T. R. Baalu

டி.ஆர் பாலு
முன்னாள் மத்திய அமைச்சர் - திராவிட முன்னேற்ற கழகம்
முழுப் பெயர்டி.ஆர் பாலு
பிறந்த தேதி15 June 1941 (வயது 76)
பிறந்த இடம்திருவாரூர்
கட்சி பெயர்திராவிட முன்னேற்ற கழகம்
கல்வி----------
தொழில்அரசியல்
தந்தை பெயர்----------
தாயார் பெயர்----------
துணைவியார் பெயர்ரேணுகா தேவி

டி. ஆர். பாலு, திராவிட முன்னேற்ற கழகத்தின் முக்கிய தலைவர் ஆவார். இந்தியாவின் நடுவண் அரசில் அமைச்சராகப் பணியாற்றிய ஓர் அரசியல்வாதி ஆவார். இவர் 1957 ஆம் ஆண்டிலிருந்தே திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்து அரசியலில் பங்களிப்பவர். இவர் 1996 முதல் நான்கு முறை மக்களவையின் உறுப்பினராகத் தென் சென்னை மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை, இந்திய அரசில் கப்பல்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராகப் பணியாற்றினார். இவர் நாடாளுமன்ற திராவிட முன்னேற்றக் கழக தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 1996 முதல் 2014 வரை நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். 2014 முறை யாரும் எதிர்பாராத நிலையில் தோல்வியை சந்தித்தார். 2019 ஆம் ஆண்டு மக்க்ளவை தேர்தலில் அவர் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.