A Raja

ஆ.ராசா
முன்னாள் மத்திய அமைச்சர் - திராவிட முன்னேற்ற கழகம்
முழுப் பெயர்ஆ.ராசா
பிறந்த தேதி26 Oct 1963 (வயது 55)
பிறந்த இடம்பெரம்பலூர்
கட்சி பெயர்திராவிட முன்னேற்ற கழகம்
கல்விPost Graduate
தொழில்வழக்கறிஞர் / அரசியல்
தந்தை பெயர்ஆண்டிமுத்து
தாயார் பெயர்சின்னப்பிள்ளை
துணைவியார் பெயர்எம்.ஏ. பரமேஸ்வரி

ஆ. ராசா ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தில் பிறந்தார். 15 ஆவது இந்திய மக்களவையின் முன்னாள் உறுப்பினர். நீலகிரி மக்களவைத் தொகுதியில் இருந்து தி.மு.க சார்பில் போட்டியிட்டவர் ஆவார். இறுதியாக 15 ஆவது மக்களவை அமைச்சரவையில் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக 16 நவம்பர், 2010 வரை பொறுப்பு வகித்தார். மக்களவைக்கு நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார். வருகின்ற 2019 ஆம் மக்களவை தேர்தலில் இவர் போட்டியிட அதிக வாய்புள்ளதாக கூறப்படுகிறது.

14 ஆவது மக்களவை அமைச்சரவையில் தகவல் தொலைத்தொடர்பு அமைச்சராக அங்கம் வகித்த இவர் 17 அக்டோபர், 2008 அன்று பின்தேதியிட்ட அமைச்சரவை பொறுப்பு விலகல் கடிதத்தை திராவிட முன்னைற்றக் கழகத் தலைவர் திரு. மு. கருணாநிதியிடம் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதை இந்திய அரசாங்கம் தடுத்து நிறுத்தக் கோரி சமர்ப்பித்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகித்த திமுக அமைச்சர்கள் அனைவரும் இலங்கைத் தமிழரின் படுகொலையைக் கண்டித்து பொறுப்பு விலகல் கடிதம் கொடுத்தவர்களில் இவரும் ஒருவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைசெயல்திட்டக்குழுவில் உறுப்பினராக உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப்பரப்புச் செயலாளராகவும் உள்ளார். மக்களவை தேர்தலில் நிலகிரி தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளது.