Tamil Movie Review

Karthi Dev Tamil Movie Review: கார்த்தி “தேவ்” தமிழ் பட விமர்சனம்

Karthi Dev Tamil Movie Review
Banner Prince Pictures
Cast Karthi, Rahul Preet Singh, Prakash Raj
Direction Rajath Ravishanker
Production Prince Pictures

Karthi Dev Tamil Movie Review(2019): கார்த்தி “தேவ்” தமிழ் திரைப்படம் படம் இன்று வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகியுள்ளது.

கார்த்தி – ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில், ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள தேவ் படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம்.

பணம் மட்டுமே வாழ்கை அல்ல, அன்பு காட்ட ஆள் இல்லேனா அது வாழ்கையே இல்லை என்பதே படத்தின் கதை. intouchables படத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தின் நாயகன் தேவ்(கார்த்தி) வாழ்க்கையில் ரொம்ப ஜாலியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். இவரது தந்தை ராமலிங்கம் (பிரகாஷ்ராஜ்) பெரிய பணக்காரர். இந்த படம் 2 மணிநேரம் 40 நிமிடம் நேரம் பயணிக்கிறது.

Karthi Dev Tamil Movie Review(2019): கார்த்தி “தேவ்” தமிழ் சினிமா விமர்சனம்

வாழ்க்கையை மிகவும் ரசிப்புத்தன்மையுடன் வாழவேண்டும் என்று நினைக்கும் ஒரு ஆணும், தொழில்துறையில் சாதிப்பது தான் தனது வாழ்க்கை என்று வாழும் ஒரு பெண்ணும் சந்திக்கும் படமே ’தேவ்’ படத்தின் கதையாகும்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் பாடல்கள் பலராலும் வரவேற்பு பெற்றுள்ளது. இசைக்கு ஏற்றவாறு படத்தின் பாடல் காட்சிகளும் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும், இந்த தேவ் ஒரு அட்வென்சர் படமா? உண்மையில் இல்லை. படத்தில் நாயகன் இரண்டு முறை எவரெஸ்ட் சிகரத்தை ஏறுகிறார் அதுமட்டுமே.  இல்லை இது ரொமாண்டிக் படமா? அதுவும் இல்லை.

Karthi Dev Tamil Movie Review(2019): கார்த்தி “தேவ்” தமிழ் சினிமா விமர்சனம்

படத்தின் நாயகன் ‘தேவ்’ மற்றும் நாயகி மேக்னா இடையே ரொமான்ஸ் பேஸ்புக் வழியாக தொடங்குகிறது. இது ஒரு உறவுகளுக்கான டிராமாவா? இல்லை. நாயகன் குடும்பத்தில் பிரச்சினைகள் உள்ளது. இது ஆக்ஷன் படமா? அப்படி இருந்தாலும் படத்தில் சில சண்டை காட்சிகள் மட்டுமே உள்ளன.

இந்த படத்தில் பல கேரக்டர்கள் நடித்திருந்தாலும் அவர்கள் நடித்ததற்கான காரணமே தெரியவில்லை. இருந்தாலும், படத்தில் நடித்துள்ள பிரகாஷ் ராஜ், ரம்யாகிருஷ்ணன் சிறப்பாக நடித்துள்ளனர். பல்வேறு லொக்கேஷன்களில் சூட்டிங் செய்யப்பட்டிருந்தாலும், அவை எதுவும் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தவில்லை.

படத்தின் கேரக்டர்களுக்கு ஸ்போர்ட்ஸ் விளையாட்டு காஸ்டியூம்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும் அவை நடிகர்களுக்கு பெரிய பெர்சனாலிட்டியை  கொடுக்கவில்லை. படத்தில் ஏகபட்ட டயலாக்கள் அதில் ஒரு லைன் கூட மனதில் நிற்கவில்லை.

இது நல்ல படம் என்ற நினைக்க வைக்கும் வகையில், ரிச்சார்ட் முதல் வேட்டையாடுதல் காட்சி மற்றும் கொலை செய்தல் காட்சி, சிறுமியை வைத்து சிறியளவிலான டிராமா  போன்ற காட்சிகளே படத்தில் உள்ளன. ஹீரோயின் ராகுல் ப்ரீத் சிங் கொடுத்த பணியை சரியாக செய்துள்ளார்.

