வரும் 31-ம் தேதி முதல் ஏடிஎம்களில் ஒரு நாளைக்கு எவ்வளவு ரூபாய் எடுக்க முடியும்?

ஏடிஎம்-களில் ஒரு நாளைக்கு பணம் எடுக்கும் வரம்பு வரும் அக்டோபர் 31ஆம் தேதி முதல் 20,000 ரூபாயாக குறைக்கப்படும் என  எஸ்பிஐ அறிவித்துள்ளது. தற்போது பாரத ஸ்டேட் வங்கியில் ஒரு நாளைக்கு 40,000 ரூபாய் வரை ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.  எஸ்பிஐ வங்கியின் மேஸ்ட்ரோ மற்றும் கிளாசிக் வகை டெபிட் கார்டுகளில் தினசரி பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு குறைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேஸ்ட்ரோ மற்றும் கிளாசிக் வகை டெபிட் கார்டுகளில் தினசரி பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு 40,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அக்டோபர் 31-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. டெபிட் கார்டுகள் வழியாக தினசரி அதிக பணம் எடுக்க வேண்டும் என நினைப்பவர்கள் எஸ்பிஐ வங்கியின் உயர்வரம்பு கொண்டு டெபிட் கார்டுகளுக்கு மாறவும் வாடிக்கையாளர்களை எஸ்பிஐ கேட்டுக்கொண்டுள்ளது. ஏற்கனவே எஸ்பிஐ வங்கியின் கடுமையான அறிவிப்புகளால் எஸ்பிஐ மீது ஏற்கனவே வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில் எஸ்பிஐயின் புதிய அறிவிப்பு வாடிக்கையாளர்களை மேலும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.