Navas Kani

நவாஸ் கனி
இராமநாதபுரம் மக்களவை தொகுதி வேட்பாளர் - இந்திய யூனியன் மூஸ்லீம் லீக்
முழுப் பெயர்நவாஸ் கனி
பிறந்த தேதி14 May 1979 (வயது 40)
பிறந்த இடம்குருவாடி, இராமநாதபுரம்
கட்சி பெயர்இந்திய யூனியன் மூஸ்லீம் லீக்
கல்வி----------
தொழில்சினிமா – இயக்குநர்
தந்தை பெயர்காதர் மீரா கனி
தாயார் பெயர்ரம்ஜான் பீவி
துணைவியார் பெயர்----------

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா சாயல்குடி அருகில் உள்ள குருவாடி என்னும் ஊரில் காதர் மீரா கனி – ரம்ஜான் பீவி தம்பதியருக்கு 14.05.1979 மகனாக பிறந்தவர் கா. நவாஸ்கனி. பள்ளிப்படிப்பை முடித்த பிறகு படிப்படியாக உயர்ந்து நின்று எஸ்.டி. கூரியர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக விளங்குகின்றார். 20.01.2011 அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலையமான சென்னை , காயிதே மில்லத் மன்ஸிலில் நடைபெற்ற “தி டைம்ஸ் ஆப் லீக்” என்ற ஆங்கில பத்திரிகை துவக்க விழாவில் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் முன்னிலையில் கா. நவாஸ்கனி தனது 32 வது வயதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் தன்னை இணைத்துக்கொண்டார். 2011ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அஸ்ஸலாம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழுவில் முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை அறங்காவலராகவும் அதைத் தொடர்ந்து மாநில கௌரவ ஆலோசகராகவும் கடந்த 9 ஆண்டுகளாக இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் சேவையாற்றி வருகின்றார். தற்போது நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் இவர் இராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார்.