தெறி தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் நடிகர் யாருன்னு தெரியுமா?

Theri Telegu Remake

விஜய் அட்லீயின் கூட்டணியில் உருவாக்கி வெற்றி பெற்ற படமான தெறி படத்தை தெலுங்கு ரீமேக் செய்வதற்கான பேச்சு வார்த்தை சில மாதங்களாகவே நடந்து வந்தது. தற்போது இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் முடிவாகி உள்ளது. இயக்குநர் சந்தோஷ் ஸ்ரீநிவாஸ் இயக்கவுள்ள இந்த ரீமேக் படத்தில் பவன் கல்யாண் நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு கால்ஷீட் பிரச்சனையால் கைவிடப்பட்டது. தற்போது இந்த கேரக்டரில் தெலுங்கில முன்னணி நடிகராக இருந்து வரும் ரவி தேஜா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.