World News

Oscar Awards 2019: – யாருக்கெல்லாம் ஆஸ்கர் விருது? முழுப் பட்டியல் இதோ

Oscar Awards 2019: என்னமா நடிக்கிறான்யா இவனுக்கு ஆஸ்கார் விருதே குடுக்கலாம்” என்று பல நபர்கள் நம்மிடமே கூறி நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆஸ்கார் சினிமா துறையில் மாபெரும் முக்கியமான கவுரவிக்கும் நிகழ்ச்சியாய் பார்க்கப்படுகிறது. ஆஸ்கார் விருதை வாங்க துடியாய் துடித்துக் கொண்டு இருக்கின்ற பல நடிகர்கள் உள்ளனர். உலகம் முழுக்க ஆர்வமாக பார்த்துக்கொண்டு உள்ளனர். தற்போது 91வது ஆஸ்கார் விருதுகள் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

ஆஸ்கார் பற்றின சுவாரசியமான சில விஷயங்களை பார்க்கலாம்

அகாடமிக் ஆஸ்கார் விருது முதன் முதலில் மே 16,1929 அன்று ஹாலிவுட் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் ஆரம்பித்தது. இதில் வழங்கப்படும் தங்கச்சிலையை முதன் முதலில் வடிவமைத்தவர் ஜாஸ்டான்லி. இச்சிலை 13இன்ச் உயரமும் 3.8 கிலோ எடை கொண்டது.

இந்த உயரிய ஆஸ்கார் விருதை இதுவரைக்கும் 3 படங்கள் தான் அதிக முறை வாங்கியுள்ளது பென்ஹர், டைட்டானிக், லார்ட் ஆப் தி ரிங்ஸ் இந்த 3 படங்கள் 13 விருதுகளை வாங்கி குவித்துள்ளது.

ஆஸ்கார் விருதை அதிகமுறை வாங்கியது வால்ட் டிஸ்னி மட்டுமே இதுவரை 22விருதுகளை வாங்கியுள்ளார்.

பின் நடிப்பிற்காக அதிக ஆஸ்கார் வாங்கியவர் அமெரிக்கா நடிகை கேத்தரின் ஹெர்பன் தான் லயன் இன் வின்டர், கெஸ் ஊ இஸ் கமிங் டு த டின்னெர் போன்ற பல படங்களுக்கு வெவ்வேறு காலகட்டத்தில் வாங்கி உள்ளார்.

அதே போல் அதிக ஆஸ்கார் விருது வாங்கிய பெண் கலிபோர்னியாவை சேர்ந்த எடித் ஹெட் இவர் 8முறை ஆடை வடிவமைப்பிற்காக ஆஸ்கார் வாங்கியுள்ளார்.

அதே போல் உலகிலேயே சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருது கதரின் பைக்லேவ் என்பவருக்கே சாரும் .

இந்தியாவில் இருந்து பல படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 2 ஆஸ்கார் விருதை தி சலும் டாக் மில்லியனர் படத்திற்காக வாங்கினார்.

தற்பொழுது அவருடைய வரிசையில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட தொழிலதிபர் அருணாச்சலம் ஏழை பெண்களுக்கான மலிவான நாப்கின் தயாரித்ததை பற்றிய குறும்படம் சிறந்த குறும்படமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

ஆஸ்கார் விருதுகளை தொகுத்து வழங்குவதற்காக நடிகர் கெவியின் ஹார்ட் தேர்வுசெய்யப்பட்டார். கெவின் ஓரின சேர்க்கைக்கு எதிராக போட்ட பதிவுகளை தேடி சமூக வலைத்தளங்களில் அவரை விமர்சித்ததும் இல்லாமல் ஆஸ்கார் ஏற்பாட்டாளர்களையும் விமர்சித்தனர். இதனை தொடர்ந்து 1989ல் ஆஸ்கார் விருது வழங்கும் விழா எவ்வாறு தொகுப்பாளர் இல்லாமல் நடைபெற்றதோ தற்போதும் அதே போல் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