படத்திற்கு பாடல்கள் பக்க பலம் தான் என்றாலும், படத்தோடு பார்க்கும் போது அவை சற்று ஸ்பீடுபிரேக்கர் போல உணரச் செய்கின்றன. அதேபோல படத்தில் வரும் சண்டைக் காட்சிகளும் பெரியளவில் கவனம் ஈர்க்கவில்லை.

Karthi Dev Tamil Movie Review(2019): கார்த்தி “தேவ்” தமிழ் சினிமா விமர்சனம்

“தேவ்” படத்தில் ஒரு கட்டத்தில் எவரெஸ்ட் சிகரம் ஏறும் கார்த்தி, சறுக்கல்களை சந்திக்கிறார். அதேபோல தேவ் படமும் பல இடங்களில் பார்வையாளர்களிடம் சறுக்கி விடுகிறது. எனினும் படத்தில் இடம்பெற்றுள்ள சிறப்பான ஒளிப்பதிவு தேவ் படத்திற்கு வலு சேர்த்து விடுகிறது.

இந்த படத்தின் பட்ஜெட் 50 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. கார்த்தி பட வரிசையில் காஷ்மோரா படத்துக்குப் பிறகு இந்த படம் தான் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டதாகும்.

மொத்தத்தில் இந்த படம் ஒரு முறை பார்கலாம் என்ற ரகமே.

Karthi Dev Tamil Movie Review(2019): கார்த்தி “தேவ்” தமிழ் சினிமா விமர்சனம்

 கார்த்தி “தேவ்” தமிழ் சினிமா ரேட்டிங் – 1.5/5

Vantha Rajavathaan Varuven Tamil Movie Review: வந்தா ராஜாவாதான் வருவேன் சினிமா விமர்சனம்

STR Vantha Rajavathan Varuven Tamil Movie Review
Banner Lyca Productions
Cast Catherine Tresa, Megha Akash, Ramya Krishnan, Simbu
Direction Sundar C
Music Hiphop Tamizha
Production Lyca Productions

Vantha Rajavathan Varuven Tamil Movie Review: வந்தா ராஜாவா தான் வருவேன்” படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள “வந்தா ராஜாவா தான் வருவேன்” படம் இன்று 2-1-2019 ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

ரங்கநாதன் (நாசர்), மட்ரிட்டில் பெரிய பணக்காரராக உள்ளார். இவரது மகன் சுமன். அவரது தங்கை நந்தினி (ரம்யா கிருஷ்ணன்)  வழக்கறிஞரான பிரபுவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். தனது மகள் சாதாரண வழக்கறிஞரான பிரபுவை திருமணம் செய்ததால் கோபமடையும் ரங்கநாதன்,   இதனால் பிரபுவை, துப்பாக்கியால் சுட்டு விடுகிறார். காயத்துடன் உயிர்தப்பிய பிரபுவை அழைத்துக் கொண்டு ரம்யா கிருஷ்ணன் இந்தியா வந்து செட்டிலாகி விடுகிறார்.

Vantha Rajavathan Varuven Tamil Movie Review: வந்தா ராஜாவாதான் வருவேன் தமிழ் சினிமா விமர்சனம்

தனது செயலால் வருத்தமடைந்த ரங்கநாதன்,  தனது பேரன் ஆதி(STR)யிடம், நந்தினியுடன் தன்னை சேர்ந்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்.  இதை தொடர்ந்து இந்தியா வரும் ஆதி, நந்தினியிடம் டிரைவர் வேலைக்கு சேர்ந்து, எப்படி பிரிந்த குடும்பத்தை இணைக்கிறார் என்பது படத்தின் மீதி கதை.

Attarintiki Daredi என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் படமான இந்த படம் சுந்தர் சி இயக்கத்தில் வெளியானதால் கமர்சியல் காமெடி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி, சுந்தர் சி கடுமையாக உழைத்து இருப்பது படத்தை பார்க்கும் பொது தெளிவாக தெரிகிறது.

படத்தில் இரண்டு ஹீரோயின்கள் ஒருவர் பாரம்பரியமானவர் (கேதிரீன் தெரேசா) இவர் வெறுமனே சிம்பு உடன் டான்ஸ் ஆடுகிறார்.  மற்றொருவர் மார்டன் பெண் (மேகா ஆகாஷ்), இவரது நடிப்பை விட காஸ்டியூம் அதிகமாக உள்ளது. அதிலும்,  மேகா ஆகாஷ் காரில் அமர்ந்து கொண்டு  நைட்டியை கழற்றும் காட்சி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது.

