Anbumani Ramadoss

அன்புமணி இராமதாஸ்
நாடாளுமன்ற உறுப்பினர் - பாட்டாளி மக்கள் கட்சி
முழுப் பெயர்அன்புமணி இராமதாஸ்
பிறந்த தேதி09 Oct 1968 (வயது 50)
பிறந்த இடம்பாண்டிச்சேரி
கட்சி பெயர்பாமக
கல்விGraduate Professional
தொழில்மருத்துவர்
தந்தை பெயர்திரு.எஸ். இராமதாஸ்
தாயார் பெயர்திருமதி. சரஸ்வதி இராமதாஸ்
துணைவியார் பெயர்சௌமியா அன்புமணி

தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியான டாக்டர். அன்புமணி இராமதாஸ், 16 மே 2014 முதல் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினராகவும், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவராகவும் உள்ளார். தனது 35வது வயதில் இளம் கேபினேட் அமைச்சராக 2004-2009 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தை கவனித்துவந்தார். முன்னாள் சுகாதார அமைச்சர் மற்றும் இந்து தேசியவாதியான இவர், நாடு முழுவதும் புகையிலை மற்றும் மதுவை தடைசெய்யும் தனது விடாமுயற்சிகளுக்காக அறியப்படுபவர்.

2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக தர்மபுரியில் போட்டியிட்டு 16வது மக்களவைக்கு தேர்வானார். அதே ஆண்டு காலியாக உள்ள நாடாளுமன்ற தொகுதிகளுக்காக குழுவின் உறுப்பினரானார். மேலும் ஊரக மேம்பாடு மற்றும் உள்துறை அமைச்சக குழுவின் உறுப்பிரானார். தற்போது தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினராக 16மே 2014 முதல் பதவி வகித்துவருகிறார். 2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் பாமகவின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்புமணி, பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்டு 18,446 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.