Edappadi K. Palaniswami

எடப்பாடி கே. பழனிச்சாமி
முதலமைச்சர் - அஇஅதிமுக
முழுப் பெயர்எடப்பாடி கே. பழனிச்சாமி
பிறந்த தேதி12 May 1954 (வயது 64)
பிறந்த இடம்சிலுவம் பாளையம், சேலம்
கட்சி பெயர்அஇஅதிமுக
கல்வி12th Pass
தொழில்அரசியல்வாதி, விவசாயி
தந்தை பெயர்கருப்ப கவுண்டர்
தாயார் பெயர்தவசி அம்மாள்
துணைவியார் பெயர்பி. ராதா

1974ம் ஆண்டு அதிமுகவில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார் எடப்பாடி கே. பழனிச்சாமி. 2017ம் ஆண்டு முதல்வர் பதவிக்கு வருவதற்கு முன்பு, இவர் ஜெயலலிதா அமைச்சரவையில், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகத் துறை அமைச்சராக இருந்தார். ஓ.பன்னீர் செல்வம் அமைச்சரவையிலும் இவர் அமைச்சராக இருந்துள்ளார். எடப்பாடி சட்டசபைத் தொகுதியிலிருந்து 1989, 1991, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதில் 1989ம் ஆண்டு சேவல் சின்னத்தின் கீழ், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக பிரிவின் சார்பில் எடப்பாடியில் போட்டியிட்டு வென்றார். அந்த சமயத்தில்தான் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார். பின்னர் ஜெயலலிதாவின் குட்புக்கில் தொடர்ந்து நீடித்தார்.