Vantha Rajavathan Varuven Tamil Movie Review: வந்தா ராஜாவாதான் வருவேன் தமிழ் சினிமா விமர்சனம்

படத்தில் அசால்ட்டாக நடித்துள்ள  நடிகர் சிம்பு, கிளைமேக்ஸில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ரயில்வே ஸ்டேஷன் சீனில் ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு பாராட்டும் வகையில் உள்ளது. வயல்வெளியில் நடக்கும் சீன்கள், சண்டை காட்சிகளில் எடிட்டிங் பணிகள் சிறப்பாக உள்ளது.

யோகி பாபு, ரோபோ சங்கர் மற்றும் VTV கணேஷ் ஆகியோர் தங்கள் காமெடி மூலம் ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சிக்கின்றனர்.

இசை ஹிப்ஹாப் தமிழா ஆதி, இவரது இசை சில இடங்களில் எமோஷனல் டிராமா பீலிங்கை உருவாக்குகிறது.

படத்தின் பாசிட்டிவ் 

  • சிம்பு டான்ஸ்
  • சினிமாட்டோகிராப்பி
  • ஆர்ட் டிபார்ட்மெண்ட்

படத்தின் நெகட்டிவ்

  • படத்தின் நீளம்
  • காமெடி ஒர்க் ஆகாமல் போனது
  • படத்தின் எடிட்டிங்

மொத்தத்தில், சுந்தர்.சி படம் என்பதால் இந்த படத்தை குடும்பத்துடன் ஒரு முறை பார்க்கலாம்.

Tamil Movie Review: Vantha Rajavathaan Varuven Tamil Movie Review – வந்தா ராஜாவாதான் வருவேன் தமிழ் சினிமா விமர்சனம்

 வந்தா ராஜாவாதான் வருவேன் தமிழ் சினிமா ரேட்டிங் – 2.5/5

Peranbu Tamil Movie Review: பேரன்பு சினிமா விமர்சனம்

Peranbu Tamil Movie Review
Banner Shree Raaja Lakshmi Films
Cast Anjali, Mammootty, Sadhana, Anjali Ameer
Direction Ram
Lyrics Na Muthukumar
Music Yuvan Shankar Raja
Production Shree Raaja Lakshmi Films

Peranbu Tamil Movie Review: இயக்குனர் ராம் இயக்கத்தில் பி.எல் தேனப்பன் தயாரிப்பில் மம்மூட்டி, தங்க மீன்கள் சாதனா, அஞ்சலி, தயாரிப்பாளர் பி.எல் தேனப்பன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள பேரன்பு திரைப்படம் நாளை (01.02.2019) வெளியாகவுள்ளது.

Peranbu Tamil Movie Review –  பேரன்பு தமிழ் சினிமா விமர்சனம்

இப்படத்தின் கதையை இங்கே பார்க்கலாம்…

துபாயில் வேலை செய்து வரும் மம்மூட்டிக்கு மகள் பிறந்திருப்பதாகவும், ஆனால் மூளை முடக்கு வாதம் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.  மகள் இப்படி மாற்று திறனாளியாக பிறந்து உள்ளதால், அவர் மகளை கூட பார்க்க வராமல் இருந்து விடுகிறார். இதனால், மம்மூட்டியின் மனைவியே குழந்தையை வளர்க்கிறார். ஒரு கட்டத்தில் அவர், இனியும் என்னால் குழந்தையை பார்த்து கொள்ள முடியாது என்று மம்மூட்டியிடம் கூறி விட்டு வேறொரு வாழ்க்கையை தேடி சென்று விடுகிறார். இதனால் மம்மூட்டி தன்னுடைய மகளுக்காக வாழ தொடங்குகிறார். மாற்று திறனாளியாக இருக்கும் மகளுக்கு ஏற்படும் ஆசைகளை மம்மூட்டி எப்படி நிறைவு செய்கிறார்? இதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதே இப்படத்தின் மீதி கதை.