தற்பொழுது 2019 ஆஸ்கார் விருதில் இஃப் பெயல் ஸ்ட்ரீட் குட் டாக் படத்தில் நடித்த ரெஜினா கிங் சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற்றார். சிறந்த ஆவணப்படமாக ப்ரீ சோலோ படமும், வைஸ் படத்திற்கு சிறந்த ஒப்பனைக்கான விருதும் வழங்கப்பட்டது. சிறந்த ஆடை வடிவமைப்பு, தயாரிப்பு வடிவமைப்பு என பிளாக் பேந்தர் படத்திற்கு தொடக்கத்திலேயே 2 விருதுகள் கிடைத்துள்ளது.

சிறந்த துணை நடிகை: ரெஜினா கிங் (If Beale street could talk)

சிறந்த ஆவணப்படம்: FREE SOLO

சிறந்த ஒப்பனைக்கான ஆஸ்கர் விருது: கிரேக் கேனோம், கேட் பிஸ்கோ, பாட்ரிசியா தெஹானே (VICE)

சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருது: ரூத் கார்டர் (BLACK PANTHER)

தயாரிப்பு வடிவமைப்பு: தயாரிப்பு வடிவமைப்பாளர் ஹன்னா பீச்லர்

செட் அமைப்பாளார்: ஜே ஹார்ட்

சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருது: அல்போன்சோ குவாரனுக்கு (ROMA)

சிறந்த இசைக்கான விருது: BOHEMIAN RHAPSODY

சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது: மஹேர்சலா அலி GREEN BOOK

சிறந்த அனிமேஷன் படம்: SPIDER-MAN:INTO THE SPIDER VERSE

சிறந்த அனிமேஷன் குறும்படம்: BAO

ஆவண குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது: PERIOD END OF SENTENCE

சிறப்பான காட்சி படுத்துதல் விருது: FIRST MAN

BLACK PANTHERக்கு 3 விருது

சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது: A STAR IS BORN படத்தின் SHALLOW பாடலுக்காக Lady Gaga, Mark Ronson, Anthony Rossomando மற்றும் Andrew Wyatt

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது: BOHEMIAN RHAPSODY படத்தில் நடித்த RAMI MALEK

சிறந்த படம்: GREEN BOOK

சிறந்த இயக்குநர்: ROMA படத்தின் அல்போன்சோ குவாரனுக்கு வழங்கப்பட்டது

சிறந்த நடிகை: THE FAVOURITE படத்தில் நடித்த OLIVIA COLMAN

சிறந்த நடிகர்: OHEMIAN RHAPSODY படத்தில் நடித்த RAMI MALEK

அதிக விருதுகள்: BOHEMIAN RHAPSODY

ட்ரம்ப் மற்றும் கிம் ஜோங் உன் சந்திப்பு

Trump-Kim Vietnam Summit: அமெரிக்கா மற்றும் வடகொரியா ஆகிய இரு நாட்டு தலைவர்களும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் சந்தித்துப் பேசினர். தற்போது இருதரப்பினருக்கும் கருத்து வேறுபாடு நிலவியுள்ளதால் அதற்கு தீர்வு காண இரண்டாவது சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வியட்நாமின் ஹேனோய் நகரில் வரும் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் சந்திப்பிற்காக கிம் ஜோங் உன் ஆயுதம் தாங்கிய ரயிலில் 60 மணி நேரம் பயணம் மேற்கொண்டு அங்கு செல்கிறார்.

ஸ்டாலின் விஜய்காந்திடம் அரசியல் பேசினார் பிரேமலதா தகவல்

Lok Sabha Elections 2019: சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற விஜயகாந்த் அண்மையில் சென்னை திரும்பினார். அவரை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், நடிகர் ரஜினிகாந்த், திருநாவுகரசர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் சந்தித்தனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களிடம் அரசியல் குறித்தோ கூட்டணி குறித்தோ ஏதுவும் பேசவில்லை என கூறினார் ஸ்டாலின். இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரேமலதா இரு அரசியல் தலைவர்கள் சந்திக்கும் போது நிச்சாயம் அரசியல் பேசுவார்கள் அது இயல்பு என்றார். அதே போல் தான் ஸ்டாலின், விஜயகாந்த் சந்திப்பும் இருந்தது என்றார் பிரேமலதா விஜயகாந்த்.

