராகவும் உள்ளார்.