Peranbu Tamil Movie Review –  பேரன்பு தமிழ் சினிமா விமர்சனம்

படத்தில், நடிகர் மம்மூட்டி மாற்று திறனாளி பெண்ணின் அப்பாவாகவே   வாழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தங்க மீன்கள் படத்திற்கு பிறகு மீண்டும் ராம் இயக்கத்தில் நடித்துள்ள சாதனா,  தங்க மீன்கள் படத்தை போலவே இந்த படத்திலும், ஒரு இடத்தில் கூட குறை சொல்ல முடியாத அளவிற்கு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.   படத்தில் சிறிய கேரக்டரில் நடித்துள்ள நடிகை அஞ்சலி, தனக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்துள்ளார்.

Peranbu Tamil Movie Review –  பேரன்பு தமிழ் சினிமா விமர்சனம்

இப்படத்திற்கு மிக பெரிய பலமே யுவன் ஷங்கர் ராஜாவின் இசை தான். காட்சிகளை விட இப்படத்தின் இசையே கதையை வெளிப்படுத்துகிறது என்பதே உண்மை. சூர்யா பிரதமனின் எடிட்டிங், தேனீஸ்வரின் ஒளிப்பதிவு என இரண்டுமே படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

Tamil Movie Review: Peranbu Tamil Movie Review – பேரன்பு தமிழ் சினிமா விமர்சனம்

பேரன்பு தமிழ் சினிமா ரேட்டிங் – 4/5

Sarvam Thala Mayam Tamil Movie Review: சர்வம் தாளமயம் விமர்சனம்

Sarvam Thala Mayam Tamil Movie Review
Banner Mindscreen Cinemas
Cast GV Prakash Kumar, Aparna Balamurali, Dhivyadharshini, Kumaravel, Nedumudi Venu, Vineet
Direction Rajiv Menon
Production Mindscreen Cinemas
Music AR Rahman

கீழ் ஜாதியில் பிறந்தவர் பீட்டர் (ஜி.வி.பிரகாஷ்) இவர் விஜய் பேன் விஜய் படங்கள் ரிலிஸ் என்றால் தியேட்டர் போய் அங்கு பால் ஊற்றி ட்ரம்ஸ் அடித்து கலாட்டா செய்வார். இவரது அப்பா குமரவேல்  மிருதங்கம் செய்பவர், அம்மா சூப் கடைவைத்து வியாபாரம் செய்து வருகிறார்.  ஜிவி பிராகாஷ்  ரசிகர் மன்ற தகறாரில் மண்டை உடைந்து அதற்கு கட்டு போடும் பெண்ணுடன் காதல் இப்படி பொறுப்பில்லாமல் சுற்றி வருகிறார். இந்நிலையில், மிகப்பெரிய மிருதங்க வித்வான் நெடுமுடி வேணு, அவரது சீடர் வினீத் இருவரும் கச்சேரிக்கு போகும் போது வினீத் மிருதங்கத்தை கிழே போட்டு உடைத்து விடுகிறார்.

Sarvam Thala Mayam Tamil Movie Review – சர்வம் தாளமயம் விமர்சனம்

கச்சேரிக்கு போகும் நேரத்தில் இப்படி செய்துவிட்டாயே என்று குமரவேலுக்கு போன் செய்து உடனே ஒரு மிருதங்கம் வேண்டும் என்று சொல்ல ஆள் இல்லை என்பதால்,  குமரவேல்   பீட்டரிடம்  மிருதங்கத்தை கொடுத்து அனுப்புகிறார்.   பீட்டர் அதை சரியான நேரத்தில் அதாவது கச்சேரி ஆரம்பிக்கும் நேரத்துக்கு சரியாக கொண்டு கொடுக்கிறார். நெடுமுடி வேணு கச்சேரியில் மிருதங்கம் வாசிக்க அதை பார்த்து ரசித்த பீட்டருக்கு மிருதங்கம் மேல் ஒரு காதல் உண்டாகிறது. நாமும் வாசிக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

Sarvam Thala Mayam Tamil Movie Review – சர்வம் தாளமயம் விமர்சனம்

ஆனால் இவர் கீழ் சாதி என்பதால் இவரின் ஆசையை அப்பாவிடம் சொல்ல, அவரும் இதெல்லாம் நமக்கு வேண்டாம் என்று சொல்கிறார்.  ஆனால் இவருக்கு இந்த மிருதங்கம் மீதான காதல் இதில் நாம் சாதிக்க வேண்டும் வேம்பு ஐயரிடம் அதாவது நெடுமுடி வேனுவிடம் சீடராக சேர்ந்து இதை முறையாக பயிற்சி செய்யவேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது.  ஆனால் இவர் கீழ் சாதி இதனால் இவரை வினீத் மிகவும் அவமான படுத்துகிறார்.