தமிழ் பெண்ணுக்கு உலகின் சிறந்த ஆசிரியர் விருது

Colombo இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர் யசோதை செல்வகுமரன். இலங்கையில் நடந்த போர் காரணமாக 10 வயதில் ஆஸ்திரேலியாவில் குடும்பத்துடன் குடியேறினார். ஆஸ்திரேலியாவில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லண்டனில் உள்ள வெக்கரி பவுண்டேஷன் என்ற தனியார் தொண்டு நிறுவனம் ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதை வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்த ஆசிரியர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் யசோதை செல்வகுமரனின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இவருக்கு 10 லட்சம் டாலர் பரிசு வழங்கப்படுகிறது.

இந்தியாவுக்கே எங்கள் ஆதரவு, டிரம்ப் பேச்சு

US President Donald Trump: கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி புல்வாமா மாவட்டத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்ந்தது. 40க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பலியாகினர். இது மிகவும் கொடூரமான ஒரு சம்பவம் எனவும் தீவிரவாதத்திற்கு பாகிஸ்தான் இடமளிக்கக் கூடாது எனவும், மேலும் எங்கள் ஆதரவு இந்தியாவுக்கு எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

4 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவு சூடானது பூமி

உலக வெப்பநிலை பதிவு செய்யப்பட தொடங்கிய நாளிலிருந்து கடந்த 4 ஆண்டுகளில்தான் பூமி அதிகமாக வெப்பமடைந்திருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக கடந்த 2016ஆம் ஆண்டுதான் வெப்பநிலை உச்சகட்டத்தை தொட்டதாகவும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 2016ஆம் ஆண்டு முதலிடத்திலும், 2017ஆம் ஆண்டு இரண்டாவது இடத்திலும், 2015 மூன்றாவது இடத்திலும், 2018 நான்காவது இடத்தையும் பிடித்திருக்கின்றன.

“டிரம்ப் ஆதரவு தொப்பி அணிந்தவருக்கு உணவில்லை” ஹோட்டல் உரிமையாளர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக “அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக்குவோம்” என்ற வாசகத்துடன், பேஸ்பால் விளையாட்டு தொப்பி அணிந்துள்ள யாருக்கும் உணவு பரிமாற வேண்டாம் என்று அறிவித்த கலிபோர்னிய ஹோட்டல் உரிமையாளார் கென்ஜி லோபஸ்-அல்ட் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது தனது முடிவை அவர் மாற்றி கொண்டாதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், தனது முடிவு சிலரை கோபப்படுத்தியுள்ளதால் முடிவை மாற்றி கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

ஜெர்மனியில் டிரேன்டிங்கில் கலக்கி வரும் நிர்வாண திருமணம்

ஜெர்மனில் தற்போது ஆடைகள் இன்றி திருமணம் நடத்தும் புதுவகை கலாச்சாரம் பிரபலமாகி வருகிறது. இந்த நிர்வாண திருமணத்தில் மணமகள் மட்டுமே நிர்வாண ஆடையினை அணிகின்றனர், மணமகன் வழக்கமான ஆடம்பர ஆடையினையே அணிகின்றார். sheer என்ற பெயரில் Grace Loves Lace தயாரித்த ஆடைகள் தற்போது அதிகளவில் விற்பனையாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இணையும் இரு துறுவங்கள், டிரம்ப் – கிம் சந்திக்க திட்டம்

போர்முனைப்புடன் இருந்தவந்த வட கொரியாவும் அமெரிக்க நாடுகளும் அகிம்சை வழியை கையாளுகின்றனர். உலக அரங்கில் பரபரப்பாக பேசப் படுகிறது, கடந்த ஜுன் மாதம் இருநாட்டு தலைவர்களும் சிங்கப்புரில் சந்தித்து கொண்டனர். மீண்டும் அவர்கள் சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது அமெரிக்க வெளியுறவுத்துறை இருவர் சந்திப்பானது இம்முறை ஆசியாவில் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சந்திக்கும் இடத்தை உறுதி செய்ய அமெரிக்க குழு வடகொரியா சென்றுள்ளது.

