ஏழை மற்றும் நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா இடைக்கால பட்ஜெட் 2019?

budget 2019

தற்காலிக நிதி அமைச்சர் பியுஷ் கோயல் நேற்று இந்திய பாராளுமன்றத்தில் 2018-2019 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். ஜி எஸ் டி மற்றும் பண மதிப்பு இழப்பிற்கு பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு வழக்கத்தை விட அதிகமாகவே இருந்தது. மோடி அரசின் நடப்பு ஆட்சிக்கான கடைசி பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

வருமான வரி விலக்குகள்:

  • ரூபாய் 5 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெரும் தனி நபர்கள் வருமான வரி செலுத்த தேவை இல்லை. 3 கோடி நடுத்தர குடும்பத்தினர் இதனால் பயன்பெறுவர். 18,500 ஆயிரம் கோடி வரை அரசுக்கு இதனால் இழப்பு ஏற்படும்.
  • ஆண்டு வருமானத்தில் நிலையான கழிவு( ஸ்டாண்டர்ட் டிடக்ஸன்) ரூபாய் 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

முதலீடுகளுக்கான வரி விலக்குகள்:

  • ரூபாய் 6.5 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் பெரும் தனி நபர்கள் வருங்கால வைப்பு நிதி மற்றும் பரிந்துரைக்கப்பட்ட பங்குகளில் முதலீடு செய்திருந்தால் வரி செலுத்த தேவை இல்லை.
  • அஞ்சலகம் மற்றும் வங்கி சேமிப்பு மூலம் வரும் வருமானத்தில் ரூபாய் 40,000 வரை வரி விளக்கு.
  • வீட்டு வாடகைகள் மூலம் பெரும் வருமானத்திற்கான வரி வரம்பு 1.8 லட்சத்திலிருந்து 2.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • வீடுகளில் முதலீடு செய்யப்படும் மூலதன வரி ஆதாயம் ஒரு வீட்டில் இருந்து இரண்டு வீடுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு:

  • 2 ஹெக்டர் மற்றும் அதற்கு குறைவாக நிலம் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6 ஆயிரம் வழங்கப்படும். இதன் மூலம் 12 கோடி விவசாய குடும்பங்கள் பயன்பெறும். பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் மூலம் இத்தொகை 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும்.
  • இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வங்கி கடன் வட்டியில் 2 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
  • கிசான் கிரெடிட் கார்டு மூலமாக கால்நடை மற்றும் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவோருக்கு 2 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும்.

தொழிலாளர்களுக்கு:

  • அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 3000 ஓய்வு ஊதியம் வழங்கப்படும்.
  • அமைப்பு சாரா தொழிலாளர்கள் மாதம் ரூபாய் 15,000 வருமானம் பெரும் வகையில் புதிய பிரதம மந்திரி ஷிரம் யோகி
    மந்தன் யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்படும். மாதந்தோறும் ரூபாய் 100 பங்களிப்பாக செலுத்தும் தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற பின்னர் மாதந்தோறும் ரூபாய் 3000 ஓய்வூதியம் பெறுவார்கள். இதற்காக அரசு ரூபாய் 500 கோடி ஒதுக்கியுள்ளது.
  • தொழிலாளர்களுக்கான க்ராஜுவிட்டி உச்ச வரம்பு 10 லட்சத்திலிருந்து 30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் இவ்வாறான சலுகைகளை மோடி அரசு வழங்கியிருப்பது தேர்தல் வெற்றிக்காக செய்யும் தந்திரம் என்று சில அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.

இது குறித்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறுகையில், “மோடி அரசின் இடைக்கால பட்ஜெட் பாரத மக்களை ஆசை வார்த்தை காட்டி திசைதிருப்பும் மலிவான தந்திரத்துடன் கூடிய ஒரு தேர்தல் அறிக்கை” என்றார்.

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா இடைக்கால பட்ஜெட் 2019? Is the interim budget 2019 satisified the expectations of poor and middle class.