Sarvam Thala Mayam Tamil Movie Review – சர்வம் தாளமயம் விமர்சனம்

இந்நிலையில், இவரின் ஆர்வத்தை புரிந்து கொண்ட நெடுமுடி வேணு இவரை சீடராக சேர்க்கிறார். இது மேலும் வினித்துக்கு கோபம் உண்டாகி மேலும்  மேலும் பீட்டரை அவமானம் செய்கிறார். இதனால் கோபம் அடைந்த  நெடுமுடி வேணு வினீத்தை வீட்டை விட்டே அனுப்புகிறார்.  ஒரு கிழ் சாதி பையனுக்காக என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார் என்ற கோவத்தில் நெடுமுடி வேனுவையும், பீட்டரையும் தன் தங்கை டி டி மூலம் பழிவாங்க நினைக்கிறார். இந்த பழி வாங்கல் படலத்தின் தொடர்ச்சியாக  பீட்டர் மீது ஒரு பொய் கேஸ் போட்டு அந்த ஊரை விட்டே போகின்ற நிலைமை ஏற்படுகிறது.  இதை மீறி பீட்டர் மிருதங்க வித்வான் ஆகிறாரா இல்லையா என்பது தான் மீதி கதை.

Sarvam Thala Mayam Tamil Movie Review – சர்வம் தாளமயம் விமர்சனம்

இயக்குனர் ராஜீவ் மேனன் முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை மிகவும் அழகாக கதை களமும் சரி காட்சிகளும் அமைத்துள்ளார்.  வினீத் நீண்ட இடைவெளிக்கு பின் தமிழ் சினிமாவில் தடம் பதித்து உள்ளதோடு, வில்லன் கேரக்டரில்  மிக சிறப்பாக நடித்துள்ளார்.

Sarvam Thala Mayam Tamil Movie Review – சர்வம் தாளமயம் விமர்சனம்

நாயகியாக அபர்ணா பாலமுரளி பெரிதாக காட்சிகள் இல்லை என்றாலும் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறார். அதேபோல ஜி.வி.பிரகாஷ் அப்பாவாக வரும் குமரவேல் தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார். பல படங்களில் தன் திறமையை நிருபித்த குமரவேல் இந்த படத்திலும் அதை சரிவர செய்து இருக்கிறார்.

Sarvam Thala Mayam Tamil Movie Review – சர்வம் தாளமயம் விமர்சனம்

தொடக்கத்தில் இருந்த திரைக்கதையின் உச்சம் நேரம் ஆக ஆக தொய்வாவது சருக்கல். ஆனாலும் சர்வ தாளத்தையும் நம் முன் காட்டியதில் இயக்குநர் வெற்றி வாகை சூடியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். மொத்தத்தில் சர்வம் தாளமயம் ரசிக்க வேண்டிய படமாக இருக்கும்.

Movie Review: Sarvam Thala Mayam Tamil Movie Review – சர்வம் தாளமயம் விமர்சனம்

சர்வம் தாளமயம் சினிமா ரேட்டிங் – 4/5

சார்லி சாப்ளின் 2 விமர்சனம்

Banner Amma Creations
Cast Prabhu Deva, Prabhu, Nikki Galrani, Adah Sharma, Sameer Kochhar, Amit Bhargav, Luthfudeen, Aravind Akash, Vivek Prasanna
Direction Sakthi Chidambaram
Production T. Siva
Music Amresh Ganesh

சார்லி சாப்ளின் 2 விமர்சனம்

ரேட்டிங் 3/5

மேட்ரிமோனியல் இணையதளம் நடத்தி வரும் திரு(பிரபுதேவா), 99 திருமணங்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளார். ஆனால், அவர் நடத்தும் 100-வது திருமணம் பல்வேறு சவால்களை சந்திக்கிறது. இந்த படத்தில் நடிகை சமூக ஆர்வலர் சாரா கேரக்டரில் நடிகை நிக்கி கல்ராணி, சைக்காலஜி மாணவியாக அதாஹ் சர்மா ஆகியோர் நடித்துள்ளார். நடிகை நிக்கி கல்ராணியின் தந்தையாக நடிகர் பிரபு நடித்துள்ளார். இந்த படம் டெக்னாலஜி மக்கள் வாழ்வில் எப்படி குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்பதை 127 நிமிடம் காமடியாக விளக்குகிறது.

