Vanathi Srinivasan

வானதி சீனிவாசன்
மாநிலத் துணைத் தலைவர் - பா.ஜ.க
முழுப் பெயர்வானதி சீனிவாசன்
பிறந்த தேதி02 Jun 1970 (வயது 48)
பிறந்த இடம்உலியம்பாளையம், கோயம்புத்தூர்
கட்சி பெயர்பாரதிய ஜனதா கட்சி
கல்விPost Graduate
தொழில்வழக்கறிஞர்
தந்தை பெயர்கந்தசாமி
தாயார் பெயர்பூவாத்தாள்
கணவர் பெயர்சீனிவாசன்

விவசாயத்தை பயபக்தியுடன் மேற்கொள்ளும் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த திரு. கந்தசாமி, பூவாத்தாள் தம்பதிக்கு மகளாக பிறந்தவர் வானதி. இவர் பிறந்த குக்கிராமமான உளியம்பாளையம், கோயம்புத்தூரின் பிரபல மருதமலை கோவிலுக்கு அருகாமையில் உள்ளது. தொண்டாமுத்தூர் அரசு பள்ளியில் தொடக்க மற்றும் இடைநிலை கல்வி பயின்ற வானதி, 10, 12 ஆம் வகுப்பில் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்றவர். அதன்பின்னர் கோயம்புத்தூர் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை வேதியியல் பட்டம் பெற்ற வானதி, அங்கு சிறந்த மாணவி விருதையும் பெற்றார். பின்னர் சென்னை டாக்டர். அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் தனது சட்டப்படிப்பையும் முடித்தார். மதிப்புமிக்க மெட்ராஸ் பல்கலைகழகத்தில் சர்வதேச அரசியலமைப்பு சட்டம் என்ற பிரிவில் சட்டமேற்படிப்பையும் முடித்தார்.

இவரின் பணி தொடங்கியது ஒரு வக்கீலாக தான் . பின்னர் சட்டம் பயின்றால் வக்கீலாக தானே இருப்பார் என்று நினைக்கலாம். அந்த வக்கீல் தொழில் தான் அவரின் அரசியல் வாழ்க்கைக்கு அடிகோலியது.

1983 ஆம் ஆண்டு முதன் முதலில் இவர் திரு.ஞானதேசிகன் அவரிடம் ஜூனியராக பணியாற்றினார். அதை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 20 ஆண்டுகளாக வக்கீலாக பணியாற்றி வந்தார். இதைத் தொடர்ந்து சிறந்த சமுக செயற்பாட்டாளரான இவர் 2011 , 2016 ஆண்டு தேர்தலில் பா.ஜ.க சார்பில் தமிழகத்தில் போட்டியிட்ட பின்பே தமிழக அரசியலில் இவரின் முகம் பிரபலமானது . தமிழக பா.ஜ.க கட்சியின் மாநில செயலாளராக செயல்பட்டுவந்த இவர் தான் , தற்போதைய பா.ஜ.க கட்சியின் மாநிலத் துணைத் தலைவர்.