லோனில் வாழ்க்கை ஓட்டுவதில் தமிழகம், மகாராஷ்டிரா ‘டாப்’

தனிநபர்கள் வாங்கும் கடன்களில் 40 சதவீதம் தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகாவில் வாங்கப்படுவதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 20 சதவீதம் மட்டுமே இந்த மாநிலங்களில் உள்ளன.கடந்த ஜூன் நிலவரப்படி மகாராஷ்டிராவில் மட்டும் அதிகபட்சமாக ரூ.5,50,200 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக தமிழகத்தில் ரூ.2,77,400 கோடி, கர்நாடகாவில் ரூ.2,74,900 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் 10 பெரிய மாநிலங்களின் மொத்த தனிநபர் கடன் ரூ.21,27,400 கோடி. 2017 மற்றும் 2018 2ம் காலாண்டில் கடன்கள் 27 சதவீதம் உயர்ந்துள்ளது. இதுபோல் அனைத்து தனிநபர் கடன் வகையிலும் சேர்த்து தனிநபர் கடன் 43 சதவீதமும், கிரெடிட்கார்டு கடன் 42 சதவீதமும் அதிகரித்துள்ளது என கூறப்பட்டுள்ளது என சிபில் தெரிவித்துள்ளது.