பிரபு, பிரபுதேவா, அபிராமி, காயத்திரி ரகுராம் உள்ளிட்டோர் நடிப்பில், கடந்த 2002ம் ஆண்டு வெளியான படம் சார்லி சாப்லின். ஷக்தி சிதம்பரம் இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப் பட்டு வசூல் சாதனை புரிந்தது. 17 ஆண்டுகள் கழித்து தற்போது இப்படத்தின் 2ம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் இடம் பெற்றுள்ள கிராமப்புற பாடகர்கள் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி பாடிய “சின்ன மச்சான் செவத்த மச்சான்” பாடல் யூ டியூப்பில் 7.5 கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் பிளஸ்

  • சிறந்த டைரக்சன்
  • சிறந்த தயாரிப்பு பணிகள்
  • நடிகர்களின் சிறப்பான நடிப்பு

படத்தின் மைன்ஸ்

  • மோசமான எடிட்டிங் பணிகள்
  • மோசமான சினிமோட்டோகிராபி
  • மோசமான ஸ்கிரீன்பிளே

மொத்தத்தில் இந்த படம் ஒரு நல்ல படமாக இருக்கும். இதில் ஸ்கிரீன்பிளே இன்னும் நன்றாக இருந்திருந்தால், படம் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். இருந்தபோதும், எல்லோருக்கும் பிடித்தமான படமாக இது இருக்கும்.

Viswasam Movie Review: “சிவா இஸ் பேக் வித் சக்செஸ்”

Viswasam Tamil Movie Review
Banner Sathya Jyothi Films
Cast Ajith Kumar, Nayanthara, Anikha, Vivek, Robo Shankar, Thambi Ramaiah, Sandhya Janak, Kovai Sarala, Yogi Babu, Kalairani, Chatrapathi Sekhar, Bose Venkat
Direction Siva
Production Sathya Jyothi Films
Music D.Imman

புரிந்து கொள்ளாமல் பிரிந்த காதல் மனைவியுடன் 10 ஆண்டுகளுக்குப் பின் புரிந்து கொண்டு இணையும் கணவரும், “குழந்தைகளை அவர்களது இஷ்டப்படி வளர விடுங்கள், அவர்கள் மீது உங்கள் விருப்பங்களை திணிக்காதீர்கள்” என அந்த கணவர் சொல்லும் மெஸேஜும்தான் படத்தின் கதை. இந்த படத்தின் முழுமையான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

தலைக்கு வகிடெடுத்தாலும் அரிவாளால்தான் எடுப்பார்கள் போலிருக்கிறது. அப்படியொரு வில்லேஜ். அங்குதான் தூக்கு துரையாக தொடை தட்டுகிறார் அஜீத். ‘உங்களுக்கு தேவை முகம்தானே… பார்த்துக்கோங்க…. ரசிச்சுக்கோங்க…. வேணும்னா மூணு வேளையும் அர்ச்சனை கூட பண்ணிக்கோங்க. அதை தாண்டி மேக்கப் பற்றியெல்லாம் நோ அலட்டல்’ என்கிற தத்துவத்துடன் அறிமுகம் ஆகிறார் அஜீத்.

முதல் பாதி முழுக்க அஜீத்தை அணுஅணுவாக ரசிக்கும் அவரது ரசிகர்களுக்காக என்பதால், ஒவ்வொரு கமர்ஷியல் சினிமாக்கள் போன்று நகர்கிறது படம்.

அந்த ஊருக்கு மெடிக்கல் கேம்புக்காக வரும் நயன்தாராவுக்கு நேர்கிற சிலபல இன்னல்களை சொடக்கு போடுகிற நேரத்தில் விரட்டியடிக்கிறார் அஜீத். அவ்ளோ படிச்ச டாக்டர், ஒரு படிக்காத மேதையை கட்டிக்கொள்ள விரும்புகிறார். பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நிறைவேற… ஒரு சின்ன சோகத்துடன் கதை மும்பைக்கு ஷிப்ட் ஆகிறது. அப்புறம்தான், இந்த கதை இப்படியே போனால் விவேகத்தின் பெருமைக்கு(?) இடைஞ்சலாகிவிடும் என்று உணர்கிறார் சிவா. செகன்ட் ஆஃப் முழுக்க உணர்ச்சிக்குவியல். ஒரு அப்பாவாக அஜீத் நின்று அடித்து விளையாடியிருக்கிறார்.

