O Panneerselvam

ஓ. பன்னீர்செல்வம்
துணை முதல்வர் - அஇஅதிமுக
முழுப் பெயர்ஓ. பன்னீர்செல்வம்
பிறந்த தேதி14 Jan 1951 (வயது 68)
பிறந்த இடம்பெரியகுளம், தேனி
கட்சி பெயர்அதிமுக
கல்வி12th Pass
தொழில்விவசாயம்
தந்தை பெயர்ஒட்டக்கார தேவர்
தாயார் பெயர்பழனியம்மாள் நாச்சியார்
துணைவியார் பெயர்பி. விஜயலட்சுமி

தற்போது தமிழகத்தின் துணை முதல்வராகவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக 21.08.2017 முதல் பதவி வகித்து வருகிறார். தமிழகத்தின் 7வது முதலமைச்சராக பதவி வகித்தவர். ஜெயலலிதா இரண்டு முறை நீதிமன்றத்தால் தண்டனை பெற்று பதவியிழந்தபோதும், அவருக்கு பதிலாக தமிழகத்தின் முதல்வராக பணியாற்றியவர். 2016ல் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் 3வது முறையாக தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றவர். 2 மாதங்களுக்கு பின்னர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தார்.

2001 ஆம் ஆண்டு தேர்தல்:
2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வருவாய்த்துறை அமைச்சர் (மே 19, 2001 – செப்டம்பர் 1, 2001)தமிழக முதல்வர் (செப்டம்பர் 21, 2001 – மார்ச் 1, 2002)பொதுப்பணித்துறை அமைச்சர் (மார்ச் 2, 2002 – டிசம்பர் 2006) போன்ற பொறுப்புகளைப் பெற்றுப் பணியாற்றினார்.

2006 ஆம் ஆண்டு தேர்தல்:
2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், தேனி மாவட்டம், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் போன்ற பொறுப்புகளைப் ஏற்றுப் பணியாற்றினார்.

2011 ஆம் ஆண்டு தேர்தல்:
2011 இல் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நிதி அமைச்சர் மற்றும் அவை முன்னவர் – 16 மே 2011 முதல் பொறுப்பினை ஏற்றுப் பணியாற்றினார்.
2016 இல் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நிதி அமைச்சர் மற்றும் அவை முன்னவர் – 16 மே 2016 முதல் பொறுப்பினை ஏற்றுப் பணியாற்றினார்.