“பீக் ஹவர்” கூட்டத்தை குறைக்க புதுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ள மெட்ரோ நிறுவனம்

அடுத்த ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது. அதற்குள் இந்த பீக் ஹவர் மக்கள் கூட்டத்தை குறைக்க ஜப்பானிய அரசு பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, பீக் நேர கூட்டத்தை குறைக்க டோக்கியோ மெட்ரோ நிர்வாகம் புதுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பீக் ஹவர் தவிர்த்து சில மணி நேரங்களுக்கு முன் மெட்ரோ ரெயிலை பயன்படுத்துவோர்களுக்கு இலவச நூடுல்ஸ் உணவு வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

சூப்பர் ஹீரோ வேடத்தில் பணிக்கு வந்த வங்கி ஊழியர்

ஹாலிவுட் திரைப்படங்களில் வரும் சூப்பர் ஹீரோக்களான ஹல்க், சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், ஐயன் மேன் போன்றவர்களின் கேரக்டர்கள் சிறுவர்களை மட்டுமின்றி பெரியவர்களையும் கவர்ந்த கேரக்டர்கள் என்பதில் சந்தேகமில்லை. பிரேசில் நாட்டில் உள்ள வங்கி ஒன்றில் வேலை செய்யும் ஒருவர், தனது கடைசி நாள் பணியின் போது, ஸ்பைடர்மேன் கேரக்டரில் வங்கிக்கு வந்து சக ஊழியர்களை ஆச்சிர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். ஸ்பைடர்மேன் உடையில் வேலை செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பைக்கில் பெண்கள் இரண்டு பக்கம் கால் போட்டு அமர்வது ஒழுக்ககேடான செயல்: ஆப்பிரிக்க பிரதிநிதி கருத்து

ஆப்பிரிக்காவில், இருசக்கர வாகனங்களில் பெண்கள் அமர்ந்து பயணிக்க புதிய ஒழுங்குமுறை சட்டம் கொண்டுவர வேண்டும் என பாசியா வார்டு பிரதிநிதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர் “18 வயதிற்கு குறைந்த பெண்கள் இரு சக்கர வாகனத்தின் இரு புறங்களிலும் கால்களைவிட்டு பெண்கள் பயணிப்பது ஒழுக்ககேடான செயல் என்றும், இதனாலேயே நாட்டில் அதிக அளவிளான பெண்கள் திருமணத்திற்கு முன்பு கருவுறுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், நமது பாரம்பரியத்தில் பெண்கள் பக்கவாட்டாக கால்களை கீழ் விட்டு உட்கார்ந்து பயணிப்பது தான் சரியான முறை என்றும் இந்த பழக்கத்தை பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு சொல்லி தர வேண்டும்” என தெரிவித்தார்.

மத வெறுப்புணர்வால் ஊடகங்கள் என்னை விமர்சிக்கின்றன: துளசி கம்பார்ட் குற்றச்சாட்டு

சமீபத்தில் இந்திய மக்களால் ஜனநாயக முறையில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட மோடியை சந்தித்தேன். இதன் காரணமாக தான் தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறேன் என்று அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக களம் இறங்கும் துளசி கம்பார்ட் தெரிவித்துள்ளார். முன்னாள் அதிபர் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன், அதிபர் டிரம்ப்பும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் மோடியை சந்தித்துள்ளனர். ஆனால் மற்ற தலைவர்களை விட்டுவிட்டு என்னை மட்டும் ஊடகங்கள் விமர்சிப்பதற்க்கான காரணம் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரேசில் அணை விபத்துக்கு காரணமாக நிறுவனதிற்கு 66 மில்லியன் டாலர் அபராதம் விதிப்பு