குறிப்பாக மகள் அனிகாவுக்கு நேர்கிற பிரச்சனையை நொடியில் புரிந்து கொள்ளும் அவர், ஒரு அரணாக நிற்கும் அழகும், அந்த கம்பீரமும் கைதட்டல் மழையை கொட்டுகிறது தியேட்டரில். ஃபைட் காட்சிகள் அதற்குள் முடிந்துவிட்டதா என்கிற ஏக்கத்தையும் தருகிறது அஜீத்தின் மின்னல் தெறிப்பு. ‘அப்பா…’ என்று மகள் அனிகா அழைக்கும்போது ‘என் சாமீ’ என்று அஜீத் நெஞ்சுருகி கரைகிற காட்சியில் கண்கலங்காத உள்ளங்கள் இவ்வுலகில்இருக்க முடியாது எனலாம்.

நயன்தாரா வழக்கம் போல தனது மெச்சூரிடி நடிப்பால் பிரமாதப்படுத்துகிறார். அதுவும் தன் மகளுக்கு முன் இவர்தான் அப்பா என்பது தெரியாமல் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் அந்த கண்கள் ரசிக்க வைக்கிறது.

இவ்விருவருக்கும் இணையாக ஸ்கோர் பண்ணியிருக்கிறார் அனிகா. அந்த விஸ்தாரமான கிரவுண்டில் நிஜமாகவே ஓடிக் களைக்கிறாள் குழந்தை. உணர்ச்சி பீறிட வைக்கும் கதைக்கு பொருத்தமான முகம்.

ஜெகபதி பாபு வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். ஆனால் , அவரது அஜீத் மகள் மீதான கோபம் நியாயமே இல்லாதது என்பது படத்திற்கு பலவீனம்.

தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபுவும் குறிப்பிட்ட இடங்களில் காமெடியால் சிரிக்க வைக்கின்றனர். கோவை சரளா, ரமேஷ் திலக், ரவி அவானா, பரத் ரெட்டி என மற்ற கதாபாத்திரங்களும் தங்கள் பங்களிப்பை நிறைவாக செய்திருக்கின்றனர்.

மொத்தத்தில் விஸ்வாசம் படத்தால் ”சிவா இஸ் பேக் வித் சக்செஸ்”

Petta Movie Review: “பேட்ட” ஒரு வசூல் “வேட்ட”

Petta Tamil Movie Review
Banner Sun Pictures
Cast Rajinikanth, Vijay Sethupathi, Nawazuddin Siddiqui, Sasikumar, Simran, Trisha Krishnan, Megha Akash, Bobby Simha, Y.G. Mahendran
Direction Karthik Subbaraj
Production Sun Pictures
Music Anirudh Ravichander

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், இளமை துள்ளலான தோற்றத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படமே பேட்ட. நண்பன் குடும்பத்தை கொலை செய்தவர்களை தன் உயிரையே பணயம் வைத்து பழிக்கு பழி வாங்கும் நண்பன் கேரக்டரில் நடித்துள்ள ரஜினிகாந்த் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியுள்ளார். இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

மலைப்பிரதேச பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்ற பெரிய இடத்து பிள்ளை பாபி சிம்ஹா. அவர் டேஸ்காலர் என்றாலும் , கல்லூரி ஹாஸ்டலையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு தன் நண்பர்களுடன் ஜுனியர்களை ராகிங் என்ற பெயரில் கொடுமைகளுக்கு உள்ளாக்குகிறார். இந்த கல்லூரியில் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்து முதல் ஆண்டில் சேர்ந்து படிக்கும் இளம் லவ்வர்ஸ் சனத் ரெட்டியும், மேகா ஆகாஷும் கூட பாபியின் ராகிங்கில் சிக்கி வருத்தமான சூழலில் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், அந்த கல்லூரிக்கு, மினிஸ்டர் ரெக்க மென்டேஷனில் வார்டனாக ரஜினிகாந்த் வருகிறார். பாபி சிம்ஹாவின் கொட்டத்தை அடக்கி, அவரை கல்லூரியிலும் சஸ்பென்ட் செய்ய வைத்து, அவரது அப்பா ‘ஆடுகளம்’ நரேனின் கல்லூரி கேன்டீன் மற்றும் ஹாஸ்டல் மெஸ் கான்ட்ரக்ட்டையும் ரத்து செய்து, கல்லூரி ஹாஸ்டலையே தன் கட்டுப்பாட்டில் வைக்கிறார்.

