ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அவரே அறிவிப்பார்: திருப்பதியில் நடிகர் தனுஷ் பதில்

Dhanush

நடிகர் தனுஷ் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அங்கு நடைபெற்ற கல்யாண உற்சவ சேவை தரிசனத்தில் கலந்து கொண்டு அவர் ஏழுமலையானை தரிசித்தார். அப்போது ஒரு பத்திரிக்கையாளர் தனுஷிடம், வரும் தேர்தலில் ரஜினி தனித்து போட்டியிடுகிறாரா அல்லது கூட்டணி அமைக்கிறாரா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நடிகர் தனுஷ், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அவரே அறிவிப்பார் என்றார்.