Tamilisai Soundararajan

தமிழிசை சவுந்தரராஜன்
மாநிலத் தலைவர் - பா.ஜ.க
முழுப் பெயர்டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்
பிறந்த தேதி02 Nov 1961 (வயது 57)
பிறந்த இடம்நாகர்கோவில்
கட்சி பெயர்பாரதிய ஜனதா கட்சி
கல்விGraduate Professional
தொழில்மருத்துவர் / அரசியல்
தந்தை பெயர்குமரி அனந்தன்
தாயார் பெயர்கிருஷ்ணகுமாரி
கணவர் பெயர்டாக்டர். பி. சவுந்தரராஜன்

மருத்துவராக இருந்து அரசியல்வாதியாக மாறிய தமிழிசை சவுந்தரராஜன், சென்னை மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார். டாக்டர். எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழகத்தில் டி.ஜி.ஓ படித்த அவர், கனடாவில் சோனாலஜி மற்றும் எப்இடி சிகிச்சைக்கு சிறப்பு பயிற்சி பெற்றுள்ளார். ஶ்ரீ ராமசந்திரா மருத்துவ கல்லூரியில் துணை போராசிரியராக தனது தொழில் வாழ்க்கையை துவங்கியவர், 5 ஆண்டுகளுக்கு பின்னர் பா.ஜ.காவில் இணைந்து முழு நேர அரசியலில் குதித்தார்.

1999ல் தென்சென்னை மாவட்ட மருத்துவ அணி செயலாளராக தனது அரசியல் வாழ்வை துவங்கிய தமிழிசை, 2001ல் மருத்துவ அணி மாநில பொதுச்செயலாளர், 2005ல் தென்மாநில மருத்துவ அணி ஒருங்கிணைப்பாளர், 2007ல் மாநில பொதுச்செயலாளர், 2010ல் மாநில துணைத்தலைவர், 2013ல் பா.ஜ.க தேசிய செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். தற்போது பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக உள்ளார் தமிழிசை. 2006 &2011 தமிழக சட்டமன்ற தேர்தல் மற்றும் 2009 மக்களவை தேர்தலில் போட்டியிட்ட தமிழசை, மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.