இப்படி, காளி – ரஜினியின் ஆட்டம் ஆரம்பமாக, ரஜினி மீது கோபமாக இருக்கும் பாபியும் அவரது அப்பா ஆடுகளம் நரேனும், சந்தர்ப்பம் வரும் போது ரஜினியை பழிவாங்க எண்ணி ஒரு நாள் ஆட்களை அனுப்புகிறார்கள். அதே நாளில் உத்தரப்பிரதேசத்தில் ஒரு கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் நவாசுதீன் சித்திக்கும் அவரது மகன் விஜய் சேதுபதியும் ஆட்களை அனுப்பி, சனத் ரெட்டியை கொல்ல முயற்சிக்கிறார்கள். அவர்களிடம் இருந்து ரஜினி, பாபி சிம்ஹா அன்ட் கோவினருடன் கைகோர்த்துக் கொண்டு சனத் ரெட்டியை எப்படி காப்பாற்றுகிறார்? தனது மதுரை கோட்டையை பேட்டயை விட்டுவிட்டு வெறும் ஹாஸ்டல் வார்டனாக மினிஸ்டர் சிபாரிசில் வரும் ரஜினி, ஏன் வார்டனாக வந்தார்? அவரது முன்கதை என்ன? சனத் ரெட்டி யார்? நவாசுதீன் சித்திக் ஏன் சனத்தை கொல்ல நினைக்கிறார்? இவர்களுக்கும் ரஜினிக்கும் என்ன சம்பந்தம் …? படத்தில் சசிக்குமாரின் ரோல் என்ன ..? அதன் பின்னணியில் ? நடந்தது என்ன ..? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும் , விறுவிறுப்பாகவும் விடை அளிக்கிறது பேட்ட படத்தின் மீதி கதை.

ரஜினி. படம் முழுக்க பாயும் புலியாக காளியாக, பேட்ட வேலனாக பக்கா மாஸ் காட்டியிருக்கிறார். படத்தில் எந்த இடத்தில், எந்த நேரத்திற்கு, என்ன வேண்டுமோ அதை அழகாக கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். 80களின் ரஜினியை பார்க்க ஆசைப்பட்டோருக்கு இந்த படம் ஒரு தலைவாழை இலை விருந்து எனலாம். மதுரை கிராமத்து கெட்-அப், இளமையான முறுக்கு மீசை தோற்றம், நடுத்தர வயது ஹாஸ்டல் வார்டன் என அசத்தியிருக்கிறார் ரஜினி.

சிம்ரன், திரிஷா இருவருமே ரஜினி ஜோடியாக முதல்முறையாக திரையில் தோன்றினாலும், இருவருமே ரஜினிக்கு சிறந்த ஜோடிதான் என்பதை அழகாக நிரூபித்திருக்கிறார்கள். அதிலும் சிம்ரன் ரொம்ப நாளுக்கு அப்புறம் தன் நடை, உடை, பாவனை மற்றும் நடனத்தில் ரசிகர்களின் இதங்களை ரொம்பவே ஈர்க்கிறார்.

விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக் இருவருமே பழிக்கு பழி வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள். ரஜினியின் இஸ்லாமிய நண்பராக, மதுரைக்காரராக சிறப்பாக நடித்துள்ளார் சசிகுமார். மாளவிகா மோகனனுக்கு படத்தில் முக்கிய கதாபாத்திரம், இவர் படத்தின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார் எனலாம்.

மொத்தத்தில் “பேட்ட” ஒரு வசூல் “வேட்ட” என்றே சொல்லலாம்.

இப்படி ஒரு படம் தான் வேண்டும் என்பது தீவிர ரசிகர்களின் வேண்டுகோள்.