பிரேசிலில் அணை உடைந்து ஏற்பட்ட விபத்தில் 50 பேர் பலியானதாக கூறப்படும் நிலையில், இந்த விபத்துக்கு காரணமாக இருந்ததாக கூறி தனியார் நிறுவனம் ஒன்றுக்கு 66 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரேசில் வரலாற்றில் விதிக்கப்பட்ட அபராதங்களில் மிகபெரிய அபராதம் இதுவாகும். இந்த விபத்தில் 20,000-க்கு மேற்பட்டவர்கள் வீடுகளை இழந்து உள்ளதுடன் பாதுகாப்பாக இடத்திற்கு இடம் பெயர்ந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவில் கடும் வெப்ப காற்று: 44 பேர் பாதிப்பு; 90 குதிரைகள் பலி

ஆஸ்திரேலியாவில் வெப்பக்காற்றின் தாக்குதல் கடுமையாக இருப்பதால் மக்கள் பலவிதமான வெப்ப நோய்களுக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை 44 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெப்பக்காற்று தாக்குதலால் தெற்கு ஆஸ்திரேலியாவில் 90 குதிரைகள் இறந்தன. பல உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. பருவ நிலை மாற்றம் காரணமாக வெயிலின் தாக்கம் அதிகமாகி இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வரலாற்றில் முதல் முறையாக 24 மணி நேரத்தில் 15 லட்சம் டாலர் நன்கொடை பெற்ற கமலா ஹாரிஸ்

வரும் 2020-ம் ஆண்டு நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் நேற்று அறிவிக்கபட்டார். இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்தில் 15 லட்சம் டாலர் நன்கொடையாக பெற்றுள்ளார். வரும் நாட்களில் இன்னும் அதிகமான நன்கொடைகள் கிடைக்கும் என்று தெரிகிறது. அமெரிக்க வரலாற்றில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் 24 மணி நேரத்துக்குள் அதிக நிதி திரட்டியது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

பிரான்ஸ்: கடும் பனி பொழிவு காரணமாக மூடப்பட்டது ஈபிள் டவர்

பிரான்சின் பாரிஸ் நகரில் கடும் பனி பொழிவு நிலவி வருகிறது. இதனால் அங்கு பல நகரங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த பனிப்பொழிவு பாரிசில் இருந்து ஐந்து சென்டிமீட்டர் வரை படர்ந்து இருக்கும் என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து ஈபிள் டவர் மூடப்பட்டுள்ளது. மேலும் இந்த டவர் எப்போதும் திறக்கப்படும் என்று எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

சிங்கப்பூரில் இந்திய உணவை விநியோகம் செய்யும் தானியக்க இயந்திரம்

சிங்கபூரில் முதன்முறையாக முற்றிலும் இந்திய உணவை விநியோகம் செய்யும் தானியக்க இயந்திரம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.இந்த வகையில் முற்றிலும் இந்திய உணவு பொருட்களை விநியோகம் செய்யும் தானியக்க இயந்திரத்தினை, கடந்த ஒரு மாத காலமாக சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியின் வர்த்தகப் பள்ளியில் சிங்கப்பூர் சகுந்தலாஸ் உணவகம் அமைந்துள்ளது. சிங்கப்பூரில், இந்திய உணவுகளை மட்டும் விநியோகம் செய்யும் முதல் தானியக்க இயந்திரம் இதுவாகும்.

மக்களோடு மக்களாக வரிசையில் நின்று பர்க்கர் வாங்கிய பில்கேட்ஸ்

உலகில் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ், பர்கர் வாங்குவதற்காக ஹோட்டல் முன் வரிசையில் நின்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பில்கேட்சிடம் கடைக்காரர் கேட்டதற்கு, தன்னிடம் ஏராளமாக பணம் இருந்தும் தான் விரும்பிய சுதந்திரம் இல்லை என்று கூறிய பில்கேட்ஸ் தற்போது அதனை விரும்புவதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். கடையின் உரிமையாளர் மகிழ்ச்சியுடன் பில்கேட்சுடன் சேர்ந்து படம் எடுத்துக் கொண்டார்.